பீட்ரூட் சாதம்

தேதி: July 10, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (10 votes)

 

சாதம் - 2 கப்
பீட்ரூட் - ஒன்று (சிறியது)
நெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கறுவா - சிறுதுண்டு
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 2
உப்பு, கறிவேப்பிலை, முந்திரி, பிளம்ஸ் - தேவைக்கேற்ப


 

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும், கறுவா, ஏலக்காய், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். பின்பு சீரகம், நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை அடுத்தடுத்தாக சேர்க்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறும் போது துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
தேவையெனில் சிறிது தண்ணீர் விட்டு பீட்ரூட்டை நன்கு வேகவிடவும். தண்ணீர் வற்றி வரும் போது உப்பை அளவாக சேர்க்கவும்.
பின்னர் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
பீட்ரூட் கலவை சூடாக இருக்கும் போதே அதில் சிறிது சிறிதாக சாதத்தை சேர்க்கவும். சாதம் முழுவதும் சிவப்பு நிறமாகும் வரை நன்கு பிரட்டிவிடவும்.
டேஸ்டி & கலர்புல் பீட்ரூட் சாதம் ரெடி. நெய்யில் பொரித்த முந்திரி, பிளம்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
அறுசுவைக்காக இந்தக் குறிப்பினை செய்து காட்டியவர் திருமதி. ஜனனி சிவமைந்தன் அவர்கள். அவர் செய்த பீட்ரூட் சாதத்தை ரசித்து, ருசித்துக் கொண்டிருப்பவர் அவரது கணவர் திரு. சிவமைந்தன் அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாy பீட்ரூட் சாதம் பார்க்கவே ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு நல்ல குறிப்பு :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கலர் ஃபுல்லா இருக்கு... வாழ்த்துக்கள்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஜனனி கலர் ஃபுல்லா இருக்கு... வாழ்த்துக்கள்.
குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று சொன்னீர்கள். படத்திலேயிருக்கிற உங்க பெரிய குழந்தைக்கும் என்று சொல்லவேயில்லையே

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

சூப்பர் :) கலரும் படங்களும் அழகோ அழகு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலக்கல் பீட்ரூட் சாதம். ட்ரை பண்ணுறன்.

//குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.// நானும் குட்டியம்மா சாப்பிட சமைச்சு இருக்கிறீங்கள் என்று நினைச்சன். சிவாதானா! ;)) ம்.. நடத்துங்க. வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

beetroot rice is very nice and one small doubt.,what is karuva????

ஹீ..ஹீ... இந்த படம் மேட்டர் மட்டும் என் கணவருக்கு தெரிஞ்சுது ...... :)
கருத்து தெரிவித்த , வாழ்த்திய அனைவருக்கும் நன்றி .

தாமரை செல்வி ... என்னது பெரிய குழந்தையா ? ரொம்பத்தான் குசும்புங்க உங்களுக்கு :))))))

கறுவா = பட்டை
கறுவாப்பட்டை :)
Thx imma...

//படம் மேட்டர்// ;))) முகநூல் சுவர்ல ஒட்டிவிடட்டா!! ;)))))

‍- இமா க்றிஸ்

வை திஸ் கொலவெறி ?

கலர்புல் சாதம் படங்கள் அழகு;

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கலர்ஃபுல் & ஹெல்த்தி சாதம் ரொம்ப நல்லாருக்குங்க வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அறுசுவையில் மிகவும் தாமதமாக வெளியான குறிப்பு இதுவாகத்தான் இருக்கும். கிட்டத்திட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் அனுப்பிய குறிப்பு இது.. :-) சிஸ்டம் ஒன்று மாற்றிய போது, அதில் மாட்டிக்கொண்டு எவர் கண்ணிலும் படாமல் போய்விட்டது. சில தினங்களுக்கு முன்பு வேறு காரணங்களுக்காக backup files ஐ ஆராய்ந்து கொண்டிருந்தபோது இந்த குறிப்பு கண்ணில் பட்டது. அப்போதுதான் இது வெளியிடப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. இத்தனை காலம் அது குறித்து எந்த கேள்வியும் எழுப்பாமல் பொறுமையாக காத்திருந்த சகோதரி ஜனனி அவர்களுக்கு எனது பாராட்டினையும், எங்களது தவறுக்காக வருத்தத்தையும் ஒரு சேர தெரிவிக்கின்றேன்.

இந்த விளக்கத்தை தந்ததற்காக மிக்க நன்றி அட்மின் அவர்களுக்கு , வருத்தம் எல்லாம் தேவை இல்லை :). உண்மையிலேயே இந்த குறிப்பு வருமா வராதா என்று சில நாள் காத்து இருந்தேன் .பிறகு மறந்தே போய் விட்டேன் . இப்படி எதிர்பார்க்காத நேரத்தில் வந்தது டபுள் சந்தோஷமே !

Karuva small piece --- what is this. not heard of it before

கருவா என்பது பட்டை.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

wow.................... super