குழந்தை பிறந்து எத்தனை மாதங்களுக்கு பின் வேளையில் சேரலாம்

நான் தற்போது வேளை பார்த்துக்கொண்டிருக்கிறேன், எனக்கு ஜனவரி மாதம் டெலிவரி. பிறந்த குழந்தைக்கு எத்தனை மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வளர்க்க வேண்டும் என்பது பற்றி உதவி தேவை. வேளையில் சேர்ந்த பின் காளை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் தாய்ப்பால் கொடுக்கும் நிலைமை வரலாம். இதனால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம் என்று கேள்விப்பட்டேன். குழந்தையின் ஆரோக்கியத்தில் எந்த குறைவும் இல்லாமல் இதை எப்படி சரியாக செய்யலாம் என்று கூறவும். நன்றி.

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. குழந்தைக்கு ஆறு மாதம் ஆன பின் மசித்த, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரங்களைக் கொடுக்கத் தொடங்கலாம். உங்களுக்கு வேலைக்குப் போகவேண்டும் என்கிற கட்டாயம் இருந்தால், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நீங்கள் குழந்தைக்கு கட்டாயம் தய்ப்பால் கொடுக்க வேண்டும். நான் என் குழந்தைகளை துபாயில் பெற்றெடுத்தேன். இங்குள்ள டாக்டர்கள் குழந்தைக்கு ஆறு மாதம் முடியும் முன் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. என்னால், குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க முடியும். அதன் பிறகு பகல் நேரங்களில் எந்த விதமான உணவு கொடுக்கலாம்? குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த குறைவும் இல்லாமல் வளர்க்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாய் இருக்கிறேன்.

Priya

நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?? அதற்க்குத் தகுந்தாற்போல் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி லாக்டோஜென்(Lactogen), லாக்டோடக்ஸ்(Lactodex) போன்ற பவுடர் பால் கொடுக்கலாம்.. உங்களோட நிலைமை தான் எனக்கும் இருந்தது. குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் வரை தாய்ப்பால் தான் கொடுத்தேன். பிறகு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதால் பகலில் மட்டும் பவுடர் பால் கொடுக்கும்படி செய்தேன். வேலை முடிந்து வந்துவிட்டால் தாய்ப்பால் மட்டும் தான். நாங்கள் துபாயில் இருப்பதால் இங்கு கிடைக்கும் எஸ்26 கோல்ட்(S26 Gold) என்னும் பிராண்டை உபயோகப்படுத்துகிறோம். உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் அப்பகுதியில் வசித்தால் அவர்களிடம் கூட என்ன பால் பவுடர் வாங்கலாம்..? எங்கு வாங்கலாம்.? என்கிற ஆலோசனையை பெறலாம். ஆறு மாதங்களுக்கு பிறகு மற்ற ஆகாரங்கள் கொடுக்கத் தொடங்கலாம்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. நான் சிங்கப்பூரில் வசிக்கிறேன், ஆனால் டெலிவரி இந்தியாவில் தான். இங்கே நான் பார்க்கும் டாக்டர் டெலிவரி எங்கோ அங்கே இதைப்பற்றி கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். டெலிவரிக்கு இந்தியா போகும்போது தான் இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

Priya

மேலும் சில பதிவுகள்