குழந்தைக்கு உணவு

என் 11 மாத குழந்தைக்கு ஒரு வாரத்திற்கான ஆரோக்கியமான உணவு வகைகள் வேண்டும் தோழிகளே . அவள் பசும்பால் கொஞ்சம் கூட குடிக்க மாட்றா இட்லி , சாதம் கூட மிக்ஸ் பண்ண சாப்பிடரா, அதனால பயணம் பண்ணும் போது கஷ்டமா இருக்கு, எப்படி பழக்க படுத்தறது. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் , காலையில் இட்லி (or ) கேழ்வரகு கஞ்சி குடிப்பா , 12 மணிக்கு பருப்பு (or )carrot (or )beetroot சாதம் சாப்பிடரா , 2-3 மணிக்கு கொஞ்சம் தயிர் குடிப்பா , அதோட evening 6-7 பால் சாதம் or இட்லி or குழி பண்ணியாரம் சாப்பிடறா, egg கொடுத்தா சாப்பிட மாட்றா, இதை எப்படி பழக்க படுத்துவது தோழிகளே , எதாவது ஐடியா கொடுங்க please
தாய் பால் மறக்க வைக்கணும் அதுக்கும் ஐடியா சொல்லுங்க,

முட்டையை அரைவேக்காடாக வேகவைத்து... கையால மசிச்சி குடுக்கலாம்.. இல்லன்னா.. ப்ரெட்ல அந்த மசிச்ச முட்டையை கலந்து சீனி, பால் மற்றும் சீஸ் இல்லன்னா பட்டர் போட்டு பிசைந்து குடுக்கலாம்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஹாய்,முட்டை அரை வேக்காட்டில் இட்லி,கஞ்சி கூட மிக்ஸ் செய்து கொடுங்க.

அன்புடன்,
சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

மேலும் சில பதிவுகள்