பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?

அன்பு தோழி(ழர்)களுக்கு வணக்கம். நம்ப அறுசுவை பஞ்சாயத்து (பட்டிமன்றம்தேன்) நாட்டாமையாக மீண்டும் நானே வந்துட்டேன் :). அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. வேற வழியே இல்லை :)

நல்லா டிஷ்யூம் டிஷ்யூம் போடற தலைப்பாக இருக்கணுமே அப்பதானே நாரதருக்கு சிண்டு முடியும் வேலை சுலபமாக இருக்கும்னு பட்டிமன்ற தலைப்புகள் இழையில் "நாராயணா நாராயணா" ன்னு சொல்லிக்கிட்டே சுத்தி வந்தால் கரெக்டா சண்டையை பற்றியே ஒரு தலைப்பை நம் தோழி உதிரா கொடுத்திருந்தாங்க. கபால் னு தூக்கிட்டு வந்துட்டேன். நாரதர் மாதிரியே ஈரேழு உலகமும் சுற்றாமல் நேரடியா தலைப்பை சொல்லுன்னு நீங்க சொல்றது கேட்குது. சண்டை போடறதுக்கு என்னா அவசரம். தலைப்பு இதுதான்.....

********** கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா? .*********

வாங்க வாங்க சீக்கிரம் உங்கள் வாதப் பூக்களை அள்ளித் தெளியுங்கள். எடுத்து மாலையாக கோர்க்க காத்திருக்கிறேன்.

பட்டிமன்ற விதிமுறைகளையும் அறுசுவையின் விதிமுறைகளையும் மீறாமல் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என்பதை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,

புதியவர்களுக்காக விதிமுறைகள் இங்கே.....

யாரும் யாரையும் பெயரிட்டு அழைக்கக்கூடாது.

அரசியல் அறவே பேசக்கூடாது.

அரட்டை அறவே கூடாது

ஜாதி,மதம் பற்றி பேசக்கூடாது.

நாகரீக பேச்சு மிகமிக அவசியம்.

அறுசுவையின் எல்லா விதிகளும் இந்த பட்டிக்கும் பொருந்தும்.

பட்டிமன்றம் ஆரம்பிச்சாச்சு... சீக்கிரம் வாங்க... தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்... வாதங்கள் அனல் கிளப்பட்டும்... ஸ்டார்ட் ம்யூசிக்..... :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வணக்கம் :) நல்ல தலைப்பை தேர்வு செய்து சண்டைக்கு அடி போட்டிருக்கும் நடுவரே... வாழ்க. ;) எத்தனை வீட்டில் இதுக்காக சண்டை வருமோ!!!

என்ன நடுவரே டவுட்டு உங்களுக்கு இப்படிலாம் வருது??? பெற்றோரிடம் நல்லதை மட்டுமே கொண்டு போகணும்... பிரெச்சனைகளை அல்ல. அது பிரெச்சனையை அதிகமாக்குமே அன்றி குறைக்காது. ஏதோ அவரிடம் கெட்ட பழக்கம் இருக்கு, அவளிடம் கெட்ட பழக்கம் இருக்கு நம்ம சொன்னா கேட்கலன்னா வீட்டில் உள்ள பெரியவங்களுக்கு பயப்பிடுவாங்கன்னு சொல்லலாம். அதுவும் ஒரு அளவுக்கு மேல் போகும் போது தான். தம்பதிக்குள் வரும் சின்ன சின்ன பிரெச்சனை எல்லாம் கொண்டு போனா அதுவே பெரிய பிரெச்சனையாகி கடைசியில் தம்பதிக்கு நடுவே அவங்க தான் இருப்பாங்க... அன்பும், பாசமும் இருக்காது.

சற்று நேரம் கழித்து வரேன் நடுவரே... காலை நேரம் சம பிசி ;) இப்போதைக்கு அணி சொல்ல வந்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி... நெட் கனக்‌ஷன் பிரெச்சனை

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வேண்டாம்(அணி) தான் நானும்..:)
எந்த ப்ரச்சனையாயிருந்தாலும் ,மத்தவங்களால் பிரச்சனைன்னாலும் கணவன் ,மனைவிக்குள்ள பேசிக்கலாம்..

மேலும் மற்றவர்களிடம் இல்லாத ஆத்மார்த்த பகிரல் தம்பதிக்குள் உண்டுன்றதால அப்படிப்பட்ட உறவில் உள்ள ப்ரச்சனையை பெற்றோராக இருந்தாலும் கொண்டுபோக வேண்டாம்.

தன் மகனை/மகளை மட்டுமே புரிந்தும் தெரிந்தும் வைத்திருக்கும் பெற்றோர்கள் மகன்&மருமகள் /மகள்&மருமகன் என்ற இருவர் சம்பந்தமான ப்ரச்சனையில் உள்ள சிக்கலை நியாயமாய் சரிசெய்வது சாத்தியமில்லை.

அதோடு அது கூடுதல் சிக்கலையும் தம்பதிக்குள் இடைவெளியையும் நெருக்கமின்மையயும் அதிகப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

அதனால கொண்டு போகவே கூடாது:)

நடுவரே..அணிக்கு தேர்வு செய்ய பதிவு.இன்று விரிவான பதிவு போட முடியவில்லை..பிறகு வருகிறேன்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வணக்கம் நடுவர் அவர்களே,ரொம்ப நல்ல இக்காலக் கட்டத்திற்கு ஏற்றத் தலைப்புதான்.பிரச்சனைகளை தீர்க்கத்தெரிந்திரிந்தால் பல திருமணங்கள் கோர்ட்டு வாசற்படி வரை வராது

சின்ன சின்ன பிரச்சனைகளை எல்லாம் சொல்வது தப்பு.அதுபோல்,நம்மால் தீர்க்க முடியாத,பெரிய பிரச்சனைகளை சொல்லாமல் இருப்பதும் தப்பு தான்.பெரியவர்களிடம் சொன்னால்தான் பிரச்சனை தீரும் என்ற பட்சத்தில் அவர்களிடம் சொல்லிதான் ஆக வேண்டும்.

Sangiselva

அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நடுவர் அவர்களுக்கும், அதே அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த எதிரணி, சக அணி மற்றும் பார்வையாள பெருந்தகைகளுக்கும் எனது அன்புகலந்த வணக்கங்கள் _()_.

நடுவரே பிரச்சினையை பெற்றோரிடம் சொல்வதா வேண்டவே வேண்டாம், சொன்னாக்க அதுக்கு ஒரு பிரச்சினை வரதுக்கா?? நோ,நெவர்,வேண்டாம், கூடவே கூடாது.
பதிவு பொறவு வரும் இப்ப சீட்டு பிடிச்சிட்டு போறேன்.
இந்த சீட்டு எனக்குத்தான் உடமாட்டேன்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வணக்கம் நடுவர் அவர்களே,

கணவன் மனைவிக்குள், பெற்றோரே ஆயினும் அவர்களும் அன்னியரே. அதனால், கண்டிப்பாக எந்தப் பிரச்சினைகளையும் பெற்றோரிடம் சொல்லக்கூடாது.

வாங்க வனி!

//நல்ல தலைப்பை தேர்வு செய்து சண்டைக்கு அடி போட்டிருக்கும் நடுவரே//

ஹி ஹி... கலகம் பிறந்தால்தானே தீர்வு கிடைக்கும். குழம்பிய குட்டையில்தானே மீன் பிடிக்க முடியும். பிடிக்கற மீனில் தலை எனக்கு மீதி உங்களுக்கு டீல் ஓகே :)

நீங்க சொல்லப்படாது அணியா. ஏன் சொல்லப்படாதுன்னு பட்டியில் சொல்லலாம்ல :)
//தம்பதிக்குள் வரும் சின்ன சின்ன பிரெச்சனை எல்லாம் கொண்டு போனா அதுவே பெரிய பிரெச்சனையாகி கடைசியில் தம்பதிக்கு நடுவே அவங்க தான் இருப்பாங்க... அன்பும், பாசமும் இருக்காது. //

தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு போனால் அன்பும் பாசமும் காணாம போயிடும்னு சொல்றாங்க. உண்மையா இருக்குமோ... அந்தப்பக்கம் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

விரிவான வாதங்களுடன் வாங்க வனி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க இளா! நீங்களும் சொல்லப்படாது அணிதானா?!

//தன் மகனை/மகளை மட்டுமே புரிந்தும் தெரிந்தும் வைத்திருக்கும் பெற்றோர்கள் மகன்&மருமகள் /மகள்&மருமகன் என்ற இருவர் சம்பந்தமான ப்ரச்சனையில் உள்ள சிக்கலை நியாயமாய் சரிசெய்வது சாத்தியமில்லை.//

பிள்ளைப்பாசம் கண்ணை மறைச்சுடும். நியாயமான தீர்வு கிடைக்காதுங்கறீங்க. நீங்க சொல்றதும் நியாயமாத்தேன் தெரியுது. எதுக்கும் அந்தப்பக்கம் வரவங்க இதுக்கு என்ன பதில் வச்சிருக்காங்கன்னு பார்ப்போம்.

நேரம் அனுமதிக்கும் போது தொடர்ந்து வாங்க இளா. காத்திருக்கிறோம் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க சங்கீசெல்வா! பட்டிமன்றத்துக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

சின்ன சின்ன பிரச்சினையை சொல்லப்படாது. ஆனால் பெரியவர்களிடம் சொன்னால்தான் தீரும் அப்படீங்கற பிரச்சினையை சொல்லாமல் இருப்பதும் தப்புங்கறாங்க.

அச்சச்சோ இப்போ நடுவருக்கு குழப்பமாயிடுச்சே... சொல்லணுமா வேணாமா... இன்னும் விரிவான வாதங்களுடன் வாங்க சங்கீதா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்