பூந்தொட்டி மனிதர்கள் (Pot People)

தேதி: May 15, 2013

5
Average: 4.7 (10 votes)

 

20 செ.மீ தொட்டி - ஒன்று
7 செ.மீ தொட்டி & தட்டு (Pot Saucer) - ஒரு செட்
4 செ.மீ தொட்டிகள் - 32
ப்ளாஸ்டிக் முட்டைகள் - 3
க்ராஃப்ட் நைஃப்
கத்தரிக்கோல்
மொத்தமான கம்பி - 50 செ.மீ x 4 துண்டுகள்
ப்ளாஸ்டிக் வளையம் - ஒன்று
நைலான் கயிறு - 50 செ.மீ
ப்ளாஸ்டிக் கரண்டி - ஒன்று
குரடுகள்
ட்ரில்லிங் மெஷின் & பிட்ஸ்
ஹாட் க்ளூ கன்
பெயிண்ட் - கருப்பு & சிவப்பு
ப்ரஷ்
ஊசி
லைட்டர்
பட்டன்கள்:
கைகளுக்கு (பெரியவை) - 2
பாதங்களுக்கு (சிறியவை) - 2
கண்களுக்கு - 2
மூக்கிற்கு - ஒன்று
சிறிய தொட்டிகளுக்கு இடையில் கோர்க்க - 28

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கால்கள் செய்ய: ப்ளாஸ்டிக் முட்டையை சரிபாதியாக வெட்டி வைக்கவும்.
நடுவிற்குச் சற்று மேலே ஓட்டின் ஒடுக்கமான பக்கம் சார்ந்து, ஊசியால் இரண்டு சிறு துளைகள் செய்து கொள்ளவும். ஒரு பட்டனை ஓட்டின் உள்ளே வைத்து ஒரு துண்டு கம்பியை கோர்க்கவும்.
ஓட்டின் மேற்பக்கமாக கம்பியை எடுத்து முறுக்கிக் கொள்ளவும்.
இதன் மேல் ஒரு சிறிய தொட்டியை கவிழ்த்தாற்போல் கோர்க்கவும். தொட்டியின் மேல் இரண்டு சென்டிமீட்டர் தள்ளி பட்டன் ஒன்றைக் கோர்த்து முறுக்கிக் கொள்ளவும்.
இப்படியே தொடர்ந்து ஒரு தொட்டி, ஒரு பட்டன் என்று மாற்றி மாற்றி 10 தொட்டிகள் கோர்த்து வைக்கவும். இரண்டாவது கால் செய்யும்போது ஒவ்வொரு தொட்டியையும் கோர்க்கும்போது ஏற்கனவே கோர்த்து வைத்துள்ள காலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கோர்க்கவும். இல்லாவிட்டால் இரண்டு கால்களும் இரு வேறு நீளத்தில் அமைந்துவிடும்.
கைகள் செய்ய: முட்டையின் ஒடுக்கமான பகுதியில் ஊசியால் எதிரெதிராக இரண்டு துளைகள் செய்துகொண்டு மூன்றாவது கம்பித்துண்டை இதில் நுழைத்துக் கட்டவும்.
தொட்டிகளையும், பட்டன்களையும் கால்களுக்குக் கோர்த்தது போலவே இதற்கும் கோர்க்கவும். இம்முறை குறைவான இடைவெளியில் மொத்தம் ஆறு தொட்டிகள் மட்டும் கோர்க்கவும். இரண்டாவது கையைக் கோர்க்கும்போது நினைவாக இடைக்கிடையே மற்றொரு கையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும்.
பெரிய தொட்டியில் கைகள் வரவேண்டிய இடத்தில் கம்பி நுழையக் கூடிய அளவாக இரண்டு சிறிய துளைகள் ட்ரில் செய்யவும்.
தட்டில் ஒரு பெரிய துளை ட்ரில் செய்து கொள்ளவும்.
நைலான் கயிற்றை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதன் பாதி அளவில் ப்ளாஸ்டிக் வளையத்தை வைத்து இறுகக் கட்டி முடியுமிடத்தை சுடரில் காட்டி உருக்கி ஒட்டிக் கொள்ளவும். கயிற்றின் மடித்த இடத்தை பெரிய தொட்டியின் உள்ளிருந்து நுழைத்து வெளியே இழுக்கவும். மீதி உள்ள ஒரு தொட்டியையும், துளை செய்து வைத்துள்ள தட்டையும் காட்டியுள்ளபடி அடுக்கிக் கோர்த்துக் கொள்ளவும். இழுத்துப் பிடித்துக்கொண்டு இறுக்கமாக ஒரு முடிச்சுப் போடவும். துளையை விட முடிச்சு பெரிதாக இருக்க வேண்டும்.
தயார் செய்துள்ள கைகளை துளைகளில் நுழைத்து உள்ளே ஒரு பெரிய பட்டன் வைத்து கம்பியை இறுக்கமாக முறுக்கி விடவும்.
பொம்மைகளை கூரையில் அல்லது மரத்தில் தொங்க விட விரும்பினால், பாரம் குறைந்த தொட்டிகளைப் பயன்படுத்திச் செய்வது நல்லது. கைகளை இணைக்கும் போது உடலுக்குப் பயன்படுத்தும் தொட்டியில் துளையிடாமல், தொட்டியின் நடுவில் ஏற்கனவே இருக்கும் துளை வழியாக இப்படி பொருத்திக் கொண்டால் சிறிய தொட்டிகள் காற்றில் அசைந்து அடிபடும் பொழுது Wind Chime போல இனிமையான சத்தம் கேட்கும்.
ப்ளாஸ்டிக் கரண்டியில் வாய் வெட்டி வைக்கவும்.
முகத்தில் கண், மூக்கு, வாய் வரவேண்டிய இடங்களைத் தீர்மானித்துக் கொள்ளவும். ஒரே நிறமான இரண்டு அரைக்கோள வடிவ பட்டன்களைத் தெரிந்தெடுத்து பின்புறம் உள்ள வளையத்தை குரட்டால் உடைத்து நீக்கவும். இவ்வாறே மூக்கிற்கு வேறு நிற பட்டன் ஒன்றை தயார் செய்யவும். கருப்பு பெயிண்ட் கொண்டு தொட்டியில் கண்கள் மற்றும் புருவங்களையும், பட்டனில் மூக்குத் துவாரங்களையும் வரைந்து காயவிடவும். பிறகு ஹாட் க்ளூ கொண்டு தயார் செய்துள்ள அனைத்தையும் (கண், மூக்கு, வாய்) சரியான இடங்களில் ஒட்டிக்கொள்ளவும்.
க்ளூ இறுகிய பின்னால், இடது கால் கோர்த்த கம்பியை இடது கையின் உட்பக்கம் உள்ள கம்பியோடும், வலது கால் கோர்த்த கம்பியை வலது கையின் உட்பக்கம் உள்ள கம்பியோடும் சேர்த்து பத்திரமாக முறுக்கிக்கொள்ளவும்.
கைகள், கால்களை சரியான அமைப்புக் கிடைக்குமாறு வளைத்துவிடவும். தலையை விருப்பம் போல் திருப்பி வைக்கலாம். அழகான பூந்தொட்டி மனிதர்கள் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கியூட்டா இருக்காங்க இருவரும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போதானே சிவப்பு பூ பார்த்தேன். அதுக்குள்ள மனிதர்கள் வந்து கமண்ட்டும் வாங்கிட்டாங்களா! ;)

தாங்ஸ் வனி.

‍- இமா க்றிஸ்

ரொம்ப க்யூட்டா இருக்காங்க :-) பூந்தொட்டி ரோபோக்கள் :-)

நட்புடன்
குணா

பூந்தொட்டி மனிதர்கள் அழகா இருக்காங்களே! இமாம்மா இவங்கதான் உங்க தோட்டத்தை கவனிச்சுக்கறாங்களா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமாம்மா இப்பவும் படத்தை பார்த்தவுடன் நீங்கதான்னு கண்டுபிடிச்சிட்டேன்.

இமாம்மா கடவுள் உங்களுக்கு உடம்பு புல்லா மூளையை வச்சிட்டாரோ. இப்படி யோசிக்கிறிங்க. வீட்டுக்கு போய் திருஷ்டி சுத்தி போடுங்க. எங்க கண்ணே பட்டுடும்.

நீங்க செஞ்சத வைப்பதற்கே ஒரு வீடு தேவைப்படும் போல. நீங்க செஞ்சத வைப்பதற்காகவே நிறைய வீடுகள் கட்ட வாழ்த்துக்கள்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் அட்டகாசம் என்ன சொல்றதுன்னே தெரியல. எப்படிலாம் யோசிக்கிறீங்க நீங்க அருமை. அழகா உட்கார்ந்து இருக்காங்க ஏதோ பார்க்ல இருக்கறது போல ஹாயா

இமா, எப்டி இப்டிலாம் யோசிக்கிறிங்க.
ரொம்ப அழகா இருக்கு இமா. வாழ்த்துக்கள்
வேற என்ன சொல்ல வார்த்தையே இல்லை இமா. அவ்வளவு நல்லா இருக்கு.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.

இமாம்மா,

இருவரும் ரொம்ப அழகா இருக்காங்க...முடிஞ்சா பார்சல் பண்ணுங்க...எங்க தோட்டத்துல வச்சிக்குவேன்....

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ரொம்ப அழகா இருக்காங்க :) வாழ்த்துக்கள் ஆன்டி :)

Kalai

Imma & mr. Imma look cute.
Vaany

வாணி... மீ... ஸ்பீச்லெஸ்.. ;)))

‍- இமா க்றிஸ்

//பாட் மனிதர்கள்// நன்றி கலா. தலைப்பு வைக்க கொஞ்சம் யோசிச்சேன். இங்க இருக்கிறவங்க விதம் விதமா சொல்றீங்க. முன்னாலயே கேட்டு இருக்கலாம்.

//ரோபோக்கள்// நன்றி குணாஜி. ;)

//பூந்தோட்ட காவல்காரர்கள்// நல்லா இருக்கே.
//இவங்கதான் உங்க தோட்டத்தை கவனிச்சுக்கறாங்களா // ஆமாம் கவீஸ். :)

தாமரை... //இமாம்மா இப்பவும் படத்தை பார்த்தவுடன் நீங்கதான்னு கண்டுபிடிச்சிட்டேன்.// அது நான் இல்ல.... ;)
//வீட்டுக்கு போய்// வீட்டுலதான் இருக்கிறேன். //திருஷ்டி சுத்தி// வழக்கம் இல்லைங்க. நீங்க நல்லவங்க. உங்க கண் பட்டு எனக்கு நல்லது மட்டும்தான் ஆகும். ;) //நீங்க செஞ்சத வைப்பதற்காக// அனேகம் கிஃப்ட்டா கொடுத்துருவேன். இது எனக்கு என்று ஆசையா செய்தது. அதனால் தோட்டத்தில் இருக்கும்.

ஹாய் தேவி, //பார்க்ல இருக்கறது போல ஹாயா// :-) அவங்களுக்கு என்ன! சமைக்கணுமா? வேலைக்கு போகணுமா? ஒரு வேலையும் இல்லையே. ;) ஹாயா இருக்காங்க. கருத்துக்கு நன்றி.

ராஜி, //பார்சல் பண்ணுங்க.// ஆன்லைன் பிஸ்னஸ் பண்ணலாமா என்று யோசிக்கிறேன். ;)

சஹானாவுக்கும் என் அன்பு நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

அங்கு பார்த்து இங்க வந்தால் காணல.நேற்றே படம் ரிலீஸா. சூப்பர் இமா
ஹீரோ,ஹீரோயின் நல்லா இருக்காங்க.ஆனா நிறைய ஆட்கள் வேணும் போல.லிஸ்ட் பெரீரீரீசா இருக்கு. grüß dich.

மிகவும் அருமையாக இருக்கிறது imma... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மிக்க நன்றி ஃபரீதா.

அம்முலு... ;) இங்க வந்ததன் பின்னால்தான் அங்கு. //லிஸ்ட் பெரீரீரீசா இருக்கு.// ம். என்ன செயுறது!

‍- இமா க்றிஸ்

you are always welcome immu....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

;)))))

‍- இமா க்றிஸ்

நல்ல இருகிங்களா?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஹாய் இமா
நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. ரொம்ப அழகுங்க.உங்களுக்கு இணை நீங்களே தான்.
இந்த மாதிரி தொட்டியெல்லாம் எங்கேயிருந்து சேகரிக்கிறீங்க? வாழ்த்துக்கள் இமா

கருத்துக்கு நன்றி நிகி. கார்டன் ஷாப்ல இல்லாட்டா... மண்பானை விற்கும் இடத்தில் வாங்கலாம். கொஞ்சம் மினக்கெட்டு அளவு பொருத்தம் பார்த்து வாங்கணும்.

சிறிய தொட்டிகள் க்ராஃப்ட் சப்ளைஸ்ல கிடைக்கிறது பாரமில்லாததாக இருக்கும். பெட் ஷாப்ல (மீன்தொட்டிகளுக்காக) விற்கிறது கொஞ்சம் விலை அதிகம்; பாரமானதாக இருக்கும்.
குட்டி பாட்ல 'குல்ஃபி' வருது என்று கேள்விப்பட்டேன். மெதுவாக சேகரிக்கலாம்.
~~~~~~~~~~
நலம் ஃபரீதா. விசாரிப்புக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்