பட்டர்நட் ஸ்குவாஷ் வாஸ் பகுதி - 1

தேதி: July 1, 2013

5
Average: 5 (3 votes)

 

பட்டர்நட் ஸ்குவாஷ் (Butternut Squash)
கத்தி (பெரியது ஒன்று, சிறியது ஒன்று)
பீலர்
ஆப்பிள் கோரர் (Apple Corer)
உட் கார்விங் டூல்ஸ் (Wood Carving Tools)
பேப்பர் டவல்
மிளகு
கடுகு
லாவண்டர்
டூத்பிக்

 

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பட்டர்நட் ஸ்குவாஷை நிறுத்திவைக்கும் போது சரிவாக நின்றால் அடியில் தேவையான இடத்தில் சிறிது வெட்டி நீக்கிவிடவும்.
காம்புப் பகுதியை வெட்டி நீக்கி பேப்பர் டவலினால் ஒற்றிவிடவும்.
மேலிருந்து சிறிது இடைவெளி விட்டு ஒரு சுற்றிற்கு வட்டமாகக் கீறிக் கொள்ளவும். அதேபோல இடைவெளிவிட்டு கீழே ஒரு சுற்று வட்டமாகக் கீறவும். (கீறும்போது ஆழம் ஒன்று அல்லது இரண்டு சென்டிமீட்டருக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளவும்). கீறிய இரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியை பீலரினால் மேலிருந்து கீழாகச் சுரண்டி நீக்கவும். இந்தப் பகுதியை வெட்டும் போது நீர் வடியக் கூடும். அவ்வப்போது பேப்பரினால் ஒற்றிவிடவும்.
உள்ளே உள்ள நரம்புகள் பச்சைக் கோடாகத் தெரியும். அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
அல்லது இப்படி இடையில் பிரித்துக் கொண்டு கத்தியால் சற்று ஆழமாகச் சுரண்டி எடுக்கலாம்.
கோளப் பகுதியையும் பீலரினால் சுரண்டவும். ஆழமாக இல்லாமல் சிறு சிறுத் துண்டுகளாக சுரண்டவும். (இல்லையெனில் சீரில்லாத தோற்றம் கிடைத்துவிடும்).
பறவை எங்கு வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும். (சாதாரணமாக காயின் சுற்றளவிற்கு, முன்புறம் ஒன்றும் பின்புறம் ஒன்றுமாக இரண்டு பறவைகள் வரையப் போதுமானதாக இருக்கும்). V டூலைக் கொண்டு பறவை வடிவத்தைக் கோதி எடுக்கவும். அலகுக்கு முனையிலிருந்து உள்ளாகச் சுரண்டவும். தேவையான இடத்தில் வெட்டுவதை நிறுத்திவிட்டு கத்தியால் அழுத்தினால் அந்தத் துண்டு தனியாக வரும். முதுகுக் கோடு வரைய, தலைப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பாதியளவு வந்ததும் நிறுத்திவிட்டு, மறுபக்கமிருந்து ஆரம்பித்து வந்து இரண்டையும் இணைத்துவிடவும்.
வால், இறக்கை என்று எந்தப் பாகம் வரைவதானாலும் கூராக வரவேண்டிய இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். டூலைக் இடையாகப் பிடித்து மெதுவாக அழுத்தியது போல நகர்த்தவும்.
இடைக்கிடையே சில இலைகள் வரைந்து கொள்ளவும். குருவியின் கழுத்து இறக்கைகளுக்கு V டூல் கொண்டு சிறிய அடையாளங்கள் வரையவும். கண்ணுக்கு கத்தி முனையை செங்குத்தாகப் பிடித்து சுழற்றி வெளியே இழுத்தால் போதும்.
பூ வரைவதற்கு, முதலில் சிறிய வளைவு உள்ள டூலினால் ஒரு வட்டம் வரைய வேண்டும். டூலை காயின் மேல் செங்குத்தாகப் பிடித்து அழுத்தாமல் சுழற்ற வேண்டும். தானாகவே மெதுவாக ஆழமாகும். பின்பு சற்று சரித்து ஒரு முறை சுழற்றினால் நடுத்துண்டு வெளியே வரும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்