சிக்கன் வெஜ் சூப்

தேதி: July 11, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (6 votes)

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 200 கிராம்
மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய கோஸ் - கால் கப்
அரை வட்டமாக நறுக்கிய கேரட் - கால் கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - கால் கப்
கொத்தமல்லித் தழை - சிறிது
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சில்லி ப்ளேக்ஸ் - ஒரு தேக்கரண்டி
சோளமாவு - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து 2 தேக்கரண்டி வெண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், மிளகு, கரம் மசாலா தூள் சேர்த்து பொரிந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக வெங்காயம், தக்காளி, கேரட், கோஸ் இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லித் தழை, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து சிக்கன் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதி வரும் போது சோள மாவுக் கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
நன்கு கொதி வந்ததும் மீதமுள்ள வெண்ணெயை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.
சுவையான சிக்கன் வெஜிடபுள் சூப் தயார். ப்ரெட் டோஸ்ட் (அ) ஆப்பம் (அ) சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால் மிளகுத் தூளின் அளவை ஒரு தேக்கரண்டியாகவும், பச்சை மிளகாயை ஒன்றாகவும் குறைத்து கொள்ளவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹாய் கனி சிக்கன் வெஜிடபுள் சூப் சூப்பரா இருக்கு, இங்க இப்ப இருக்கிற கிளைமெட்டுக்கு ஏத்த ரெசிப்பியா இருக்கு,அந்த கடைசி படத்தில இருக்கும் கப் வித் சூப் அன்ட் ஸ்பூன் எல்லாம் எனக்கே எனக்கு. இந்த வீக் ட்ரை செய்துடறேன், வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஹெல்தியான சூப் அருமையா இருக்கு கனி வாழ்த்துக்கள்.......

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர் சூப்பர். படமும் குறிப்பும் அருமையா இருக்கு. ட்ரை பண்ணிடுறேன் கனி. பெங்களூர் க்ளைமேட்டுக்கு சூப்பர்ங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்க்கு மிக்க நன்றி....
தாங்க்ஸ் பத்மா மேடம் ரொம்ப நல்லா வொர்க் பண்ணி இருகீங்க :-) :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சுமி அக்கா நலமா பேசி ரொம்ப நாள் ஆய்டுச்சு
அந்த கடைசி படதுல்ல இருகுற கப் ஸ்பூன் அண்ட் சூப் லாம் தாராளமா எடுதுகோங்க அக்கா உங்களுக்கே உங்களுக்கு தான்
நன்றி அக்கா வாழ்த்துக்கு :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் உங்களின் பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி அக்கா ஹ்ம்ம் கண்டிப்பா ட்ரை பண்னிட்டு சொல்லனும் எப்படி இருந்துச்சு நு

தாத்தாக்கு கால் சீக்ரமா சரியாக இந்த மாறி சூப் லாம் அடிக்கடி குடுக்க சொல்லி இருந்தாங்க டாக்டர் ...

அதான் ஒரு ட்ரை அக்கா பட் ரொம்ப நல்ல இருந்துச்சு

ஹ்ம்ம் சொன்ன் மாறியே அங்க இந்த சீசன் க்கு நல்லா இருக்கும் அக்கா நன்றி வருகைக்கும் பதிவுக்கும் :-)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி சூப்பர் குறிப்பு.... இப்போ இங்க மழை வந்துட்டு இருக்கு அதுக்கு தகுந்த மாதிரி சூப்.... வித் யுவர் ஃபர்மிஷன்.... பார்க்கும் போது அப்படியே எடுத்துக்கணும்ன்னு தோணுது...

வாழ்த்துக்கள் டியர்...

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

சுதா எங்கப்பா முன்ன மாரி பேசவே முடில நலமா ?

பர்மிஷன் லாம் எதுக்கு நான் ஏற்கனவே சுமி அக்கா க்கு இந்த பவுல் குடுகுறதா வாக்கு குடுதுடேனே ஹா ஹா ஹா அதனாலா நீங்க அவங்க கிட்ட இருந்து வாங்கிக்கோங்க..

வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி சுதா ...
முடிந்தால் அரட்டை பக்கம் வந்தா ஒரு குரல் குடுங்க ஓடி வந்துடுறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பரா இருக்கு.கடசி படம் அழகு;

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி அக்கா பதிவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சிக்கன் வெஜ் சூப், படங்களே அருமை. கலக்குங்க :-)

நட்புடன்
குணா

கனி சுவையான சூப் அருமையா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் குணா சார் பதிவுக்கும் வருகைக்கும் நன்றி...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஹாய் சுவர்ணா அக்கா நலமா ? பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

என்ன திடீர்னு சார்'னு கூப்பிடறீங்க :-)

நட்புடன்
குணா

இல்ல பேர் மட்டும் போடனும் னு தான் நினச்சேன்

ஆனானா இதுக்கு முன்னவும் உங்கள அப்டிதான் போடதான் நியாபகம் இல்லயா குணா அவர்க்ளே நு போட்டேனோ

அதனாலா சார் நு கூடவே போட்டுடேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சரிங்க, பெயர் மட்டும் சொன்னால் போதும், சார் எல்லாம் வேண்டாம்..

நட்புடன்
குணா

Yummy & healthy recipe with very perfect measures & method.
Like to try this recipe this week end,what is 1 cup measurement in this
recipe(in ml),that i can take 1/4 cup from that.Kindly reply plz.
I let u know the feedback,thanks.

Kani paarkumpothey aasaiya thunduthu...naan ithu varaikum soup tri panathila..sikkiram paniduvom.

Be simple be sample

ஹாய் ப்ரனேஷ் ரொம்ப லேட் ஆன பதிவுக்கு மன்னிக்கவும்....
(in ml )நீஙக் எத மென்ஷன் பண்ணி இருகீஙக்னு புரில
1 டம்ளர் தண்ணீர் (ml )கு 250 ,1/4 கப் நா நீங்க தண்ணிய 150 or 180(ml) அ குறச்சுகோங்க இது புரில நா கேளுங்க ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரேவதி அக்கா ஹ்ம்ம் சீக்ரமா பண்ணிட்டு எப்டி இருந்துச்சு நு சொல்லுங்க பதிவுக்கும் வருகைக்கும் நன்றி....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Thanks for the reply.
Neenga vegetables yellam 1/4 cup measure kodhuthirukeenga.
Endha measurement cup ku (ml) 1/4 cup eduthu seiyanum.
This is my question,please reply me.
I let u know the feedback,thanks.

ஹாய் நான் மெஷர் பண்னி இருகுரது நான் குடுது இருகுற் அகுறிப்புல இருகுற முதல் படத்துல இருக்குற மஞ்ச்ள் நிர கப் அளவு தான்.

உங்களுக்கு தேவையான அளவுக்கு சின்ன கப் கூட அளவா பயன்படுத்தலான்
நான் குடுத்து இருக்குறது 4 பேர்க்கு உண்டான அள.வு
நீங்க உங்க வீட்டு நபர்களின் எண்ணிக்கைக்கு தகுந்த மாதிறி அளவை குறைத்தோ இல்லை கூட்டவோ செய்யலம்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Thanks for your quick reply.
Me too want to make it for 4 persons.
Yellow color cup enna measure(ml)?
Please let me know,thanks.

ஹாய் ப்ரனேஷ் நீங்க 4 பர்சன்ஸ்க்கு நா தாராளமா நா குடுத்து இருக்குற அளவே யூஸ் பண்ணலாம்

மஞ்சள் நிற கப் அப்ராக்ஸிமேட் ஆ ஒரு 200 ml இருக்கும்
ஆனா நீங்க அந்த 200 ml கப் ல அளவு தெரில நா ஒரு மீடியம் சைஸ் கேரட் 2, பெரிய வெங்காயம் 1 தக்காளி 1, கோஸ் பொடியாக நறுக்கி 5 ஸ்பூன் சிக்கன் எலும்பில்லாதது 5 ஸ்பூன் போன்ற அளவு பயன்படுத்தலாம்....

இந்த அளவு ல பண்ணுங்க சரியா வரும்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கனி,

சிக்கன் வெஜ் சூப் சூப்ப்பர்!!! படங்கள் அனைத்தும் பளிச், பளிச்சுனு உடனே சூப்பை செய்துபார்க்க சொல்லுது! :) சிக்கன் வாங்கினதும் ட்ரை பண்ணிட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.

அன்புடன்
சுஸ்ரீ

அக்கா உங்க அன்பான பதிவுக்கு என் நன்றிகள் :-) ட்ரைன் பண்ணிட்டு சொலுங்க அக்கா ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Hai akka, receipe is too good. I'll try this last sunday. Really superb.

ஹாய் சந்துரு அக்கானு லாம் கூப்டாதீங்க கனி நே கூப்டலாம் ..

ரெசிபி செய்து பாத்தீங்களா நன்றி.. வருகைக்கும் பதிவுக்கும்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்