திருமலை செல்ல வேண்டும். உதவுங்கள் plzzzzzzzz. . .

தோழிகளே திருப்பதி சென்று வர ஆவல். ஆனால் நான் ஒரே முறை சிறு வயதில் போயிருக்கிறேன் அவ்வளவு தான். இப்போ தெரியாத மாநிலத்தில், மொழி புரியாமல், இடம் தெரியாமல் எப்படி போவது? தி.நகரில் டிக்கட், ரூம் புக் பண்ணலாமா? இதை எந்த FORUM ல் கேட்பது என்றே எனக்கு தெரியவில்லை. தரிசணம் சீக்கிரம் கிடைக்க வேண்டும், ரூம் கிடைக்காமல் தவிக்க கூடாது. எவ்வளவு செலவாகும்? பஸ் டிக்கட் எவ்வளவு? ஒன்றுமே தொரியாது. உதவுங்களேன். . . . அடுத்த மாதம் போக plan செய்துள்ளோம்.

Anbu thozikku,
Thangal Thirumalai senru Kadavul arulpera ennoda vaalthukkal. Neengal yaaridamum Vazli kettu Kuzamba vendam. Mozi oru prachanai illai angu ullavargalukku tamil nanraga theriyum.koyambedu bus nilayatthilirunthu thiruppathikku niraiyya vandi irukku. Thangalaal nadai paathai valiyaga sella mudinthal appadi sellavum,appadi poonal erandu mani neratthil tharisanam paarkalam. nadanthu sella minimum moonru mani neram pidikkum.

நடந்தா? நிக்கவே என்னால முடியாது பா. வீஸிங் இருக்கு. 300ரூபாய் விரைவு தரிசனத்தில் போவதாக முடிவு. ஆனா நேரா அங்கயே போய் டிக்கெட் மற்றும் ரூம் புக் செய்ய முடியுமா? இல்லை தி.நகர் சின்ன திருப்பதியில் புக் செய்தால் நல்லதா? அங்க போய் அவஸ்தபடக்கூடாதுல்ல அதான் கேக்குறன். அடுத்த மாசம் ஸ்கூல் திறந்திடும் கூட்டம் குறையும் அதான் டவுட்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

பயப்படவே தேவை இல்ல பா.

1. மொழி பிரச்சனை லா ஒன்னுமே இல்ல அங்க, 90% தமிழ் பேசறாங்க.

2. தரிசனம் டிக்கட் 50 Rs சுதர்சனம் டிக்கட் ஆன்லைன் ல பண்ணலாம். இந்த லின்க் அ பாருங்க பா.http://www.ttdsevaonline.com/ 300 சீக்கிர தரிசனம் டிக்கட் வேனும்னா தி.நகர் கோயிலுக்கு போகனும். எத்தன பேரு போக போறிங்களோ எல்லாரும் நேரில போகனும். தரிசனம், ரூம் ரெண்டுமே புக் பண்ணிக்கலாம். நான் போன வரைக்கும் இலவச தரிசனத்துக்கு 10-12 hrs. 50 டிக்கட் கு 1.5-3 hrs. ஆச்சு. திருப்பதில இருந்து திருமலைக்கு நடந்து போனால், கொடுக்கற டிக்கட் ல 1.5 hrs ஆச்சு.

3. ரூம் திருமலை கவுண்டர் ல 50 - 2000 வரைக்கும், ஆன்லைன் ல 100 - 2000 வரைக்கும் இருக்கும். 50 ரூம் கூட ரொம்ப நல்ல இருக்கும் பா.

4. பஸ் டிக்கட் & ட்ரைன் டிக்கட் ரொம்ப கம்மியா தான் இருக்கும். சென்னை. பெங்களூர் ல இருந்து பக்கம் தான். நெறைய பஸ் இருக்கு பா.

5. திருமலை ல எங்க பாத்தாலும் கூட்டமா தான் இருக்கும் பா. எல்லமே புக் பண்ணிக்கிட்ட ரொம்ப நல்லது.

நல்ல படியா போயிட்டு வாங்க. நாங்களும் போக ப்ளான் பண்ணிட்டு இருக்கோம்.

ரொம்ப நன்றி காயத்ரி.
நீங்க தந்த தகவல்கள் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். நன்றி.

அஸ்வினிக்கும் நன்றி பா.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்