சைனீஸ் பேப்பர் ஃபேன்

தேதி: June 7, 2013

5
Average: 4.1 (9 votes)

 

A4 சைஸ் பேப்பர்ஸ் - 2
கத்தரிக்கோல்
பெயிண்ட்
பெயிண்ட் ப்ரஷ்
ஐஸ்க்ரீம் ஸ்டிக் - 2
சிறிய காகிதத் துண்டு
க்ளூ

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
A4 காகிதங்கள் இரண்டையும் செங்குத்தாக (Vertical) நறுக்கிக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல் நான்கு காகிதங்கள் கிடைக்கும். அதன் ஓரங்களில் விரும்பிய டிசைனை வரையவும்.
பின்னர் அந்த காகிதத்தை படத்தில் காட்டியவாறு ஒரே அளவில் முன்னும் பின்னுமாக மடிக்கவும்.
இதே முறையில் மற்ற காகிதங்களையும் மடித்துக் கொள்ளவும்.
மடித்த காகிதங்களை ஒவ்வொரு காகிதத்தின் முடிவிலும் க்ளூ தடவி, அதனுடன் மற்றொரு காகிதத்தை ஒட்டி நீளமான காகிதமாக தயார் செய்யவும்.
தயார் செய்த நீளமான காகிதத்தை படத்தில் காட்டியுள்ளவாறு மடித்து, அதன் டிசைன் வரையாத ஓரத்தில் ஒரு காகிதத் துண்டை சுற்றி ஒட்டிக் கொள்ளவும்.
மடித்த காகிதத்தின் இரு பக்கங்களிலும் படத்தில் காட்டியவாறு ஐஸ்க்ரீம் ஸ்டிக்கை ஒட்டிவிடவும்.
அப்படியே விரித்தால் அழகிய சைனீஸ் பேப்பர் ஃபேன் (Chinese Paper Fan) தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப சிம்பிள்... அழகு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்...அருமை . வாழ்த்துக்கள்

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

ரொம்ப சிம்பிளாகவும் அழகாகவும் உள்ளது வாழ்த்துக்கள்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மிகவும் அழகாக இருக்கிறது. டிசைன் எல்லாம் வரைந்து அழகாக செய்திருக்கிறீர்கள்.

கொசுவர்த்தி... :-) முதலாம் இரண்டாம் வகுப்புகளில் செபா சொல்லிக் கொடுத்து செய்திருக்கிறோம். கலர்ட் வார்னிஷ் பேப்பரில் மடிப்போம் அப்போது, ஆனால் ஈர்க்குதான் கைபிடி.

‍- இமா க்றிஸ்

எளிதாக,அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

ரொம்ப தேங்க்ஸ்...நீங்க என்னோட முதல் கைவினை பார்த்து கமெண்ட்ஸ் கொடுத்ததற்கு நன்றி..இதற்கு காரணம் இமா அக்காவும் வனிதா அக்காவும் தான்.சோ அவங்களுக்கு நன்றி..என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவுக்கு நன்றி........

don't depend too much on anyone in this world...even your shadow leaves you when you're in darkness..

பேப்பர் ஃபேன் ரொம்ப அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

dear rabi,
i like very much your art.But enakku oru doubt,last pictureku munbulla
picturil paper-i matiththathu eppadinnu puriyalai.please athu eppadi seyyanumnu solla mudiyuma? i'm waiting for ur reply.please..

naan paper a madikkavillai..yaerkanavae irundhadhil iru kadaisi pakathilum otta vaendum...

don't depend too much on anyone in this world...even your shadow leaves you when you're in darkness..

thank you for your reply & art.Naan ithai panni parthaen cute fan entru appreciation kidaithathu.Once again thank you for everything.