சீடி கோஸ்டர் செட் & அலங்காரக் கூடை

தேதி: May 31, 2013

5
Average: 4.5 (16 votes)

 

சீடி - 12
சைடு ப்ளேட் (Side Plate) - ஒன்று
மெல்லிய துணி - அரை மீட்டர்
பொருத்தமான நிற நூல் & தையலூசி
அயர்ன் பாக்ஸ்
கத்தரிக்கோல்
பேனா
துணி காயப் போடும் பெக்ஸ்
குண்டூசிகள்
உயரமான ஜாடி/ஜார் - ஒன்று

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சீடியை விட சுற்றளவில் 2 மடங்கு பெரிய ப்ளேட்டை அளவாக வைத்து துணியில் வட்டம் வரைந்து கொள்ளவும்.
இப்படி 12 வட்டங்கள் வரைந்து துணியை வெட்டி வைக்கவும்.
ஒரு வட்டத்தின் ஓரத்தில் 3 மி.மீ அளவு விட்டு சிறிய நூலோட்டம் நூலோடவும்.
நடுவில் சீடியை வைத்து துணியை இறுகச் சுருக்கி கட்டிக்கொள்ளவும்.
இறுக்கம் போதாமல் தெரிந்தால் இப்படி குறுக்குத் தையல்கள் போடலாம்.
இதே முறையில் அனைத்தையும் தைக்கவும்.
துணிக்கு ஏற்ற வெப்பநிலை அல்லது மீடியம், இரண்டில் எது வெப்பம் குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அயர்ன் பாக்ஸை சூடுபடுத்தி சுருக்கங்கள் உள்ள பகுதியை அழுத்தவும். சுருக்கங்கள் & நூல் அயர்னில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும். (அயர்னை அதிக நேரம் ஒரே இடத்தில் வைத்துப் பிடிக்க வேண்டாம். சீடி வளைந்து போகும்).
அனைத்து வட்டங்களையும் அயர்ன் செய்து வைக்கவும்.
கோஸ்டர் செட் தயாரிக்க வட்டங்கள் இரண்டை சுருக்கமுள்ள பகுதி உள்ளே வருவதுபோல் பிடித்து பெக்ஸ் போடவும். இறுக்கமாக தைத்துப் பொருத்தவும்.
ஆறு சீடிக்களையும் இப்படியே தயார் செய்துகொண்டால் அழகான கோஸ்டர் செட் கிடைக்கும்.
நல்ல துணியில் தைத்துக் கொண்டால் அன்பளிப்பாகக் கூடக் கொடுக்கலாம்.
அலங்காரக் கூடை தயார் செய்வதற்கு படத்தில் காட்டியுள்ளபடி, ஒரு வட்டத்தைச் சுற்றி மீதி ஐந்தையும் சம அளவு இடைவெளியில் வைத்து குண்டூசியால் பொருத்தி வைக்கவும். (தைத்து முடியும் வரை இடம் மாற்ற இயலாது). அப்படியே கிடையாக வைத்துக்கொண்டு இணைத்து தையல் போடவும்.
ஒரு உயரமான ஜாடியின் மேல் நடுவட்டத்தை வைத்து மீதி வட்டங்களை இணைக்கவேண்டிய இடத்தை குண்டூசியால் பொருத்திக்கொள்ளவும்.
ஒரு முறை வடிவத்தைச் சரிபார்த்துவிட்டு, வட்டங்கள் பொருந்துமிடங்களில் சிறு தையல் போட்டு கட்டிக்கொண்டால் இப்படியொரு அழகான கூடை கிடைக்கும்.
உள்ளே வேறு பாத்திரத்தில் நீர் விட்டு பூக்கள் வைத்து அலங்கரித்திருக்கிறேன்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சூப்பர் இமாம்மா...கொள்ளை அழகு.அந்த சேலையும் பொருத்தமோ பொருத்தம்...எனக்கும் ஒரு கூடை ப்ளிஸ்...

Be simple be sample

சூப்பர் இமாம்மா! பார்சல் ப்ளீஸ் :).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமா அக்கா ,

ரொம்ப சூப்பரா இருக்கு :)

நினைத்தேன் நீங்களா தான் இருக்கும் என்று,வாழ்த்துகள்.நல்லா இருக்கு.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

அலங்கார கூடை சூப்பரோ சூப்பர் இமா

ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா இருக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை... வாழ்த்துக்கள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Asusual.. super..basket is very beautiful.Nice color. congrats aunty :)

Kalai

ரொம்ப ரொம்ப அருமையா இருக்குங்க....

எனது பழைய சேலையில் இவ்வளவு உபயோகமா?
சீடீ கூடை மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.

ரொம்ப அருமையாகவும் அழகாக இருக்குங்க :-) அசத்துங்க

நட்புடன்
குணா

பாராட்டுத் தெரிவித்த ரேவதி, கவீஸ், (பார்சல்லாம் இல்ல. ரெண்டு பேரும் இங்க வாங்க தரேன்.) சுசீ, சுபா, நிகிலா, ஃப்ரீதா, கலை, சுமதிக்கும் ரேட்டிங் கொடுத்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

மம்மிக்கும் என்னை மம்மி என்று கூப்பிட்ட பிறந்தநாள் பையனுக்கும் ஸ்பெஷல் தாங்ஸ். :-)

‍- இமா க்றிஸ்

ரொம்ப நல்லா இருக்கு வேலையும், வேலை செய்ய பயன்படுத்தின செபா ஆண்ட்டி புடவையும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாங்ஸ். :-)

‍- இமா க்றிஸ்