அரபிக் மெஹந்தி டிசைன்

தேதி: June 3, 2013

4
Average: 3.8 (13 votes)

 

மெஹந்தி கோன்

 

முதலில் படத்தில் உள்ளவாறு முழங்கையின் கீழே ஒரு பூ வரைந்து, அதனுள்ளே கட்டங்களும். இதழ்களில் கோடுகளும் வரைந்து நிரப்பவும்.
பூவைத் தொடர்ந்து படத்தில் உள்ளவாறு கொக்கி போன்ற டிசைன்கள் மற்றும் வளைவுகள் வரையவும். அதன்மேல் பாதி பூ வரைந்து, அதனுள்ளே கட்டங்களும். இதழ்களில் கோடுகளும் வரையவும்.
அதன்மேல் இரண்டு வளைவான கோடுகள் வரைந்து, அதனுள்ளே கொக்கி டிசைன்களை வரைந்து நிரப்பவும். பின் அதன் மீது ஒரு பூ வரைந்து, அதனுள்ளே கட்டங்களும். இதழ்களில் கோடுகளும் வரைந்து கொள்ளவும்.
அடுத்து பூவில் தொடங்கி உள்ளங்கையில் ஒரு வளைவான கோடு வரைந்து, படத்தில் உள்ள டிசைனை வரையவும்.
அந்த டிசைனின் கீழே படத்தில் உள்ளதுபோல் வரையவும். வளையத்தின் மேல் பகுதியில் ஒரு மாங்காய் வரைந்து அதனுள்ளே கொக்கி டிசைன்கள் வரைந்து நிரப்பவும்.
பிறகு மாங்காய் டிசைனின் பக்கத்தில் ஒரு கொக்கி டிசைன் வரைந்து அதிலிருந்து விரல்களுக்கு படத்தில் உள்ளது போல் கொக்கி டிசைன்கள் வரையவும்.
மற்ற விரல்களுக்கும் இதேபோல் போல் டிசைன் வரைந்து முடிக்கவும்.
அழகான அரபிக் மெஹந்தி டிசைன் இது. பார்ப்பதற்கு அழகாகவும், தெளிவாகவும், நேர்த்தியானதாகவும் இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு சஹானா. சொல்லி இருக்கற விதமும் ஈஸியா புரியுது எளிமையா போடலாம் போல இருக்கே முயற்சிக்கிறேன்

நல்ல அழகு டிசைன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப அழகா இருக்கு

அழகான டிசைன் சஹானா.

‍- இமா க்றிஸ்

Hi frndz entha mehendhi design rompa nallarukkuthu neengalum try panni parunga pa