உதவி தேவை

ஹலோ தோழிகளே

நான் இப்பொழுது 7 மாத கர்பிணியாக உள்ளேன் நான் வேலைக்கு செல்லும் பெண் அடுத்த மாதத்தில் இருந்து நான் வேலைக்கு செல்ல மாட்டேன் delivery க்கு எனக்கு 6 மதம் தான் leave தருவார்கள். குழந்தை பிறந்த 3 அல்லது 4 மாதங்களில் நான் வேலைக்கு வந்தாக வேண்டும். எனக்கு அம்மா இல்லை. நான் வேலை செய்யும் இடத்திற்கும் என் வீட்டிற்கும் 17 km இடைவெளி. குழந்தை பிறந்த 4 மாதங்களில் நான் வேலைக்கு வர வேண்டிய சூழ்நிலை. நான் குழந்தையை எப்படி பார்த்து கொள்வது. அதற்கு எப்படி பாலூட்டுவது என்று எனக்கு கவலையாக உள்ளது. நான் வேலைக்கு வந்தால் தான் என் குடும்பத்தை ஓர் அளவிற்கு நடத்த முடியும் என கணவருக்கு சம்பளம் குறைவு. குழந்தையை பார்க்க எனக்கு யோசனை தாருங்கள்

உங்கள் வீடு வாடகை வீடாக இருந்தால். உங்கள் அலுவலகத்தின் அருகில் வேறு வீடு பார்த்துக் கொள்ளுங்கள்.

சொந்த வீடாக இருந்தாலும் இந்த முயற்சி செய்ய முடியுமா என்று பாருங்கள்.

9 மாதம் வரை உங்களால் முடிந்தால் வேலை பாருங்கள் . டெலிவரிக்கு பிறகு 5மாதங்கள் விடுமுறை கிடைக்கும். வேறு எதாவது விடுமுறை இருந்தாலும் சேர்த்து எடுத்து கொள்ளுங்கள் . பின் குழந்தைக்கு புட்டி பால் கொடுத்து பழக்கி விடுங்கள்

அலுவலகத்தின் பக்கத்திலேயே கிரெச் இருக்கிறதா என்று விசரியுங்கள். மதியம் பால் கொடுத்து வர சவுகரியமாக இருக்கும்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

all the best. முடிந்தவரை டெலிவரி வரைக்கும் வேளைக்கு போக முடயும்னா போங்க. குழந்தைக்கு குறைந்தது 6மாதம் வரை தாய்பால் மட்டும் கொடுங்கள் . அது மட்டுமே ஆரோக்யமானது. கேரளாவில் 2 வருடம் வரை கொடுப்பார்கள். குழந்தையின் அறிவு வளரும் என்கிறார்கள். தோழி கூறியது போல வீடு சொந்த வீடாக இருந்தால் அதனை வாடகைக்கு விட்டு விடுங்கள் அந்த பணம் உதவியாக இருக்கும் . அதை விட குறைந்த வாடகைக்கு வீடு எடுங்கள். முடிந்தவரை அனைத்து விடுமுறையும் எடுங்கள் .வாழ்த்துகள்

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

ஹாய் தாமரை

நீங்கள் சொன்ன யோசனை நன்றாக இருக்கிறது ஆனால் நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு வந்து 3 மாதங்கள் தான் ஆகிறது இந்த வீடு கிடைக்க ரொம்பவும் கஷ்ட்ட பட்டோம். புட்டி பால் 4 மாதங்களில் கொடுக்கலாமா என்ன பால் கொடுப்பது

டாக்டரே பரிந்துரைப்பார்கள் .
பசுவின் பால் மட்டும் வேண்டாம். 9மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நான் இந்த மாதத்தில் இருந்து வேலையில் இருந்து நிற்கலாம் என்று இருகிறேன் எனக்கு அம்மா இல்லை. என் மாமியாரும் பண பிரச்சனைக்காக எங்களிடம் தற்பொழுது பேசுவது இல்லை நாங்களே வலிய சென்று பேசினாலும் எங்களை கேவலமாக திட்டுகிறார்கள். இப்பொழுது எனக்கு என்ன பிரச்னை என்றால் குழந்தை பிறக்கும் சமயத்தில் எப்படி மருத்துவமனையில் தனியாக இருப்பது எப்படி என்னையும் என் குழந்தையும் பார்த்து கொள்வது என்று எனக்கு கவலையாக உள்ளது. எனக்கு உதவுங்கள் தோழிகளே

கவலைபடாதீர்கள் சங்கீதா நிச்சயம் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் உங்கள் கணவர் இருக்கிறாரே அவர் உங்களை பார்த்துக் கொள்வார் நம் தோழிகள் வேறு யோசனைகளும் சொல்வார்கள் சங்கீ சந்தோஷமாக இருங்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

யாராவது பதில் போடுங்களேன் ப்ளீஸ்

சங்கீதா இப்போ உங்களுக்கு 8 மாசமா

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

சங்கீதா கலப்டாதிங்க உங்க மாமியார் பேரகுழந்தையை பார்த்ததும் இரைவன் அருளால் மனசுமாறி வருவாங்க இல்லேன்னாலும் அப்ப ஏதோ ஒரு வழிபிரக்கும் கவலபடாதிங்க.இந்த நேரத்துல நீங்க நிம்மதியாயிருக்கனும்.நீங்க எங்கயிருக்கிங்கனு சொல்லுங்க.

hai nisha நான் ஊட்டி-ல இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க

மேலும் சில பதிவுகள்