பேப்பர் தாமரை

தேதி: May 27, 2013

5
Average: 4.3 (10 votes)

A4 அளவு காகிதங்கள் - இளம் பச்சை, அடர் பச்சை, பிங்க், இளம் ஊதா (அ) விரும்பிய நிறங்களில்

ஒரு A4 அளவு பேப்பரை 32 துண்டுகளாக்கி http://www.arusuvai.com/tamil/node/15022 இந்த லிங்கில் உள்ளது போல முக்கோணங்களை மடித்துக் கொள்ளவும். (இதில் இளம்பச்சை நிறத்தில் 144 முக்கோணங்களும், அடர்பச்சை நிறத்தில் 192 முக்கோணங்களும், 42 இளம் ஊதா நிற முக்கோணங்களும், 96 பிங்க் நிற முக்கோணங்களும் பயன்படுத்தியுள்ளேன்).
படத்தில் உள்ளது போல மூன்று இளம்பச்சை முக்கோணங்களை இணைக்கவும்.
அடுத்த வரிசையில் நடுவில் ஒரு அடர்பச்சை முக்கோணமும், இரு ஓரமும் இளம்பச்சை முக்கோணங்களையும் இணைக்கவும். அதற்கடுத்து நடுவில் 2 அடர்பச்சை முக்கோணங்களும், இரு ஓரமும் இளம்பச்சை முக்கோணங்களையும் இணைக்கவும்.
இதேபோல தொடர்ந்து நடுவில் 5 அடர்பச்சை முக்கோணங்கள் வரும் வரை இணைத்து, பின் 4, 3, 2, 1 என குறைத்து கடைசியில் ஒரு இளம்பச்சை முக்கோணத்தை இணைத்து முடிக்கவும். படத்தில் உள்ளது போல டைமண்ட் வடிவத்தில் கிடைக்கும். இதே போல 6 டைமண்ட் வடிவங்கள் செய்து கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல இரண்டு டைமண்ட் வடிவங்களின் ஓரத்திலிருக்கும் இளம்பச்சை முக்கோணத்தினுள் அடர்பச்சை முக்கோணங்களை நுழைத்து இரண்டு டைமண்ட் வடிவங்களையும் இணைக்கவும்.
அதனுடன் மீதமுள்ள 4 டைமண்டுகளையும் தொடர்ச்சியாக இணைக்கவும். எல்லா டைமண்டுகளையும் உட்புறமாக வளைத்து விட்டால் படத்தில் உள்ளது போல வடிவம் கிடைக்கும். இது தாமரை மலரின் இலைப்பகுதி.
அடுத்து பூ செய்ய பிங்க் நிற முக்கோணங்களை 1,2,3,2,1 என்ற வரிசையில் படத்தில் உள்ளது போல இணைக்கவும். சிறிய டைமண்ட் வடிவம் கிடைக்கும். இதே போல மொத்தம் 6 டைமண்டுகள் செய்து வைக்கவும்.
இரண்டு பிங்க் டைமண்டுகளை, இளம் ஊதா முக்கோணத்தினால் இணைக்கவும்.
படத்தில் காட்டியுள்ளது போல இளம் ஊதா முக்கோணங்களை தொடர்ச்சியாக இணைக்கவும்.
மீதமுள்ள பிங்க் நிற டைமண்டுகளையும் இதே போல இணைத்தால் படத்தில் உள்ளது போல பூ கிடைக்கும்.
இளம் ஊதா நிறத்தின் ஓரத்தில் மேலும் ஒரு வரிசை பிங்க் முக்கோணங்களை இணைக்கவும். எல்லா இதழ்களையும் சேர்த்து கைகளால் இறுக்கினால் படத்தில் உள்ளது போல குவிந்து வரும்.
செய்த பூ வடிவத்தை தலை கீழாக தாமரையின் இலைப்பகுதியின் நடுவில் வைத்தால் அழகான தாமரை மலர் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்

Comments

கவி பேப்பர் தாமரை சூப்பர். கடைசிப்படம் அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.

சுப்பர்ப் கவீஸ்.

‍- இமா க்றிஸ்

பேப்பர் தாமரை ரொம்ப அழகுங், :-)

நட்புடன்
குணா

rompa supera irukku pepar lotus.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

படைப்புகளை வெளியிட்டு ஊக்குவிக்கும் டீம் க்கு நன்றி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வினோ! எப்படி இருக்கீங்க? எப்ப வரீங்க எப்ப போறீங்கன்னே தெரிய மாட்டேங்குது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி இமாம்மா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி குணா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சத்யா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

thankslam vendam sister unga anbu iruntha athuve pothum enakku tamila type panna teriala

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

கவி பேப்பர் தாமரை அழகோ அழகு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப அழகா இருக்கு கவி.
இந்த தாமரை ....இந்த தாமரைக்கு கிடைக்குமா?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

unga padaippugal innum thodarattum

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

அழகான தாமரை அப்படியே குளத்தில் நீந்தவிடலாம் போல் உள்ளது,வாழ்த்துக்கள் கவிசிவா மேடம்

Eat healthy

மிகவும் அருமையாக இருக்கிறது பாராட்ட வார்த்தைகளே இல்லை

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

சூப்பர் கவி .ஆனாலும் கொஞ்சம் நிறைய பொறுமை வேணுமோ?

நன்றி அருள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி தாமரை! தாமரைக்கு இல்லாத தாமரையா.. எடுத்துக்கோங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி ரசியா! இந்த தாமரையை அடியில் ரப்பர் ஷீட் வச்சுதான் குளத்தில் நீந்த விடணும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி ஃபரீதா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி நிகிலா! பொறுமை ரொம்ப எல்லாம் வேணாம். கொஞ்சமே கொஞ்சம் போதும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

attakasamairuku.ilikeit.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு