தேதி: June 19, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பனீர் ஊறவைக்க
பனீர் = 2௦௦ கிராம்
மிளகாய் தூள் = 1/2 மேஜைகரண்டி
கரமசாலா = 1/2 தேகரண்டி
இஞ்சி பூண்டுவிழுது = 1/2 தேகரண்டி
உப்பு = தேவையான அளவு
சில்லி செய்ய
வெங்காயம் = 1
தக்காளி = 1
குடைமிளகாய் = 1
கருவேப்பிலை = சிறிதளவு
சோயா சாஸ் = 1 மேஜைகரண்டி
டோமொடோ கெச்சப் 1/2 மேஜைகரண்டி
சில்லி சாஸ் = 1 மேஜைகரண்டி
மிள்காய் தூள் =1/2மேஜைகரண்டி
எண்ணெய் = 2 = 2 மேஜைகரண்டி
இஞ்சி பூண்டுவிழுது = சிறிதளவு
உப்பு = சிறிதளவு
பனீரில் ஊறவைக்க வேண்டிய பொருளை போட்டு 1/2 மணி நேரம் வைக்கவும்.
வெங்காயம் 6க வெட்டி இதழாக எடுத்து கொள்ளவும் தக்காளி பொடியாக நறுக்கவும் குடைமிளகாய் துண்டு துண்டு நறுக்கவும்.
2 கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்த பனீரை பொரித்து எடுக்கவும்
2 கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை உப்பு போட்டு வதக்கவும் வெங்காயம் லேசா வதங்கியவுடன் தக்காளி குடைமிளகாய் இஞ்சி பூண்டுவிழுது போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் மிள்காய் தூள் அணைத்து சாசும் ஊற்றி வதக்கி பனீரை போட்டு பிரட்டி எடுக்கவும் மிகவும் சுவையான சில்லிபனீர் ரெடி.
சப்பாத்தி குப்புஸ்சுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
Comments
சில்லிபனீர்
பனீர் ஊறவைக்கும் போது ஒருமேஜைகரண்டி தயிர் சேர்க்கவும்
அட்மினுக்கு நன்றி
என் குறிப்பு படத்தை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கு நன்றி
Hi Nasreen..
நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
நன்றி ஷாபி
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஷாபி