காராச் சேவு

தேதி: October 16, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 2 கப் (400 கிராம்)
பச்சரிசி மாவு - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 5 தேக்கரண்டி
காரப் பொடி - ஒரு தேக்கரண்டி
வெள்ளைப்பூண்டு - 4 பல்
மிளகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு


 

முதலில் பூண்டு மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மிளகைப் பொடி செய்துக் கொள்ளவும்.
வெண்ணெய், உப்பு, காரப்பொடி, கடலைமாவு, அரிசிமாவு, அரைத்து வைத்திருக்கும் விழுது, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் காராச் சேவு தேய்க்கும் கரண்டியில் சிறிது மாவை வைத்து நன்றாக அழுத்தி தேய்த்துக் கொள்ளவும்.
மற்றொரு கரண்டியால் சேவை திருப்பி விட்டு நன்றாக சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடிய வைக்கவும். இதே போல் எல்லா மாவையும் பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சந்தியா, காராசேவ் சுவை எல்லாம் நன்றாக இருந்தது. தேய்க்க பூந்திக் கரண்டி கிடைக்கவில்லை. ;-( பிறகு வலைக் கரண்டியில் தேய்த்து டைமன்ட் வடிவில் புழுப்புழு மாதிரி இறக்கி வைத்தேன். ;-D

‍- இமா க்றிஸ்