கால் பாதம் அரிக்கிறது...எதனால்?

தோழிகளே எனது கால் பாதங்கள் இரண்டும் அரிக்கிறது....அது எதனால்?தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.உள்ளங்கை அரித்தால் வரவு,செலவு என்று ஒவ்வொரு கைக்கும் சொல்வார்கள்?(வலது,இடது)...கால் பாதம் எனக்கு தெரியவில்லை....அதான் உங்களிடம் கேட்கிறேன்...

சமீபத்தில் காலணிகள் எதுவும் மாற்றினீர்களா?? இல்லை புதிய காலணிகளா?? தோலில் வெளிப்படையான மாற்றம் இருந்தால் மருத்துவரைப் பாருங்கள்.

ஆமாம் வாணி.ஆனால் காலணி மாற்றி 2 1/2 மாதங்கள் ஆகிறது.ஆனால் இப்போ தான் கால் பாதம் அரிக்கிறது.ஒரு 10 நாள் முன்பு இருந்தது...அப்புறம் இல்லை.பின்னர் ஒரு நாள் ...அப்புறம் இன்று தான்...கால் பாதம் டிரையாக வெள்ளை நிறத்தில் உள்ளது.இது எதனால் இருக்கும் வாணி...தேங்க்ஸ் பா எனக்கு பதில் கொடுத்ததற்கு..

Expectation lead to Disappointment

காலணி பிரச்சினையாக இல்லையென்றால், தோல்வரட்சியாக இருக்கலாம். மாய்ஸ்சரைசர் யூஸ் பண்ணிப் பாருங்க. கொஞ்ச நாளைக்கு பாதணிகள் இல்லாமல் வெளியே இறங்க வேண்டாம். சூடான தரை, மணல் தரை, கார்பட் தரை, காலுறைகள் எல்லாம் கூட இன்னும் அதிகம் வரண்டு போக வைக்கும். சீக்கிரம் சரியாகிரும்.

தொடர்ந்து இருக்குமானால், ஏதாவது கிருமித் தொற்றாக இருக்கலாம். முடியும் போது தேநீர்ச் சாயத்தில் கால்களை வைத்திருங்கள். (வேறு வீட்டுவைத்தியங்களும் இருக்கும்.) அனேகம் சரியாகும். மாறாமல் இருந்தால் அல்லது தொந்தரவாக இருந்தால் டாக்டரிடம் காட்டி கேளுங்கள்.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா...நீங்கள் சொன்னதை முயற்சித்து பார்க்கிறேன்...//தேநீர்ச் சாயத்தில் கால்களை வைத்திருங்கள்.//இதை எப்படி செய்வது என்று சொன்னால் உதவியாக இருக்கும்.தேங்காய் எண்ணெய் தேய்க்கலாமா?

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்