பிஸ்தா ஷெல் ஹோல்டர்

தேதி: May 11, 2013

5
Average: 4.3 (24 votes)

 

பிஸ்தா ஷெல்ஸ்
க்ளே
பேப்பர் / அட்டை
ஃபெவி குயிக்
கத்திரிக்கோல்
அக்ரிலிக் கலர்ஸ்

 

க்ளேவை தேய்த்து பேப்பர் அல்லது அட்டை மேல் வைத்து வட்டமாக வெட்டிக்கொள்ளவும். அதன் நடுவே எவ்வளவு இடம் தேவையோ அந்த அளவு வட்டம் வரைந்து மார்க் செய்து கொள்ளவும்.
உள் வட்டத்தை விட்டு சுற்றி பிஸ்தா ஷெல் ஒட்ட துவங்கவும்.
இரண்டு இதழ்களுக்கு நடுவே அடுத்த இதழ் வருவது போல் அடுத்தடுத்த சுற்றுகள் ஒட்டி முடிக்கவும்.
பின் மீதம் உள்ள பேப்பரை வெட்டி முடிக்கவும்.
ஒட்டிய ஷெல் அனைத்திற்கும் விரும்பிய வண்ணம் தீட்டவும்.
அழகான ஹோல்டர் தயார். இதன் நடுவே சுவாமி உருவங்கள், குங்குமச்சிமிழ், கப் கேண்டில் போன்றவை வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

திருமதி வசுமதி அவர்களே ..... மிக மிக அருமையாக உள்ளது. எப்படி உங்களுக்கு இந்த மாதிரி ஐடியா எல்லாம் வருகிறது ? வேண்டாம்னு நாம தூக்கி போடுறதுல எவ்ளோ நன்மை இருக்குன்னு இப்போ புரியுது.
உண்மையை சொல்லணும்னா... நான் ரொம்ப கவலையை இருந்தேன். சும்மா கைவினை ஓபன் பண்ணினேன் , இதை பார்த்தவுடன் மனசு ரொம்ப சந்தோஷமைடுச்சு.... நன்றி ... இதை போல் மேலும் குறிப்புகள் சொல்லுங்கள்.....

wov....,wov....,wov....., its really nice vusmathi, what a brilliant idea. i like so much. keep it up.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

REALLY VERY NICE .LOOKING WONDERFUL.

வாவ் சூப்பர் வசு! அக்கா எட்டடி பாய்ந்தால் தங்கை பதினாறடி பாயணுமே :)

ரொம்ப அழகா இருக்கு. இந்த வாரம் பிஸ்தா வாங்கி பிஸ்தாவை முழுங்கிட்டு ஷெல்லை வச்சு செய்துடறேன் :). ரொம்ப ரொம்ப அழகு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சூப்பர் .. எப்பிடி இப்பிடி எல்லாம் யோசிக்க முடியுது . ரூம் போட்டு யோசிப்பீங்க லோ ? அருமை அருமை .

கலக்கல் குறிப்பு. வசுவுக்கு என் பாராட்டுகளைச் சொல்லிருங்க.

‍- இமா க்றிஸ்

அவ்ளோ அழகு இந்த ஷெல் ஹோல்டர். கண்ணை எடுக்கவே முடியலை. சூப்பர் வசுமதி.
பாராட்டுக்கள். அழகான எளிமையான கைவேலை.

வசு
கொள்ளை அழகா இருக்கு.செந்தாமரை பூ போல மலர்ந்திருக்கு.

supper supper supper

மிகவும் அழகாக இருக்கிறது ஹோல்டர். செந்தாமரையில் பிள்ளையார். அழகோ அழகு.

அன்புடன்
சியாமளா

என் போன்ற சோம்பேறியையே உள்ளே இழுத்துவிட்டது கைவேலைப்பாடு. அருமை. அதைக் கொடுத்தது பொறுமை. வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வனியை மிஞ்சிய வசு :-)

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

வசுமதி அக்கா....
வாவ் சிம்ப்லி சூப்பர்.......ஹொல்டர்
ஆரத்தி தட்டு-களின் நடுவில் வைத்து சுற்றிலும் அலங்கரிக்கலாம்...

கியூட்டா செஞ்சிருக்கீங்க வாழ்த்துக்கள்...

கொள்ளை அழகு.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப அழகா இருக்குக்கா..உங்கள பாராட்டியே ஆகணும்...

don't depend too much on anyone in this world...even your shadow leaves you when you're in darkness..

அழ்கோ அழகு பேரழகு. கலர் பண்ணது பிஸ்தா ஷெல்லுன்னே தெரியல பூ மாதிரியே சூப்பரா இருக்கு

பதிவிட்ட அனைவருக்கும் வசு சார்பில் மனமர்ந்த நன்றிகள் :) எல்லார் பதிவும் பார்த்து வசுக்கு ரொம்ப மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா