மேகஸின் பேப்பர் க்ராப்ட்ஸ்

தேதி: June 24, 2013

5
Average: 4.2 (10 votes)

 

மேகஸின் பேப்பர்ஸ்
கத்தரிக்கோல்
மெல்லிய ஈர்க்கு அல்லது குச்சி - ஒன்று
பெயிண்ட் - விரும்பிய நிறம்
பெயிண்ட்டிங் ப்ரஷ்
அட்டை
கம்

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் காட்டியுள்ளபடி மேகஸின் பேப்பரின் ஒரு முனையில் ஈர்க்கை வைத்து சுருட்டவும்.
சுருட்டிய பின் பேப்பரின் மறுமுனையில் கம் பூசி ஒட்டிவிடவும். இதே முறையில் தேவையான எண்ணிக்கையில் பேப்பரை சுருட்டி குச்சிகளை தயார் செய்து வைக்கவும்.
அடிப்பகுதிக்கு அட்டையில் வட்டமாக 2 துண்டுகளும், அதைவிட சுற்றளவில் 2 இன்ச் பெரிய அளவாக பேப்பரில் ஒன்றும் வெட்டி வைத்துக் கொள்ளவும். (நான் பாட்டிலின் வடிவத்தில் பின்ன விரும்பியதால் பாட்டிலின் அடிப்பகுதியை அளவாக வைத்து அட்டையில் வெட்டியுள்ளேன்) படத்தில் காட்டியுள்ளபடி வெட்டிய அட்டை ஒன்றின் மேல் தாராளமாக கம் தடவி 1-9 குச்சிகளை ஒட்டிக்கொள்ளவும்.
அதன்மேல் வெட்டி வைத்துள்ள மற்றொரு அட்டையை கம் தடவி ஒட்டி, அதற்கும் மேல் சுற்றளவில் 2 இன்ச் பெரிய அளவாக வெட்டிய பேப்பரை ஒட்டவும்.
ஒட்டிய பேப்பரை படத்தில் உள்ளவாறு குச்சிகள் உள்ள இடங்களில் வெட்டிவிட்டு மறுபக்கம் திருப்பி நடுவில் உள்ள அட்டையின் ஓரங்களில் குச்சிகளுக்கு இடையில் உள்ள பேப்பரை ஒட்டிவிடவும். அதன்மேல் பாரமான பொருள் ஒன்றை வைத்து காயவிடவும்.
நன்கு காய்ந்ததும் சுருட்டி தயார் செய்துள்ள குச்சிகளில் ஒன்றை எடுத்து, அட்டையின் மேல் ஒட்டியிருக்கும் குச்சியின் மேல் கம் தடவி ஒட்டி க்ளிப் போட்டு வைக்கவும்.
இனி பின்னுவதற்கு தொடங்கவும். (சப்போர்ட்டிற்கு நடுவில் உள்ள அட்டையின் மேல் ஒரு பாட்டிலை வைத்துக் கொள்ளவும்). இணைத்த குச்சியை படத்தில் உள்ளவாறு அதற்கு அடுத்த குச்சியின் மேல் வருமாறு மடித்துவிடவும். 3 வதாக உள்ள குச்சியை 4 வது குச்சியின் மேல் மடித்துவிடவும். இப்படியே சுற்றிலும் பின்னிக் கொள்ளவும். உயரம் போதவில்லையெனில் அதனுடன் இன்னொரு குச்சியை இணைத்துக் கொள்ளவும்.
இதேபோல் தொடர்ந்து பாட்டிலின் வடிவத்திற்கேற்ப பின்னி முடிக்கவும்.
இப்போது மேகஸின் பேப்பர் பாட்டில் ரெடி. விரும்பிய நிறத்தில் பெயிண்ட் செய்து காய வைத்து, அதன் மேல் க்ளியர் வார்னிஷ் செய்து காய வைக்கவும். விரும்பினால் பின்னத் தொடங்குவதற்கு முன் குச்சிகளை கலர் செய்து காயவைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் இடைக்கிடையே வித்தியாசமான கலரில் மிகவும் அழகாக இருக்கும்.
இதே முறையில் செய்த ஃப்ளவர் வாஸ் இது.
எனது வீட்டில் ஃப்ளவர் வாஸாக, பழக்கூடையாக, ட்ரெஸ்ஸிங் டேபிளில் அழகு சாதனங்கள் வைப்பதற்காக என விதவிதமான டிசைன்களில் செய்து வைத்துள்ளேன். இதேபோல் நீங்களும் செய்து உபயோகித்துக் கொள்ளவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கூடைகள் அனைத்துமே அழகாக இருக்கின்றன ஷனாஸ். கடைசிக்கு முதல் படத்தில் இருக்கும் நீலமும் வெண்மையும் கலந்த வாஸ் அருமை.

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகு எல்லாமே. நான் இது போல் ட்ரை பண்ணிருக்கேன். இவர் நண்பர் குட்டீஸ் எடுத்துட்டு போயிட்டாங்க :) ஆனா நீங்க செய்திருக்க ஃப்ளவர் வாஸ் முறை எனக்கு புதுசு. அவசியம் ட்ரை பண்ணனும். நான் சாதாரணமா பாக்ஸ் டைப் தான் ட்ரை பண்ணிருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஷனாஸ்
ரொம்ப அழகாயிருக்கு.நான் பென் ஹோல்டர் செய்திருக்கேன்.ஆனா இதெல்லாம் ரொம்ப புதுசா கலை நயத்தோட இருக்கு.வாழ்த்துக்கள்.

அருமையாக செய்து இருக்கீங்க,பெயின்டிங் கலர் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Mமிகவும் அலகாக உல்லது......

Be cool

ரொம்ப அழகா இருக்கு மேகஸின் பேப்பர் க்ராப்ட்ஸ் எளிமையான செய்முறை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Once the paper role is over whether we have to remove the sticks ?

nice

மிகவும் அருமையாக உள்ளது