ப்ரெஸ்ஸர் குக்கர் பற்றிய சந்தேகம்

நான் இன்று புலாவ் செய்ய இருக்கிறேன்.ஆனால் எனக்கு குக்கரில் தண்ணீரின் அளவு எப்படி சரியாக விடுவது என்று தெரியவில்லை. ஒரு டம்ளர் அரிசிக்கு (பாஸ்மதி) எத்தனை டம்ளர் தண்ணீர் விட வேண்டும்? எத்தனை விசில் வரை வேக விடனும்?? சாதம் குழையாமல் பொல பொல என்று உதிரியாக வர வேண்டும்

அன்பு லலிதாம்பிகா,

நான் இதுவரைக்கும் பாஸ்மதி ரைஸ் உபயோகப்படுத்தியது இல்லை.

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன், ட்ரை பண்ணிப் பாருங்க.

அரிசியை நல்லா களைந்து, 20 நிமிஷம் ஊற வைக்கணும். பிறகு தண்ணீரை முழுவதும் வடித்து விடணும்.

ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு அல்லது இரண்டரை பங்கு தண்ணீர் போதும். 3 விசில் போதும்.

அறுசுவையில் தம் போடுவது பற்றி தேடிப் பாருங்க. அதே போல படங்களுடன் நிறைய புலாவ் குறிப்புகள் இருக்கு. அதெல்லாம் பாத்தீங்கன்னா ஒரு ஐடியா கிடைக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

நான் ஒன் கப் அரிசிக்கு 1,1/2 கப் தண்ணீர் விடுவேன்.தேங்காய் பால் ஊற்றினால் 2 கப் விடுவேன்.நன்றாக கொதி வந்ததும் மூடி வைத்து 1 விசில் வைத்து சிறிது நேரம் கழித்து திறக்கவும்.ட்ரய் பன்னுங்க.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

uthaviya iruvarukkum mikka nanri....seithu parthuvittu solhiren....godbless

நான் பொதுவா குக்கரில் பாசுமதி வெச்சா 1க்கு 1.5 நீர் வைப்பேன். சில அரிசியை பொருத்து 2 தேவைப்படும். நீர் நல்லா கொதிச்சதும் அரிசியை போட்டு கலந்து விட்டு மீண்டும் கொதி வந்ததும் விசிலோடு மூடி சிம்மில் வைக்கவும். விசில் வர தேவை இல்லை. 7 - 8 நிமிடம் சிம்மிலேயே வைத்து எடுக்கவும். புழுங்கல் அரீஸி ஏன்றால் சீதா சொன்ன மாதிரி 2 - 2.5 கப் வேண்டும். 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்