ஜி.எம் .டயட் பத்தி கொஞ்சம் சொல்லுங்க தோழிகளே!!

ஜி.எம் .டயட் பத்தி கொஞ்சம் சொல்லுங்க தோழிகளே!! ஏற்கனவே நம்ம தோழி சுகா குடுத்துருந்தாங்க !!அது தான் இது
ஹாய் உமா
இடை குறைப்பதற்கு இந்த முறைய பயன்படுத்தலாமா உங்களுடைய அபிபிராயம் என்ன?
நிறையை குறைக்க ஏழு நாட்கள் போதும்
எடையை குறைப்பதற்கென விற்பனை செய்யப்படும் மாத்திரைகள் மற்றும் செயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இவ்வாறான இயற்கை முறைகள் மூலம் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்கலாம். இந்த ப்ரோகிராம் ஏழு நாட்கள் கொண்டது. பின்பற்றினால் ஒரு வாரத்தில் 3 5 கிலோ எடையை குறைத்துக் கொள்ளலாம். இந்த ஏழு நாட்களிலும் நிச்சயமாக பத்து டம்ளர் நீர் பருக வேண்டும். இதனால் நம் உடலின் அனைத்து மண்டலங்களும் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.
முதல் நாள்
பழ வகைகள் மட்டும்.வாழைப்பழம் தவிர்க்கவும்.அதிக மெலான் வகை சாப்பிட வேண்டும்,உதாரணம் தர்பூசணி. இரண்டாம் நாள்
காய்கறி வகைகள் மட்டும்,காய்களை வேகவைத்தும் சாப்பிடலாம், எண்ணை தேங்காய் தவிர்க்கவும்.காலை உணவுக்கு வேகவைத்த உருளைக்கிழங்கு
ஒன்று.மூன்றாம் நாள்
பழங்களும், காய்கறிகளும். வாழைப்பழம்,உருளைக்கிழங்கு தவிர்க்கவும்
நான்காம் நாள்
வாழைப்பழம் எட்டு, பால் மூன்று டம்ளர்.,
ஒரு மரக்கறி சூப் சாப்பிடலாம்
ஐந்தாம் நாள்
இன்று விருந்து. ஒரு கப் ரைஸ் சாப்பிடலாம், ஆனால் ஆறு தக்காளி சாப்பிடவேண்டும், 12 டம்ளர் நீர் பருகவேண்டும். அன்று நம் உடலின் அனைத்து கழிவு நீரும் வெளியாகிவிடும்.
ஆறாம் நாள்
இன்றும் ஒரு கப் ரைஸ், காய்கறிகள் பச்சையாகவும் அவித்தும் சாப்பிடலாம்.
ஏழாம் நாள்
ஒரு கப் பழ ஜுஸ், காய்கறிகள், ஒரு கப் ரைஸ் சாப்பிடலாம்.
மறுநாள் காலை எடையை பார்த்தால் 3 5 கிலோ குறைந்திருக்கக் காணலாம். எடையை குறைக்க இடைவெளிவிட்டு டயட் செய்ய வேண்டும். ஒரு முறை இந்த டயட்டை செய்தால் குறைந்தது
ஆறு மாதங்கள் கடந்த பின்னர் தான் மீண்டும் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
பின் குறிப்பு:
முக்கியமாக தினமும் பத்து டம்ளர் நீர் பருக வேண்டும், கோப்பி ஒரு கப் வேண்டுமானால் குடிக்கலாம், பழ ஜூஸ் ஏழாம் நாள் மட்டும் சாப்பிடலாம். நாளார்ந்தம் 20 நிமிடம் சாதாரண உடல் பயிற்சி,நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இதனை நடைமுறைப்படுத்தினால் நல்ல பலன் பெறலாம். இது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கடைப்பிடித்தால், எடை கூடுதல், மன அழுத்தம், ஜொயிண்ட் பெயின், இவை நம்மை அண்டாது.
வயதான தோற்றத்தையும் மாற்றிக் கொள்ளலாம்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

இந்த டயட் முறையை கடை பிடித்தால் 1 வாரத்தில் 3 முதல் 5 கிலோ வரை கண்டிப்பாக எடை குறையுமா??சொல்லுங்கள் தோழிகளே ..யாராவது முயற்சி செய்து இருக்கிங்களா??நான் இன்று முதல் ஆரம்பிக்கலாமுனு இருக்கேன் .
முதல் நாளான இன்று மெலன் ப்ரூட்ஸ் மட்டும் எடுத்தால் போதுமா??வேற என்ன செய்யனும் சொல்லுங்க பா..

யாராவது ஜி.எம் டயட் முறையை கடைபிடிச்சங்க இருந்தா வந்து என் சந்தேகத்தை தீர்த்து வைச்சுட்டு போங்க ஃப்ரண்ட்ஸ் !!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஜி.எம் டயட் கண்டிப்பா பலன் அளிக்குமா?எனக்கு தைராய்டு இருக்குறதால உடல் எடை கூடி கொண்டே போகுது..இந்த முறையை கையாண்டு எடையை குறைக்க முடிவு செய்து இருக்கேன்..

இன்று முதல் நாள்!!!!!!!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

இதெல்லாம் 10 நாளில் ஒரு பார்ட்டிக்காக உடம்பை குறைக்கும் வெள்ளைக்காரங்களுக்கு சரி நமக்கு சரிப்படாது..அடுத்த பாத்து நாளில் போன வயிட் திரும்ப ஏறும் கிடந்த பட்டினி வேஸ்ட்..தினசரி பாத்து பாத்து சாப்பிடுவது உடற்பயிற்சி இது தான் கைகொடுக்கும்

ஐயோ, அம்மே...................தளிகா என்ன பா இப்படி திடிர்னு ஒரு குண்ட தூக்கி போட்டுடீங்க.....யோசிக்கவேண்டிய விஷயம் தான் பா...ரொம்ப நன்றி தளிகா பதில் போட்டதற்கு!!!யாரவது பதில் போடுவாங்களானு பாத்துக்கிட்டேஇருந்தேன் பா...ரொம்ப ரொம்ப நன்றி தளிகா!!

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்