அத்திக்காய் கிரேவி

தேதி: May 11, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

சுத்துக்கொழுப்பு - 200 கிராம்
அத்திக்காய் - 150 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
லவங்கம் - 4
உப்பு - தேவைக்கு


 

சுத்துக்கொழுப்பை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
அத்திக்காயை இரண்டாக பிளந்து உள்ளிருக்கும் விதைகளை நீக்கி சுத்தம் செய்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி லவங்கம் போடவும்.
பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
பின் சுத்துக்கொழுப்பு மற்றும் அத்திக்காயை சேர்க்கவும்.
நன்கு கிளறிவிட்டு, தூள் வகைகளை சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் வரும் வரை விடவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் இறக்கி மல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான அத்திக்காய் கிரேவி தயார்.

கொழுப்பு சேர்க்க விரும்பாதவர்கள் வெறும் அத்திக்காயை மட்டும் சமைத்து கொள்ளலாம். முக்கிய குறிப்பு:" அத்திக்காய் குழந்தை இல்லாதவர்கள் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்."


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமா குறிப்பா இருக்கு வாழ்த்துக்கள்