ஜெர்மனி தோழிகளே

நான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஜெர்மனிக்கு வந்துள்ளேன். இங்கு எனக்கு ஒன்றும் தெரியவில்லை. யாரும் நம் தோழிகள் இருந்தால் உதவுங்கள் ப்ளீஸ்.

த்ரெட் தலைப்பை மாற்றுங்கள். "ஜெர்மன் தோழிகளே'' என்று போட்டாலும் போதும்.
அப்படியே எதைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

ஹாய் புவனா நான் ஜேர்மனில தான் இருக்கேன். என்ன உதவி தேவை. கேளுங்க. பதில் தாறேன். தாங்க்ஸ் இமா

நீங்கள் ஜெர்மனி ல எங்கு இருக்கிறீர்கள்,உங்களுக்கு என்ன ஹெல்ப் வேனும்? நானும் ஜெர்மனி ல தான் பா இருக்கிரேன்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

thanks imma நான் தற்பொழுது stuutgart வசித்து வருகிறேன். அருகில் நமது இந்திய பொருட்கள் வாங்கும் கடை பற்றியும் குப்பைகளை பிரித்து போடுவது பற்றியும் கூறுங்கள் pls..

ஹாய் புவனா,

நான் ஜேர்மனி சுற்காட்டில் தான் இருக்கின்றேன்.
நீங்கள் சுற்காட்டில் எங்கே இருக்கின்றீர்கள்?
எந்த நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு வந்தீர்கள்?

1)தேவையற்ற போத்தல்களில் பச்சைநிறப் போத்தல்,மஞ்சள்அல்லது பிறவுன் நிறப் போத்தல்,வெள்ளை நிறப் போத்தல் என முதலில் பிரிக்கவும் அதன் பின்னர் அவை ஒவ்வொன்றையும் போடுவதிற்கு என பிரிக்கப்பட்ட போத்தல் போடும் இடத்தை தேடி கொண்டுபோய் போடவும்.

2)குப்பைகளில் காகித(paper)குப்பைகளை தனியாக பிரித்து அதனை போடும் பச்சைநிறகுப்பை போடும் பெட்டியிலும் சாப்பாட்டு குப்பைகளை கறுப்பு நிறப்பெட்டியிலும் பிட்ஸா பெட்டி,பிளாஸ்டி பெட்டிகளை வேறு போத்தல் மூடிகள் பால்பெட்டிகள் போன்றவற்றை மஞ்சள் நிறப்பையில் போட்டு அந்தப்பை நிறைந்த பின் கட்டி அதனை வேறு கறுப்பு பெட்டியில் போடவும் (மஞ்சள் நிறப்பையை வடிவாக விரித்து பார்க்கவும் எவற்றை போடலாம் என்பதை அதில் படத்துடன் விரிவாக போடப்பட்டுள்ளது )

3)தேவையற்ற உடைகள் சப்பாத்துகள் ஆகியவற்றில் மற்றவர்கள் பாவிக்ககூடிய நல்லவற்றை அதற்கு என உள்ள ப்ட்டியில் போடவும் மற்றவற்றை நீலநிறப் பையில் கட்டி அதற்குறிய கறுப்பு பெட்டியில் போடவும் வேறு ஏதாவது தேவைப்பட்டாள் என்னிடம் கேட்கவும்.

இந்திய ஸ்ரீலங்கா உணவுப்பொருட்களை வாங்கும் கடை சுவாப் ஸ்ராஸாவில் உள்ளது.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

("முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் ")

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஹாய் புவனா,

நீங்கள் விரும்பினாள் உங்களுடைய ஈமெயில் அல்லது தொலைபேசி இலக்கத்தை எனக்கு அறியத்தரவும்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

புவனா நீங்க வந்து 1வாரம்தானே. இந்த இடம் நாட்கள் செல்லச்செல்ல உங்களுக்கு பழகிவிடும். பயப்படத்தேவையில்லை. ஜேர்மனியில் இந்தியா மாதிரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கு.(16மாநிலங்கள்) ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொருமாதிரி bin container இருக்கு. உங்களுக்கும் 4 container இருக்கும். அதில் ஜெர்மன் மொழியில் எழுதியிருப்பாங்க.

நீங்க கூகுளில் abfallwirtschaft stuttgart என டைப் செய்தீங்கன்னா
முதலில் வரும்(stuttgart.de/abfall வெப்சைட் ஐ translate this page என்பதை க்ளிக் செய்து, ஆங்கிலதில் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

thank u dhushyanthy.

thanks ammulu. நான் அந்த வெப்சைடில் சென்று பார்கிறேன்.

ஹாய் புவனா,

stuttgart ல் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்? உங்களுடைய தொலைபேசி இலக்கம் என்ன?

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

மேலும் சில பதிவுகள்