முறையற்ற மாதவிடாய் -மருந்து

அன்புத் தோழிகளே, என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனக்கு ஆலோசனை கூறுங்கள். எனக்கு கடைசியாக மார்ச் 21 -ம் தேதி பீரியடு ஆனது. இன்றோடு 65 நாள் ஆகிவிட்டது. இன்றும் நான் ப்ரெக்னென்சி டெஸ்டு எடுத்த போது நெகட்டிவ் என வந்தது. பிளீஸ் இந்த Irregular Periods ஐ எப்படி சரி செய்வது. நான் குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தால் கூறுங்கள் பிளீஸ். ரொம்ப மன உளைச்சலில் உள்ளேன். எனக்கு சரியான ஆலோசனை கூறுங்கள் சகோதரிகளே

உங்க அங்கலாய்ப்பு எனக்கு புரியுது,குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கும் நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப் படியே மருந்துகளை உட் கொள்ளுங்கள்,
மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

என் தோழிக்கு இரண்டாவது குழந்தை தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது,சிறிது டென்ஷன் ஆனாலும் பீரியட் வந்து விடும்,பின் குழந்தைக்காக காத்திருக்கிறோம் என்கிற கவலையை விட்டு விட்டாள்.அதற்க்கு பின் தான் பீரியட் ரெகுலராகி கன்சீவ் ஆனாள்.
நான் எதற்க்கு இதை குறிப்பிடுகிறேன் என்றால் மன அழுத்தமும்(Stress) குழந்தை உண்டாவதை தாமதப் படுத்துவதற்க்கு ஒரு காரணமாகி விடுகிறது
இர்ரெகுலர் பீரியட் என்பது இப்பொழுது மிக பரவலாக நிறைய பெண்களுக்கு உள்ளது ,அதற்க்கு என்று மாத்திரைகளை டாக்டர்கள் கொடுத்து ரெகுலராக்கி விடுகிறார்கள்.ஆகவே மருத்துவரைப் பார்ப்பது தான் சிறந்தது.

மேலும் சில பதிவுகள்