முட்டை போன்டா

முட்டை போன்டா சிறு வயதில் மதுரை திரை அரங்குகளில் வாங்கி ரசித்து அனுபவித்தது. சென்னை வந்த புதிதில் பல திரை அரங்குகளில் இருந்த இந்த முட்டை போன்டா இப்பொழுது கானாமல் போய் விட்டது. விடு அருகில் இருக்கும் ஒரு கடையில் சமிபத்தில் இதை பார்த்தேன். அது முதல் வாரம் ஒரு முறை எங்கள் விட்டில் ஒரு மாலை இது கண்டிப்பாக இருக்கும். சிறுது சமையல் ஆர்வம் உள்ளதால் [வாரத்தில் 3 நாட்கள் இரவு உணவு எனது கைப்பக்குவத்தில் தான்] நானே முட்டை போன்டாவை செய்ய வேன்டும் என மனதில் ஒரு ஆசை. இது எனது பல நாள் விருப்பம்.

நேற்று மாலை விட்டில் முட்டை போன்டா செய்தேன். 3 முட்டை வாங்கி வேக வைத்து மூண்று துண்டுகளாக [நிள வாக்கில்] வெட்டிக்கொன்டேன். பஜ்ஜி மிக்ஸில் [கட்டியான] முக்கி என்ணெயில் போட்டு எடுத்தேன். இது வரை சரியாக வந்தது என்ணேயில் போட்டதும் ச்றிது நேரம் களித்து சில முறை வெடித்து என்ணேய் என் மேல் பட்டு விட்டது. சிறிய வெடிப்பாக இருந்தால் காயம் பலமாக இல்லை. ஆனாலும் கொஞ்சம் பயம் வந்து விட்டது.

இப்படி வெடிக்காமல் முட்டை போன்டா செய்வது எப்படி.

தயவு செய்து உதவவும்.

வேக வைத்த முழு முட்டையை தோலுரித்து அப்படியே மாவில் முக்கி போட்டு பாருங்கள்,நான் ஒரு முட்டையை சரிபாதியாக வெட்டியும் செய்வேன்.

Eat healthy

வேகவைத்த முட்டையின் மஞ்சள் கரு சூடான எண்ணெயில் நேரடியாக படும் போது வெடிக்கும். ரசியா சொன்னது போல வேக வைத்த முழு முட்டையை அப்படியே பஜ்ஜி மாவில் முக்கி போடலாம். அல்லது கவனமாக முட்டையின் மஞ்சள் கரு முழுவதும் பஜ்ஜி மாவில் பொதிந்திருக்கும் படி கவனமாக போட வேண்டும். பஜ்ஜி மாவை சற்று கெட்டியாக கலந்து போட்டு பாருங்கள்.

முட்டை போண்டா செய்யும் போது முன்னெச்சரிக்கையாக நான் முட்டையை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டதும் முதல் சில நிமிடங்கள் மூடியால் மூடி விடுவேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி ரசியா, கவிசிவா.

நிங்கள் சொல்வது சரிதான். நான் பஜ்ஜி மாவில் முட்டையை முக்கி எடுக்கும் போது சிறிது மஞ்சள் கரு வெளியில் தெரிந்தது.

ஆனால் முழு முட்டையை முக்கி செய்யலாமா என்ன. மிகப்பெரியதாக வராதா?

முட்டையை வெட்டினதும் தோசை கல்லில் லேசா எண்ணெய் விட்டு மஞ்சள் கரு வெளியே தெரியும் இடத்தை கல்லில் படும்படி வைத்து லேசா சிவக்க விட்டு எடுத்துக்கங்க. அதன் பின் நீங்க மாவில் முக்கி போடும் போது கரு உடையாது, ஈரம் இருக்காது, வெடிக்காது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அவர்களே That seems to be a superb Idea. அடுத்த வாரம் முயற்சி செய்து பார்த்தப்பின் கருத்து கூறுகிறேன். 100% நன்றாக வரும் என நினைக்கிறேன்.

Vanitha Akka thanks unga idia super.. udaiya seithutten...

ZajneeMufeetha

மேலும் சில பதிவுகள்