மினியேச்சர் பெட்ரூம் ஃபர்னிச்சர்ஸ்

தேதி: May 29, 2013

5
Average: 4.8 (22 votes)

 

ஸ்க்ராப் புக் / டிசைனர் பேப்பர்ஸ்
பல வண்ணங்களில் மணிகள்
பட்டன்ஸ் - 6
தீப்பெட்டி - 6
டூத் பிக் - 2
கத்தரிக்கோல்
மஃபின் மோல்ட் (சிறியது) - 2
மெல்லிய அட்டை
சிறிய சாக்லேட் பாக்ஸ் - ஒன்று
வாட்டர் பாட்டில் மூடி (சிறியது) - 3
தீக்குச்சி - 16
க்ளூ

 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். சைடு டேபிள் செய்வதற்கு தீப்பெட்டியின் உள்ளே இருக்கும் பெட்டியை கவிழ்த்து அதன் நான்கு மூலைகளிலும் க்ளூ தடவி 4 தீக்குச்சிகளை ஒட்டிவிடவும். இதேபோல் இரண்டு டேபிள்கள் செய்து கொள்ளவும். மினி சைடு டேபிள் தயார். ட்ரா டேபிள் செய்வதற்கு மீதமுள்ள தீப்பெட்டிகளை படத்தில் உள்ளது போல் அடுக்கி ஒட்டிவிடவும்.
சைடு டேபிள்களின் மேல் டிசைனர் பேப்பர் ஒட்டி காயவிடவும்.
ட்ரா டேபிளுக்காக ஒட்டிவைத்துள்ள தீப்பெட்டிகளின் மேல் டிசைனர் பேப்பரை ஒட்டிவிடவும். அதன் நான்கு மூலைகளிலும் இரண்டிரண்டு தீக்குச்சிகளை ஒட்டி காயவிடவும். பிறகு சைடு டேபிள் மற்றும் ட்ரா டேபிளில் பட்டன்ஸ் ஒட்டி அலங்கரிக்கவும்.
பாட்டில் மூடிகளின் மேல் மணிகளை ஒன்றன்மேல் ஒன்றாக ஒட்டவும். அதன் மேல் மஃபின் மோல்டை கவிழ்த்து ஒட்டவும். டேபிள் லாம்ப் தயார். இதேபோல மொத்தம் இரண்டு செய்து வைக்கவும்.
சாக்லேட் பாக்ஸின் மேல் வெள்ளை பேப்பரை சுற்றி ஒட்டி பெட் தயார் செய்யவும்.
பெட்டின் ஹெட்போர்டு, ஃபுட் போர்டிற்கு படத்தில் உள்ளது போல் இரண்டு வடிவங்களில் மெல்லிய அட்டையை வெட்டி, அதன்மேல் டிசைனர் பேப்பர் சுற்றி ஒட்டிவைக்கவும்.
ஹெட்போர்டு, ஃபுட் போர்டை செய்து வைத்துள்ள பெட்டில் ஒட்டிவைக்கவும். ஒரு துண்டு பேப்பரை பெட்டின் மேல் விரித்தாற்போல் போட்டு ஒட்டவும். டிஷ்யூ பேப்பரை சிறிதாக மடித்து அதன்மேல் டிசைனர் பேப்பரை சுற்றி ஒட்டி பில்லோ தயார் செய்யவும்..
டூத் பிக்கின் முனையில் மணிகளை நுழைத்து, அதை பெட்டின் ஹெட்போர்டின் இருபக்கங்களிலும் ஒட்டிவிடவும்.
சிறிய மூடியில், ப்ளாஸ்டிக் இலைகளை ஒட்டி, அதை ட்ரா டேபிளின் மேல் வைத்து ஒட்டவும். அழகான மினியேச்சர் பெட்ரூம் ஃபர்னிச்சர்ஸ் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் ரொம்ப அழகா இருக்கு கலா! இந்த ஐடியாஸ் நோட் பண்ணி வச்சுக்கறேன். கொலுவில் விதம் விதமா செய்து வைக்கலாமே அதுக்குத்தான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சூப்பர் ..........சூப்பர் .............. ரொம்ப ரொம்ப சூப்பர் .................ர்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மிகவும் அருமை வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மினியேச்சர் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. கலர் காமினேஷனும் சூப்பர். வாழ்த்துக்கள்.

ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு க்யூட் கலா அந்த கலர் தான் ஹைலைட். வாழ்த்துக்கள்

அசத்தலாக செய்து இருக்கீங்க,ரொம்ப சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அட்டகாசமா இருக்கு....வாழ்த்துக்கள்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

அட்டகாசமா இருக்கு....வாழ்த்துக்கள்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

ரொம்ப ரொம்ப ரொம்...ப க்யூட்டா இருக்கு கலா.

‍- இமா க்றிஸ்

wow...excellent....fantastic....it's really cute...color combination superb....hats off to your creativity kalai.....give more works....congrats....

Expectation lead to Disappointment

கலை அழகா இருக்கு :)
நுணுக்கமான விஷயங்கள் கலைக்கு வெகு எளிது போல இருக்கு..
இது போல் பல படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என்னவென்று சொல்வதம்மா,,,
உன்மூளை கற்பனையை......:-)
செய்திகள் வரை பொறுத்திருக்க முடியலை அதான் ஒரு லைக்போட்டுட்டு நிதானமா செய்தியில் விவரிக்கிறேன்.....ரொம்ப ரொம்ப அருமைப்பா....சூப்பர்ப்சொல்லவார்த்தை கிடைக்கலை......

கலா அவர்களே உங்க ரூம் செட்டை என் வீட்டிற்கு டோர் டெலிவெரி பன்றீங்களா?ரொம்ப க்யூட் செட்,இதற்கு யூஸ் பன்ன பொருள்கள் எல்லாமே வீட்டில் இருப்பவையே,அதிலும் அந்த டேபிள் லேம்ப் & பெட் ஷீட் ரியலி க்யூட்,congrats

Eat healthy

வணக்கம் & வாழ்த்துகள். நுணுக்கமான வேலைப்பாடு அருமையாக இருக்கிறது. மினியேச்சர் பெட்ரூம் ஃபர்னிச்சர்ஸ் சூப்பரோ....... சூப்பர். கலா அக்காக்கு எல்லோரும் ஒரு ஓ போடுங்கப்பா. ஓ.............ஓ

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

குறிப்பை வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் :)

Kalai

மிக்க நன்றி கவி..நோட் பண்ணி,செய்து,கொலுவில் வைத்து படம் எடுத்து அனுப்பனும்..சரியா ;)

Kalai

மிக்க நன்றி தாமரை :)

Kalai

மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றிங்க :)

Kalai

மிக்க நன்றி உமா :)

Kalai

மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றிங்க :)

Kalai

மிக்க நன்றி ;)

Kalai

ரொம்ப நன்றி மீனா :)

Kalai

மிக்க நன்றி அருள் :)

Kalai

செய்தி மட்டும் தான் வாசிப்பீங்கனு நினைச்சா,பாட்டெலாம் தூள் பறக்குது. மிக்க நன்றி ரேணு :)

Kalai

உங்களுக்கு இல்லாததா..அனுப்பிட்டேன்..கிடைச்சதும் சொல்லுங்க. மிக்க நன்றி :)

Kalai

மிக்க நன்றி சங்கீதனா :) ஓ போட்டது நல்லாவே கேட்குது .அதுக்கும் நன்றிகள் :)

Kalai

super

பிங்க் கலர்ல அட்டகாசமா செய்து இருக்கீங்க கலை. குட்டீசுக்கு ரொம்பவே பிடிக்கும். வாழ்த்துக்கள்

மிக்க நன்றிங்க, இவ்வளவு அழகான கைவினையை அளித்ததுக்கு,
வாழ்த்துக்கள்ங்க :-)

நட்புடன்
குணா

ரொம்ப கியூட். அழகான கலரும் கூட. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா