பைத்தியம்

அன்பு தோழிகளே என்னுடன் படித்த தோழிக்கு ஒரு பிரச்சனை அவளுக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவள் முன்பு வேலை செய்த கம்பெனியில் உடன் வேலை செய்த ஒருவரை அண்ணன் என்று பாசத்துடன் அழைப்பாள். அந்த நபரும் தங்கை என்று அழைப்பார். ஒருவர் வீட்டிற்கு ஒருவர் பழக்கமாகி பாசமலர் தொடர்ந்தது. இப்பொழுது என் தோழியின் உடன் பிறவா அண்ண்னுக்கு ஒரு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. பிரச்சனை என்னவென்றால் அது என் தோழிக்கு பிடிக்க்வில்லை. தன் அண்ணனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக நினைத்து அழுகிறாள். தூங்குவதில்லை, சரியாக சாப்பிடுவதும் இல்லை.பைத்தியம் பிடித்தவளை போல நடந்துக் கொள்கிறாள். உடல் நிலை மோசமாகி விட்டது. அவளை எவ்வாறு தேற்றுவது என்று தயவு செய்து எனக்கு பதில் கூறவும்

அவருக்கும் ஒரு வாழ்க்கைத் துணை அமைந்தால் எல்லாம் சரியாகும்.கூடுதலான அன்பு வைத்ததால் அவருக்கு கஷ்டமாக இருக்கிறது.அவரின் மனதை வேறு பக்கம் மாற்றினால் சரியாகும்.

இவ்வளவு நாள் இவங்க கூடவே இருந்து இப்போ இன்னொருத்தங்க வரது அவங்களால ஏத்துக்க முடியல அதான் அதோட அண்ணன் அன்பு இவங்களுக்கு மட்டும் கிடைச்சுட்டு இருந்துச்சு இப்போஅதை பங்கு கேட்க இன்னொருதங்க வந்துட்டாங்கன்னு கஷ்டமா இருக்கு போல. அண்ணன எவ்வளோ பிடிக்குமோ அதே அளவு அண்ணியையும் பார்க்க சொல்லுங்க சரியாவாங்க, அண்ணன்னுக்கு ஒரு நல்லது நடக்குதுனா தங்கச்சியா இவங்க சந்தோஷம் தான படனும்.

hai

நீங்க உங்க ஃப்ரெண்ட்டை பைத்தியம்னே முடிவு பண்ணீட்டீங்களா ;) தலைப்பை சொன்னேன்.

சரி.. உங்க ஃப்ரெண்ட்க்கு எக்ஸ்ட்ரீம் பொஸஸிவ்னஸ். அதுவும் சொந்த அண்ணன் அல்லாதவரிடம். இப்ப கல்யாணம் என்பது பிடிக்கலன்னா... அதுக்கு நிறைய காரணம் இருக்கலாம். ஒன்னு அவர் சொந்த அண்ணன் இல்லை, அதனால் கல்யாணம் பண்ணி வரும் பெண் பழையபடி அவரை இங்கு வர விடுவாரா, நம்மோடு பழக விடுவாரா என சந்தேகம் இருக்கலாம். இனி அந்த பழைய அன்பு கிடைக்காது என எண்ணம் இருக்கலாம். இன்னும் நிறைய... அதெல்லாம் விடுவோம். இப்போதைக்கு கண்டுக்காதிங்க... ;) நிஜமா தான் சொல்றேன். இது போல் பொஸஸிவா பிஹேவ் பண்றவங்களை கொஞ்சம் கண்டுக்காம விட்டா தானா எதார்த்தத்தை புரிஞ்சுக்குவாங்க. அவங்களுக்கு ஒரு நிச்சயம் ஆனா அப்பறம் பிசி ஆயிடுவாங்க :P அண்ணன் தானா வந்து பேசினாலும் டைம் இல்ல அண்ணான்னு சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதில் அளித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல. வனிதா அவர்கள் சொல்வது போல் நான் என் ப்ரெண்ட பைத்தியம் என்று நினைக்கவில்லை.
அவள் அது போல் நடந்துக் கொள்கிறாள். இதற்கு உடனே தீர்வு கிடைக்க வேண்டும் என நினைத்துதான் அந்த தலைப்பைக் கொடுத்தேன். அவள் அண்ணனை தவிர யார் அவளிடம் பேசினாலும் எரிந்து விழுகிறாள். வனிதா அவர்கள் சொன்னது போல கூட பிறந்தவள் இல்லை என்பதால் அண்ணியின் எண்ணம் எப்படி இருக்குமோ என்று பயப்படுகிறாள். பார்க்கவே பாவமாக உள்ளது. பாசம் கூட பைத்தியம் ஆக்கும் என்பதை இங்கே தான் பார்க்கிறேன்.

தோழிகளே நாங்கள் இருப்பது வட சென்னை யாருக்காவது மனோதத்துவ டாக்டர் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்