குழந்தைப்பேறுக்கு சித்தமருத்துவம்

தோழிகளே, என் நெருங்கிய உறவுப்பெண் ஒருவர் திருமணமான எட்டு வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கிறார். அதற்காக சென்ற வருடம் லேப்ரஸ்கோப் செய்தார். அப்போது அவர் கணவருக்கு செமன் டெஸ்ட் செய்த போது அவருக்கு கவுண்ட் பார்டரில் இருந்துள்ளது.ஆனால் டாக்டர் அதனால் ஒன்றுமில்லை, குழந்தைப்பேறுக்கான வாய்ப்புக்கு இந்த கவுண்ட் போதுமானதுதான் என்று கூறியுள்ளார்.அவர்களும் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால் பலன் இல்லை. ஆறு மாதம் ட்ரீட்மென்ட் எடுத்தும் குழந்தை உண்டாகவில்லை என்றதும், விரக்தியாக ட்ரீட்மெண்டை விட்டுவிட்டனர்.அந்த பெண்ணுக்கு ட்யூப் ப்ளாக் இல்லை. நீர்க்கட்டி பிரச்சினை மட்டும்தான். பீரியட்ஸும் நார்மல்தான். மருத்துவர் பரிந்துரைத்தும் இதுவரை ஐயுஐ செய்யவில்லை. இப்பொழுது சித்த மருத்துவம் முயற்சிக்கலாம் என்று நம்பிக்கையோடு கடந்த இருபது நாட்களாக மருந்து சாப்பிட்டு வருகின்றனர். இப்போது அவர் கணவருக்கு கவுண்ட் வெறும் இருபது மில்லியன்தான் உள்ளதாம். அவருக்கு மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகிவிட்டதாம்.இப்போது பிரச்சினை என்னவென்றால் பார்ப்பவர்கள் எல்லோரும் சித்த மருத்துவமெல்லாம் டுபாக்கூர் என்று சொல்கின்றனராம்.அதனால் அவர் இதை தொடரலாமா அல்லது அலோபதி முறைப்படி ஐயுஐ செய்யலாமா என்று யோசிக்கிறார்கள்.அந்த சித்த மருத்துவரோ விளம்பரத்தில் 45நாட்கள் மருந்து சாப்பிட்டு, 1மாதம் மருந்து சாப்பிட்டு 10 வருடம் குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை உண்டானது என்கிறார். தோழிகளே,குழப்பத்தில் உள்ள என் உறவுப்பெண்ணுக்கு தங்களுக்கு தெரிந்த விவரங்களை,அனுபவங்களை சொல்லி வழி காட்டுங்கள் தயவு செய்து.

தோழிகளே தயவுசெய்து உங்களுக்கு சித்த மருத்துவம் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள். என் உறவுப்பெண்ணுக்கு உதவுங்கள்.

siddha medicine na....palani test tube baby la nalla pakuranga...doctor senthamarai selvai...you must watch 2day,2marw and friday in Makkal tv maruthuva neram at 4 to 5 pm

Hi நந்தினி, சித்த மருத்துவம் என்பது டுபாக்கூர் எல்லாம் கிடையாது, எனக்கு தெரிந்த ஒரு தம்பதியினர் சித்த மருத்துவம் மூலம் தாய் தந்தை ஆகி உள்ளனர் ஆனால் 45 நாட்கள் என்பது எல்லாம் டுபாக்கூர் தான், கண்டிப்பாக அந்த treatment ஐ விட சொல்லுங்கள், நல்ல டாக்டரை பார்க்க சொல்லுங்கள்.

எனக்கும் 1.5 வருடமாக குழந்தை இல்லை, தைராய்டு மற்றும் நீர்கட்டி பிரச்சனை இருக்கிறது ஏதேதோ siddha treatment எடுத்தும் பலன் இல்லை இப்பொழுது 1.5 மாதமாக Life guard Tirupur Hosptal ல் treatment எடுக்கிறேன் ஒரே மாதத்தில் தைராய்டு நார்மல் ஆகிவிட்டது. இன்னும் 1.5 மாதத்தில் நீர்கட்டி scan செய்யவேண்டும். சரி ஆகும் என நம்பிக்கை வந்து உள்ளது

So ஒரு நல்ல டாக்டரை பார்க்க சொல்லுங்கள்- Gayathri

i am not well known about siddha. enakku 4 yrs kulanthai illama irunthathu. i done iui . my 4th cycle iui sucsess. i conceived. iui is good and increase the chances for sucsess.

i am not well known about siddha. enakku 4 yrs kulanthai illama irunthathu. i done iui . my 4th cycle iui sucsess. i conceived. iui is good and increase the chances for sucsess.

Enakum thyroid 0.4 athigamaga iruku nu dr. Sollitanga.. Athuku regular walking poga sonnanga.. Vera natural treatment ethathu neenga eduthukitingla thyroid reduce panrathuku? Pls sollunga

{~BE HAPPY ALWAYS~}

ungaluku kulzathaigal eruka

Hi மாலதி ,எனக்கு 9 points இருந்தது Morning regularஆ Tablet மட்டும் எடுக்க சொன்னாங்க, Skipping பண்ண சொன்னாங்க.

வணக்கம் தோழி. எனக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. நீர்க்கட்டி பிரச்சனை இருப்பதால் அலோபதி மாத்திரைகள் ஒரு வருடமாக‌ சாப்பிட்டேன். இப்போது சித்த‌ மருத்துவத்திற்கு மாறியுள்ளேன். இரண்டு மாதமாக‌ சித்த‌ மருந்து சாப்பிடுகிறேன். எனக்கும் குழப்பமாக உள்ளது. அலோபதிக்கே மாறலாமா? இதையே தொடரலாமா?..............

நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கு ஆசான்

Siddha la time agum pa.. better allopathy continue Panna solunga... ayurveda medicine m2-tonic neerkatti ku yeduka solunga .. semma effective.. Nan yeduthu 2 month conceive agiten...

மேலும் சில பதிவுகள்