காலையில் இனிய செய்தி,,,,

அன்பார்ந்த தோழிகளே.... நான் 3 வார கர்ப்பமாக உள்ளேன்...வரும் வெள்ளிக்கிழமை தான் டாக்டரிடம் செல்லவுள்ளேம்.... நான் என் கணவர் தனியாகத்தான் இருக்கிறோம்.. என் அம்மா காது ஆப்பரேஸனுக்காக இலங்கை சென்றுள்ளா...மாமியாரும் ரொம்ப தொலைவில் வசிக்கிறா...
அதனால் இப்போதைக்கு உதவி எனக்கு அறு சுவை தான்.... எனக்கு ரொம்ப டயடா இருக்கு... இங்கு இப்போ வின்டர்... எனக்கு என்ன சாப்பிடனும் என்ன செய்யனும் என்று ஒன்றுமே தெரியாது... காலையில் எழும்பி டீ குடித்து விட்டு போறிச் சாப்பிடுவேன்....

எனக்கு என்ன உதவி வேண்டுமென்றால் காலையில் இருந்து என்னென்ன செய்யலாம் என்டு யாராவது லிஸ்ட் சொல்ல முடியுமா??? எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... உணவு என்னென்ன சாப்பிடலாம் எந்த டைமில் சாப்பிடலாம்...எப்படி நடந்து கொள்ளவ்து....
வேறு என்ன விடயங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளலாம் .... காலையிலிருந்து இரவு வரை என்ன செய்யனும் என்பதை சொல்ல முடியுமா? இப்போதைக்கு எனக்கு அறு சுவை தோழிகள்தான் தாய்....
என் கணவர் என்னை நல்லா பர்த்துக்கொள்கிறார்...ஆனால் அவருக்கும் அனுபவமில்லை.... 1 வருடம் முன்னாடி எனக்கு குழந்தை 3 மாதத்தில் இல்லாமல் போச்சு.... இங்கு வெள்ளைக்கார டாக்டர் தான்...அவங்க முறை வேற.... கடந்த வருடம் என் அம்மா கேட்டா டாக்டரிடம் பப்பாளி அன்னாசி சாப்பிடலாமா என்று...அதுக்கு அவங்க சாப்பிடலாம் அளவா சாப்பிடனும் என்று சொன்னாங்க....அதனால அம்மா க்கு பயம் வந்துட்டுஎதுவும் சாப்பிடலாம் என்று சொல்லீட்டாங்க....ஆனால் நான் அம்மாவிடம் கேட்டாமல் எதுவும் சாப்பிடுவதில்லை...ஆனால் இந்தமுறை எனக்கு பக்கத்தில் யாருமில்லை....அதுதான் தோழிகளான உங்களை அம்மாவாக நம்பியிருக்கேன்....

எனக்கு சலட் ரொம்ப பிடிக்கும் ஆனால் குளிரில் சாப்பிடலாமா என்று தெரியவில்லை... பழன்களை குளிர் காலத்தில் சாப்பிடுவதால் சளித்தொல்லை வராதா? நான் இப்படியெல்லாம் கண்டபடி கேட்கிறேன் என்ரு நினைக்கவேனாம்....கொஞ்சம் பயம்...இந்த தடவை எனக்கு குழந்தை வேனும்....பயமா இருக்கு....
யாராவது உதவி செய்வீங்களா???? பிளீஸ்....

அன்புள்ள லலிதா தாய்மை அடைந்ததற்க்கு வாழ்த்துக்க்கள்,நீங்கள் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என மனமார இறைவனை வேண்டுகிறேன். முதலில் பயம்.டென்ஷன் எல்லாம் உதறி வேறொரு நாட்டுக்கு அனுப்பிட்டு மனதை சந்தோசமாக வைத்துக்கொள்ளுங்கள். முதல் மூன்று மாதங்களுக்கு டயர்டாக இருப்பது சகஜம் தான். முதல் மூன்று மாதங்களுக்கு சூட்டை கிளப்பும் உணவுகளை தவிருங்கள். பிறகு உங்கள் விருப்பம் போல சாப்பிடுங்கள், ஆனால் எந்த உணவானாலும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றோடு இருக்காதீர்கள். இதனைப் பற்றி நம் தோழிகள் நிறைய சொல்லி உள்ளார்கள். நேரம் கிடைத்தால் இந்த லின்க் பாருங்கள், உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/no/1816

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கண்டிப்பாங்க....ரொம்ப தாங்ஸ்.... நான் லிங்கை பார்க்கிறேன்

தோழிகளே... நான் 5 வார கர்ப்பமாக இருக்கிறேன்....டாக்டரிடம் அடுத்த வெள்ளி தான் அப்பாய்ன்மென்ட் கிடைத்தது... எனக்கு இப்பவே வயிறு பொரிதாகி இருக்கு... கொஞ்சம் பயமா இருக்கு....

தொப்புளில் அப்பப்போ சிறிது வலிக்கும்.. காலிம் சிலவேளையில் உளைகிறது....இது நார்மலா என்று யாராவது சொல்லமுடியுமா?

இங்கு குளிர் அதிகம் என்பதால் கொஞ்சம் சூடான தண்ணீரில்தான் குளிப்பேன்... அதனால் சளி பிடிக்குமா?

மற்றும் வாந்திவரும்மாதிரி இருக்கும்....ஆனால் இன்னும் எடுக்கவில்லை....வரும் வாந்தியை எடுக்காமல் விடலாமா? ஏனெனில் எடுத்தால் திரும்ப திரும்ப வருமோ என்ற பயம்.

எனக்கு உணவுகளிலையே நூடில்ஸ் தான் ரொம்ப பிடிக்கும்...அதுவும் இப்போ எதுவும் சாப்பிட முடியவில்லை... அதனால் நிறைய காய்கறிகளை போட்டு சேமியா நூடில்ஸ் செய்து அடிக்கடி சாப்பிடுவேன்... இப்படி அடிக்கடி நூடில்ஸ் சாபிடலாமா? தயவ்ய் செய்து சொல்லுங்கள்

பயப்படாதீங்க,வயிறு பெரிதாகியிருக்கா(பார்வைக்கா?) இல்லை வயிறு உப்புசமா இருக்கா?
தொப்புள்வலின்னா சூடு இருக்கலாம். தண்ணீர் அதிகம் குடிங்க.காலையில் பல்துலக்கியதும் தண்ணீர் குடிங்க.சிசு வளரும்போது கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும்.
மேல் வயிறு வலித்து மோஷன் போச்சுன்னா சூடுதான்.கொஞ்சம் வெளக்கெண்ணெய் தொப்புளில் வையுங்க.தயிர் சேர்த்துக்கங்க.
வாமிட் வந்ததுன்னா எடுத்த்டுங்க.அப்போதான் அடுத்து சாப்பிட முடியும்.இல்லைனா தொண்டையிலேயே இருக்கமாதிரி இருக்கும். மேலும் பசிக்கு இன்னும் வாமிட் வரும்போல இருக்கும்.
நூடில்ஸ் வேணாம்.அப்படி வேணுனா எப்பவாவது ஒருதரம் சாப்பிடுங்க.அது சிலசமையம் ஒவ்வாமை ஏற்படுத்தி வாமிட் வரும்,பின் வேறு எதையும் சாப்பிட விடாது.
பழங்கள் சாப்பிடுங்கள்,எதுத்துக்கிட்டு வருவதுபோல இருந்தா ஆப்பிள்,வாழை கொஞ்சநால் அவய்டு பண்ணுங்க.சிட்ரிக் இருப்பதும் அதிகம் இப்போ வேணாம்,வாமிட் வரும்போது தொண்டை புல்லா எரியும்.சிட்ரிக்(எலுமிச்சை,சாத்துக்குடி) தவிர்தால் இப்படி இருக்காது.
திராச்சை,கொய்யா,ஆரஞ்சு,பிளம்ஸ் சாப்பிடலாம்.பபாளி,அன்னாசி வேணாம்.
தினமும் தயிரில் தாளித்து கொட்டி சாதம் எடுங்க.சூடு குறையும்.

உடல் தாங்கும் அளவு சுடுநீரில் குளிக்கலாம் தப்பில்லை. அங்கே குளிர்னு சொல்றீங்க,காலுக்கு சாக்ஸ்,கதுக்கு ஸ்கார்ஃப்,ரொம்ப தண்ணி சில்லுன்னு இருந்தா கைல தண்ணி பட்டதுக்கு பிற்கு துடைத்துட்டு க்ளவிஸ் போட்டுக்கோங்க.

ரொம்ப தாங்ஸ்ங்க....
வயிரு உள்ள இருந்து தள்ளுற மாதிரி இருக்கு. ஆனால் தொட்டுப்பார்க்கும்போது ஸ்சொப்டாக இருக்கு... நான் 3 நாட்களாக மைசூர் பருப்பு சாப்பிட்டேன்..ஆனாலும் வாய்வைக்குறைக்க அதில் பூண்டை அதிகமாக சேர்த்தேன்...அதுதான் வாய்வுத்தொல்லையால் வயிரு ஊதியிருக்குமோ தெரியவில்லை. ஆமாங்க நீங்க சொல்ரது சரிதான். நான் நேற்று வழக்கத்தைவிட 3 டம்ளர் தண்னி அதிகமாக குடித்தேன். அவ்வளோவா வலி இல்லை.. எனிமேல் அப்படியே செய்கிறேன்.
எனக்கு வாமிட் வாற மதிரி பீலிங்தான் இருக்கு. கடவுளே என்று வரவில்லை. குளிர் அதிகம் என்பதால் தயிர் பழங்கள் சாப்பிட பயம். இருந்தாலும் சிறிது சிறிதாக சேர்த்துக்கொள்கிறேன்.

எத்தனையாவது மாதத்தில் குழந்தைக்கு இதயத்துடிப்பு வரும்? போன தடவை இதயத்துடிப்பு வராமலையே எனக்கு டீஎன்சீ செய்தோம்...ரொம்ப கவைப்பட்டோம். அதனால் தான் இந்ததடவை ரொம்ப கெயர்புல்லாஇருக்கோம்....பிடிக்காட்டியும் குழந்தைக்காக் எல்லம் சாப்பிடுகிறேன். கடவுளில் பாரத்தைபோட்டுள்ளோம்.

அறு சுவையும் சகோதரிகளான் நீங்களும் செய்யும் உதவிகளுக்கு கோடி நன்றிகள். இப்படி ஒரு அருமையான் இழையை தொடங்கிய அட்மின்ட் குழுவிற்கும் மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்.

ஹாய்...இன்று நான் டாக்டரிடம் சென்றேன்... சற்று பதட்டமாகவே இருந்தது.... குழந்தை மற்ரும் இதயத்துடிப்பு எல்லாமோ ஓக்கே என்ரு சொன்னார்.....ரொம்ப சந்தோசமா இருக்கு...எனக்கும் கணவருக்கும் ஏதோ வானத்தில் பறப்பது போன்ற சந்தோசம்....கடவுளுக்கு கோடி நண்றிகள்.....

மேலும் சில பதிவுகள்