உறவுகளுக்கு வணக்கம் வசம்பு தெளிவான தீர்வு

உறவுகளுக்கு வணக்கம், என் பெயர் ராஜ்குமார். எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் ஆறு மாதம் ஆகிறது. 14 நாட்களுக்கு முன்புதான் திருநெல்வெலி இல் இருந்து சென்னை அழைத்து வந்தேன். தற்போது என் இரண்டு பிள்ளைகளுக்கும் வயிற்றுப்போக்கு இரண்டு நாட்களாக இருக்கிறது. மருத்துவமனைக்கு சென்றும் கேட்கவில்லை. என் அம்மா வசம்பு கொடுக்க சொல்கிறார்கள். என் மனைவி வசம்பு கொடுத்தல் வாய் திக்கும் என்கிறாள். எனக்கு இதற்க்கு தெளிவான தீர்வு வேண்டி இங்கு வந்துள்ளேன். நீங்கள் உதவினால் மகிழ்ச்சி. நன்றி.....

ennudaya anupavithil solkiren en pakkathu veetu kulandhai ku epadi dhaan vomit, loosemotion edhu kuduthalum sari agavillai.

edho by chance gripewater kuduthu parthanga. loosemotion povathu kammi kammi aachu apuram therivapavum kuduthanga complete ta stop aaachu.
mudinthal water la mix panni gripewater half paladai kuduthu parunga

வசம்பு கொடுத்தால் நன்றாக பேச்சு வரும் என்று சொல்வார்கள். பயப்படவேண்டாம்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

வசம்புக்கு இன்னொரு பேர் உண்டு... பிள்ளை வளர்ப்பான். அத்தனை நல்லதுன்னு சொல்லுவாங்க பெரியவங்க. அதை தீயில் சுட்ட பின் தேய்த்து அந்த பொடியோடு தாய் பால் சேர்த்து லேசா நாக்கில் தடவ வேண்டும் என சொல்லி கேட்டிருக்கேன். நம்ம ஊரில் இப்பலாம் பல ஆங்கில மருந்து தர ஆரம்பிச்ச பிறகு இதெல்லாம் தர பயம் எனக்கு. நான் தந்தது இல்லை. ஆனால் கிராமத்தில் இது வயிற்று போக்கு, வாந்தி, வயிற்று வலி, பேச்சு வராத பிள்ளைகளுக்கு, திக்கு வாய் உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் வைத்தியத்துக்கு பயன்படுத்துவார்கள் என கேட்டிருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வசம்பு நல்லது தான்.எனக்கு 1.6 வயதில் குழந்தை இருக்கிரது.நானும் என் குழந்தைக்கு வசம்பு கட்டினேன் கைகளில்.

izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu

மேலும் சில பதிவுகள்