மக்காச்சோள பாயாசம்

தேதி: July 5, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

உடைத்த மக்காச்சோளம் (Dry Corn) - முக்கால் கப்
வெல்லம் - 80 கிராம்
தேங்காய் பால் - அரை கப்
பால் - அரை கப்
சீனி - 4 மேசைக்கரண்டி
ஏலத்தூள் - சிறிது
வெண்ணெய் - 20 கிராம்


 

உடைத்த மக்காச்சோளத்தை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். வெல்லத்தை பொடி செய்து வைக்கவும்.
குக்கரில் ஊற வைத்த சோளத்துடன் 2 கப் நீர் ஊற்றி 5 விசில் வரும் வரை நன்கு வேகவிடவும்.
வெந்ததும் வெல்லம், பால், சீனி சேர்த்து கிளறவும்.
பிறகு ஏலத்தூள், வெண்ணெய், தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறவும்.
சுவையான, சத்தான மக்காச்சோள பாயாசம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு குறிப்பு..
கடைசி கப் ல இருகுறத எனக்கு குடுத்துடுங்களேன் எனக்கு எனக்கு பாயாசம் தான் ரொம்ப புடிக்கும் ஸ்வீட் டிஷ் லயே அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி,உங்களுக்கு இல்லாததா,அப்படியே எடுத்துக்குங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி சோளத்துல பாயாசம் இப்பதான் கேள்வி படுறேன் பார்க்கவே அருமையா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.