பேட்ச் ஒர்க் குஷன் கவர்

தேதி: July 8, 2013

5
Average: 5 (10 votes)

 

இரு சமபக்க முக்கோண துணி (11.செ.மீ) - 24 (விரும்பிய 3 நிறங்களில் 8+8+8=24)
சதுர துணி (9.செ.மீ) - 4
பார்டருக்கு:
சதுர துணி (5.செ.மீ) - 4
நீள்செவ்வக துணி (5 செ.மீ - 35.செ.மீ ) - 4
ஜிப்

 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் குஷனின் முன்பக்கத்திற்கானவை. குஷனின் முன் பக்கம் தைத்தபின் அதற்கேற்ற அளவில் பின் பக்கத்திற்கும் துணியை வெட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த அளவுகளில் 40 செ.மீ அளவு குஷன் கவர் தயார் செய்யலாம். படத்தில் காட்டியபடி துணிகளை வெட்டிக் கொள்ளவும். (பொதுவாக இதற்கு அளவுகள் தேவைப்படாது. குஷனின் அளவிற்கேற்ப துணியை வெட்டிக் கொள்ளலாம்).
துணிகளின் டிசைனுக்கு பொருத்தமாக அனைத்து முக்கோணங்களையும் இரண்டிரண்டாக இணைத்து தைக்கவும்.
இதேபோல் 12 சதுர துண்டுகள் கிடைக்கும். அவற்றை அயர்ன் செய்யவும். ஓரத்திலுள்ள பிசிறுகளை வெட்டிவிடவும்.
பிறகு சதுரங்களை படத்தில் உள்ளது போல் இணைத்து தைக்கவும்.
தைத்த பின்னர் இவ்வாறு இருக்கும்.
பார்டருக்காக வெட்டி வைத்துள்ள சதுர துணியையும், நீள்செவ்வக துணியையும் எடுத்துக் கொள்ளவும்.
அவற்றை இதேபோல் ஒரங்களில் இணைத்து தைக்கவும். இப்போது முன் பக்கம் ரெடி
பின் பக்கத்திற்கு 42 செ.மீ.அளவில் சதுர துணியை எடுத்து, இதேபோல் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். இரண்டு துணியையும் ஜிப் வைத்து இணைத்து தைத்து குஷனின் பின் பக்கத்தை தயார் செய்யவும்.
தயார் செய்த முன் பக்கத்தையும், பின் பக்கத்தையும் இணைத்து தைக்கவும்.
இதேபோல் இரண்டு தயார் செய்து உங்கள் வீட்டு சோபாவை அலங்கரிக்கலாம். இவ்வாறு மூன்று தயார் செய்தால் டேபிள் ரன்னராக பயன்படுத்தலாம். நடுவில் ஸ்பாஞ்ச் வைத்து தைத்து கால்மிதியாக உபயோகிக்கலாம்.
அழகிய பேட்ச் ஒர்க் குஷன் கவர் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

குஷன் கவர்ன்னு பார்த்ததுமே நீங்க தான்னு தெரிஞ்சுடுச்சு. ;) ரொம்ப அருமை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

cusion cover roba super..

allah is great

நிகிலா அக்கா நலமா ?
பேட்ச் குஷன் வொர்க் எளிமையானா அழகான வேலைபாடு நல்லா இருக்கு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

//குஷன் கவர்ன்னு பார்த்ததுமே நீங்க தான்னு தெரிஞ்சுடுச்சு. ;)// எனக்கும். ;))
அழகா இருக்கு நிகிலா. சூப்பர்.

‍- இமா க்றிஸ்

அழகா இருக்கு,நிறத் தேர்வு அருமை,நானும் இது போல் செய்து உள்ளேன்.லைனிங் வைத்து செய்தேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பர்.எனக்கும்.குஷன் கவர்ன்னு பார்த்ததுமே நீங்க தான்னு தெரிஞ்சுடுச்சு.
அழகா இருக்கு நிகி. :)

Kalai

என்னோட கைவினைக் குறிப்பை வெளியிட்ட அறுசுவை குழுவினருக்கு முதலில் நன்றி.

நிகிலா,

குஷன் கவர் பார்க்க மிகவும் நன்றாக உள்ளது.. செய்ய வேண்டும் என ஆவல் வருகிறது... :)

குஷன் கவர்னு பார்த்ததுமே நான் தான்னு கண்டுபிடிச்சிடீங்களா?
முதல்ல வந்து பாராட்டி, ஊக்கப்படுத்தும் உங்க ஆர்வத்துக்கு என்னோட தான்க்ஸ் வனி

Kellvi ethilurunthu anuppanum enakku vantha pathilai eppati parpathu pls sollunga

மிக்க நன்றி

ரொம்ப நல்லாருக்கேன் கனி.
உங்க வீட்டில் தாத்தா.பாட்டி நலம் தானே.
வாழ்த்துக்கு நன்றி கனி.

akka yenaku kanna suthi karuvalayam ullathu athu poga vali sollunga pls

நன்றி இமா
எனக்கு விதவிதமா குஷனுக்கு டிரஸ் போட்டு பார்க்கப் பிடிக்கும்.
பாராட்டுக்கு நன்றி பா

நன்றி முசி.
லைனிங் கொடுத்தால் இன்னும் ஃபினிஷிங் நல்லா இருக்கும்.
கலர் பிடிச்சிருக்கா.
நீங்க செய்ததையும் அனுப்புங்க முசி.ஆவலுடன் காத்திருக்கிறோம்.

குஷன் கவர்ன்னு வந்ததும் நீங்களும் கண்டுபிடிச்சிட்டீங்களா.?
அப்போ இன்னொரு மாடலும் அனுப்ப வேண்டியது தான்.
நன்றி கலா

ஆர்வம் இருந்தால் போதும்.கட்டாயம் ட்ரை பண்ணுங்க.சுலபம் தான்.
நன்றி சாந்தினி.

http://www.arusuvai.com/tamil/node/add/forum/294
ithilirunthu ungkal kelviyai anuppunga

குஷன் கவர் ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்க அன்பான வாழ்த்துக்கு நன்றி கவி