மாதவிடாய்

தயவுசெய்து எனக்கு உதவுங்கள் தோழிகளே!

எனக்கு மாதவிடாய் அறிகுறி வெள்ளை மற்றும் சிறிது இரத்தம் கலந்து படுகிறது. அடுத்த நாள் தெரிவதில்லை. மறுநாள் தெரிகிறது. இவ்வாறு மாறி மாறி தெரிகிறது . அறிகுறி தோன்றிய நாளிலிருந்து 5-ம் நாள் தான் நார்மலாக படுகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு தள்ளி போட மருத்துவரிடம் காண்ப்பித்து மாத்திரை எடுத்து கொண்டேன். அந்த மாதத்திலிருந்து இப்படி ஆகிறது. இதனால், குழந்தை உண்டாவதில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா?

எனக்கு தெரிந்தவகையில் கர்பத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டால் கர்ப்பம் தரிப்பது கொஞ்சம் சிரமம் தான் நீங்கள் உடனே உங்கள் மருத்துவரை அனுகி ஆலோசனை பெறுங்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

அக்கா நா கர்ப்பதடை மாத்திரை எடுக்கலை. மாதவிடாய் தள்ளி போடதான் எடுத்துக்கிட்டேன். அதுவும்,dr எழுதி கொடுத்தது தான்

அதுவும் தப்பு தான் மா.. இயற்கைக்கு மாறா நாம எது செய்தாலும் அதோட விளைவு மோசம் தான் மா.. அதிக மருத்துவர்கள் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுவார்கள் ஆனால் அதன் விளைவு பிறகு தான் தெரியும். கவலைபடாதீர்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள் சீக்கிரம் குண மடைய நான் பிரார்தித்துக்கொள்கிறேன்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

thanks ka.... na seekiramavey consive aakanum..dua kelunga akka...

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா துஆ செய்றேன் மா..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

எங்க சொந்த காரங்க இப்படித்தான் ஒரு முறை மாதவிடையை தள்ளி போட மாத்திரை எடுத்தாங்க .அதுனால அவங்களுக்கு மறு மாதம் மாதவிடாய் வரும்போது கடுமையான வயற்று வலியோட கஷ்ட பட்டங்க .அதிகமான ரத்த போக்கும் இருந்தது .அது டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை தான் .பொதுவாகவே எந்த பிரச்சனைக்கும் மாத்திரையே தவிர்த்து இயற்க்கை முறையில் தீர்வு காண்பதே நல்லது .குழந்தைக்கு முயற்சிக்கும் இந்த சமயத்தில் நீங்க இந்த மாத்திரையே தவிர்த்து இருந்திருக்கலாம் .சரி பரவா இல்லை .வீட்ல உள்ள பெரியவங்க கிட்ட ஆலோசனை கேட்டு பாருங்க .

oh k ka.. thanku ka rly pannathuku...

மேலும் சில பதிவுகள்