நான் ஐயுஐ செய்ய முடிவு செய்துள்ளேன். போன மாதமே என் டாக்டரிடம் கேட்டேன். அவசரபடாதிங்கனு சொன்னாங்க. என்னோட டவ்ட் என்னனா?
ஐயுஐ செய்யும் போது வலிக்குமா?
இதை செய்து கருதரித்தவர்கள் உண்டா?
ஐயுஐ செய்வதர்க்கு முன்பு லேப்ரோஸ்கோப் செய்து ப்ளாக் இருக்கானு தெரிஞ்சிகனுமா? இல்ல வேண்டாமா?
குழந்தை நிக்காமல் இருக்கும் காரணத்தை கண்டறிய என்ன என்ன டெஸ்ட் எடுக்க வேண்டும்?
அதாவது ஹார்மோன் டெஸ்ட், நீர்கட்டி மாதிரி.
தெரிந்தவர்கள் பதில் போடவும். காத்திருக்கிறேன்.
Ashvitha
iui செய்ய முன் நீஙகள் சொன்ன எல்லாவிதமான டெஸ்டும் எடுப்பாங்க.முதல்ல பீரியட் வருவதுல ஏதாவது பிரச்சினை இருந்தா சரி செய்வாங்க.ஹொர்மோன் சிக்களுக்கு சிகிச்சை.அடுத்து லேப்ரொஸ்கொபி.அதன் மூலமாக கருப்பையில் அடைப்புக்கள் இருந்தால் சரி செய்வார்கள்.நீர் கட்டிகளையும் கண்டுபிடிப்பாங்க. பிறகு கரு முட்டை வளர்ச்சிக்கு மாத்திரை மருந்து ஊசி.பிறகு iui இதுவரை தான் நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.ஒரு முறை தான் செய்தேன். successஆகல்ல.ஆனால் மூன்றில் 2 பேருக்கு success ஆகுமாம். iuiசெய்தால் ஏற்படும் வலி குழந்தை இல்லாத வலியை விட மிக மிகக் குறைவுதான் அஸ்விதா டாக்டரின் ஆலோசானைப் படி treatment எடுங்க.
ரொம்ப ரொம்ப நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி ஷிபா.
டாக்டர்ட போனன். அவங்க அவசரபடாத. டெஸ்ட் ரிசல்ட் பார்த்துட்டு முடிவு பண்லாம்னு தான் சொன்னாங்க. இப்போ தான் blood கொடுத்துட்டு வந்தேன். ஹார்மோன், தைராய்டு, இரத்த அளவு, பாக்க சொன்னாங்க. நா அனீமிக்கா இருப்பன். மாதவிடாய் ல ஒரு பிரச்சனையும் இல்ல. கரக்டா வந்துரும். அடுத்த மாசம் hsg எடுக்க சொன்னாங்க.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
உதவி வேண்டும் தோலீஸ்
அவருக்கு semen test எடுக்க சொல்லியிருக்காங்க. போன மாசமே எடுக்க சொன்னாங்க. ஏற்கனவே கரு நின்னதால வேணானு சொல்லிட்டாங்க. இப்ப எடுக்க சொல்றாங்க. கவுன்ட் பார்க்க தானே அந்த டெஸ்ட்? அதுக்கும் blood தான் எடுப்பாங்களா? plz help me.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
அஷ்விதா
கவுன்ட் பாக்க மட்டும் அந்த டெஸ்ட் இல்ல பா வேறு சிலதும் பன்னுவாங்க.. இல்ல அஷ்விதா அதுக்கு blood எடுக்க மாட்டாங்க உங்க கணவரோட semen sample கேட்பாங்க
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
faridha
hi fari,
எப்படி இருக்கிங்க? நன்றி பரிதா உங்க பதிலுக்கு. எல்லா டெஸ்டும் நல்ல ரிசல்ட தரனும். இந்த முறை மாத்திரை எதுவும் எடுக்கவில்லை.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
ashvitha
hsg x ray panuvanga pa
hi femina
எப்படி இருக்கிங்க? ம் சொன்னாங்க அடைப்பு இருக்கானு பாக்க மருந்து செழுத்தி X-RAY எடுப்பாங்களாம். ஆனா ஏன் அடுத்த மாசம் வரை தள்ளி வச்சாங்கனு தான் தெரியல.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
அஷ்விதா
நன்றியெல்லாம் வேண்டாம் பா எல்லாம் நல்லதே நடக்கும் கவலைப்படாதீர்ரள்
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
hi friends
ஹாய்,
இந்த மாசமே hsg பண்ணிட்டாங்க. ரிசல்ட் க்காக வெய்டிங்.
என்னோட எல்லா டெஸ்ட்டும் நார்மல். அவருக்கும் நார்மல். கடைசியா hsg யும் நார்மல் னு வந்துட்டா ரொம்ப சந்தோஷம். ஆனா வேற ஒரு பிரச்சன தலை தூக்குமே? எந்த பிரச்சனையும் இல்லாதப்ப ஏன் குழந்தை நிக்கல? இந்த பிரச்சன தான் னு தெரிஞ்சா அத சரி செய்ய முயற்சிக்கலாம். ஆனா என்ன பிரச்சனைனே தெரியாம நா என்ன செய்ய? தலையே வெடிக்குது.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
hai
hai ashvi epdi irukinga? enaku ella testum normala irundhu enna problem nu kandu pidika laproscope pannanga.adhil utrusla edho whita irundhadhu adhu ennanu parka lab test koduthanga normalnu vandhudhu.then oru injection pottu test pannanga kaila 48 hrs la report utrus la TP.enaku kastama irundhadhu adhan arusuvai pakkamay varala.ippo 2month tablet sapidureyn.innum 4th month sapidanum.ennaku yen ivvalavu sodhanai.na yarukum endha kedudhalum panniadhillai. nadapadhu yaavum nanmaikey endru irukeyn.neenga treatment edukiringala? Veedu mariyacha?