கவிதை மன்றம் - 2 தலைப்பு : "குழந்தை"

தோழர்,தோழிகளுக்கு இந்தவாரத்திற்கான கவிதைமன்றம் துவங்கப்பட்டுள்ளது. உங்களின் கவிதைகளை பதிவிடுங்கள்.தலைப்பு நம் தோழி சுமியோடது....நன்றி சுமி தலைப்பிற்கு.
இவ்வாரம் யாரும் நடுவருக்காக பெயர் பதியவில்லையாதலால் நானே துவங்குகிறேன்.ஆனால் அடுத்த வாரம் கண்டிப்பா மற்றவர்களும் நடுவரா வரனும்.:-)

வாங்க வந்து தலைப்புக்கு உண்டான கவிதைகளை பதிவிடுக்கோ.....

Englishla anupalama.thamila type pana mudiathu.

Kalam pon ponrathu

இந்த தலைப்பை கொடுத்த சுமிக்கு வாழ்த்துக்கள். இந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்த ரேணுகாவுக்கு நன்றிகள்.

ஆண்மகனை அப்பாவாகவும்
பெண்மகளை அம்மாவாகவும்
தாய் தந்தையரை
தாத்தா பாட்டியாகவும்

எனப் பிறந்தவுடனேயே
சுற்றத்திற்கெல்லாம் உயர் பட்டம்
கொடுக்கும் நீ ஒரு
பல்கலைக்கழகம் !!!

சொந்தங்களின் பேச்சினால்
சொல்லடிபட்டு!
அக்கம் பக்கம் பேச்சினால்
ஆரத்துயருற்று!
மலடி என்ற அடைமொழியோடு
கடவுளை வணங்கும்
தம்பதியர்களின் துயர் நீக்க
கருப்பையில் உதித்த நீ
வரம் கொடுத்த கடவுள்!!!

சலனத்தினால் செய்யும்
தவறுக்கும்
சபலத்தினால் செய்யும்
துரோகத்திற்கும்
யாரும் இல்லை தண்டிக்க
என்று தவறுகளை
செய்யத் துடிக்கும் பெண்களுக்கு
விருப்பமின்றி பிறந்த நீ
கடவுள் கொடுத்த சாபம் !!!

பூவான கால் கொண்டு உதைப்பாயோ!
பிஞ்சு விரல் கொண்டு தொடுவாயோ!
பொக்கை வாயால் சிரிப்பாயோ!
சிணுங்கி சிணுங்கி அழுவாயோ!
திரு திருவென்று பார்ப்பாயோ!
கண்கொட்டாமல் பார்க்கும்
எங்களை அபிஷேகம் செய்வாயோ!
எப்போதும் உந்தன் தரிசனத்தைப்
பார்க்கத் துடிக்கும் எங்களுக்கு நீ
பரமாத்மாவேதான் ....

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

தாமரை,
வருக வருக.....:-))
அழகான கவிதை......வாவ் வர்ணிக்கமுடியாத உணர்வை எழுத்துக்களால் கொடுத்து ஏங்கவைத்துவிட்டாய்...

///பூவான கால் கொண்டு உதைப்பாயோ!
பிஞ்சு விரல் கொண்டு தொடுவாயோ!
பொக்கை வாயால் சிரிப்பாயோ!
சிணுங்கி சிணுங்கி அழுவாயோ!
திரு திருவென்று பார்ப்பாயோ!///

ரொம்ப அருமையான வரிகள்....வாழ்த்துக்கள்....

ரொம்ப நன்றி ரேணு, நீங்களெல்லாம் ஊக்குவிப்பதாலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது
கவி, குணா, அருள், இளவரசி , ரம்யா, வனி மற்றும் கவிதாயினிகளை எல்லோரும் வருக. கவிதை எழுதி தருக.
பட்டிக்கு வருபவர்களே இந்த மன்றத்திற்கும் கொஞ்சம் வாங்க
வரவேற்பது
ரேணு & கோ

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ரேணு கவிதை மன்றத்தைத் தொடங்கி விட்டு இப்படி டீல்ல விட்டுடிங்களே.
என்னாச்சு?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

ரேணு கவிதை மன்றத்தைத் தொடங்கி விட்டு இப்படி டீல்ல விட்டுடிங்களே.
என்னாச்சு?
தொங்கலில் நிற்கிறது கவிதை மன்றம். அவ்வளவு தானா!!!

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

க.மன்றத்தை டீலில் விடலைப்பா.இடையில் கொஞ்சம் வேலைபளு,இதனிடையில் வேறு சிலர் கவிதை கொடுக்ககூடும்னு நினைத்தேன்.
இந்தவாரம் வரை பார்ப்போம் கவிதைகள் வருதான்.....நம் தோழர் தோழீஸ் மனம் வைத்தால் தானே நன்முறையில் செல்லும்.......
பட்டி முடியும்வரை பார்ப்போம் யாரும் கவிதை அனுப்பலைன்னா.....முடிவை சொல்லிடலாம்....

கவிதை மன்றம் - 2
இதில் குழந்தை என்ற தலைப்பில் கவிதைகளை வேறுயாரும் கொடுக்காததால் ஒருமனதாக "தாமரை" இவ்வார முதல் இடம் மட்டுமல்லாமல் மூன்று இடங்களையும் பிடிக்கிறார்.

குழந்தையை "பழ்கலைக்கழகமாக,கடவுளாக,கடவுளின் சாபமாக,பரமாத்மாவாக" சித்தரித்துள்ள வரிகள் உண்மை.
மீண்டும் சொல்கிறேன் ,
"பூவான கால் கொண்டு உதைப்பாயோ!
பிஞ்சு விரல் கொண்டு தொடுவாயோ!
பொக்கை வாயால் சிரிப்பாயோ!
சிணுங்கி சிணுங்கி அழுவாயோ!
திரு திருவென்று பார்ப்பாயோ!
கண்கொட்டாமல் பார்க்கும்
எங்களை அபிஷேகம் செய்வாயோ!"
இவ்வரிகள் அருமை.....
தொடர்ந்து எழுதுங்கள் தோழி.....வாழ்த்துக்கள்........:-)

Kஅவிதை சுபெர்

உன்னைப்போல் பிறரையும் நேசி.
அன்புடன்...
ஹாசனி

மேலும் சில பதிவுகள்