சிறுமியருக்கான பிறந்தநாள் வாழ்த்திதழ்

தேதி: July 18, 2013

5
Average: 5 (13 votes)

 

சிவப்பு நிற டெக்ஸ்ச்சர்டு A4 கார்டு (Red Colour Textured A4 card ) - 2
அலங்கரிப்பதற்கு:
ஹேர் டிரெஸ்ஸிங் கிட் (Hair Dressing Kit) அல்லது இவை போன்ற வடிவில் பட்டன்கள்
பீட் ஸ்ட்ரிங் (Bead String)
சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி
கல் பதித்த ஃப்ரேம்
ஹாப்பி பர்த்டே கான்ஃபிடி (Happy Birthday Confetti)
ஸ்கேல்
ஸ்கோரர் (Scorer)
கத்தி
கத்தரிக்கோல்
குரடு
நைலான் நூல் & ஊசி
வெள்ளை நிற பேனா
க்ளூ
டபுள் சைடட் டேப் (Double Sided Tape)
3D ஸ்டிக்கர்கள் (3D Sticky Squares)

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அட்டையின் டிசைன் உள்ள பக்கத்தின் நடுவில் ஸ்கோரர் வைத்து அழுத்தி ஒரு கோடு வரையவும்.
கோடு வரைந்த இடத்தை மையமாக வைத்து அட்டையை இரண்டாக மடித்து அழுத்தவும். இதே போல இரண்டாவது அட்டையில் டிசைன் இல்லாத பக்கத்தில் கோடு வரைந்து அழுத்தி மடித்துக் கொள்ளவும்.
இரண்டாவது அட்டையை முதலாவது அட்டையினுள் சொருகி ஒன்றாக வைத்து வலது புறமுள்ள திறந்துள்ள பக்கத்தை ஒரு முறை சீராக வெட்டிவிடவும்.
இதே போல அட்டையின் மேல் மற்றும் கீழ் பக்கங்களையும் சீராக வெட்டிவிடவும்.
உட்பக்க அட்டையின் வலது புறத்தில் மேல் பக்கப் பாதியில் இப்படி வெட்டிக் கொள்ளவும்.
இனி அட்டையைத் திருப்பி நடு மடிப்பிலும், வலது புறத்தின் கீழ்ப் பகுதியிலும் டபுள் சைடட் டேப் ஒட்டவும். மற்றொரு அட்டையின் நடுவே இதை வைத்து சரியாகப் பொருத்தி ஒட்டிவிடவும். உட்பக்கம் பாக்கெட் போலிருக்கும் இடத்தில் அன்பளிப்புத் தொகையை வைத்துக் கொள்ளலாம். (இடது புறமுள்ள இரண்டு பக்கங்களையும் இப்போது இணைத்து ஒட்டிவிட வேண்டாம்).
வெள்ளைப் பேனாவினால் காட்டியுள்ளது போல பார்டர் வரைந்து உலரவிடவும்.
பின் இடது புறத்தில் இணைக்காமல் வைத்துள்ள இரண்டு அட்டைகளில் முன் பக்கமுள்ள ஒரு அட்டையில் மட்டும் பீட் ஸ்ட்ரிங் வைத்துத் தைக்கவும். தைக்கும் போது முடிச்சுகள் அட்டையின் பின் பக்கமாக இருக்க வேண்டும். அதன் பின் இரண்டு அட்டைகளையும் சேர்த்து டபுள் சைடட் டேப் போட்டு ஒட்டிவிட்டால் தையல்களின் முடிச்சுகள் அனைத்தும் உள்ளே மறைந்துவிடும்.
கார்டின் முன் பக்கம் மேலே நடுவில் கண்ணாடியை டபுள் சைடட் டேப் கொண்டு ஒட்டவும். க்ளூ வைத்தால் ரசம் விட்டுப் போய் கண்ணாடியில் அடையாளம் தெரியும், கண்ணாடி கழன்றுவிடவும் கூடும். ஃப்ரேமை நான்கைந்து இடங்களில் 3D ஸ்டிக்கர்கள் வைத்து ஒட்டிக் கொள்ளவும். பட்டன்களின் கொக்கிகளை குரட்டால் வெட்டி நீக்கவும். தேவைக்கேற்ப 3D ஸ்டிக்கர்கள் கொண்டோ அல்லது டபுள் சைடட் டேப் கொண்டோ ஒட்டி விடவும். ஹாப்பி பர்த்டே கான்ஃபிடியை மட்டும் க்ளூ வைத்து ஒட்டவும். வாழ்த்திதழைப் பார்க்கும் போது நடுவில் தன் முகம் தெரிவது பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
வாழ்த்துக்களை வெண்மையான பேனாவினால் எழுதினால் பளிச்சென்று இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகு... கலரும், கார்டும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்பவும் அழகா இருக்கு இமா

ரொம்ப அழகா இருக்குங் மா, வாழ்த்திதழ் சிறுமியர்க்கு மட்டும்தானா? ;-)

நட்புடன்
குணா

வாழ்த்திதழ் ரொம்ப அழகா தெளிவா செய்திருக்கிங்க இமா! சிம்ப்ளி சூப்பர்!

அன்புடன்
சுஸ்ரீ

இமாம்மா வாழ்த்திதழ் ரொம்ப அழகா இருக்கு. கலரும் சூப்பர்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமாம்மா ரொம்ப கியூட்டா இருக்கு கலர் காம்பினேஷன் சூப்பர் .... அருமை அருமை

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மிக்க நன்றி வனி, கவி, சுஸ்ரீ, கனி & நிகிலா. :-)
குணா... எனக்கு குட்டீஸ் கார்ட்தானே செய்ய வதுரு. :-)

‍- இமா க்றிஸ்

கலர் சூப்பர். அழகான கார்டு.வாழ்த்துக்கள் ஆன்டி

Kalai

;) மிக்க நன்றி
~~~
மேல என்ன தட்டி இருக்கேன்னு எனக்கே புரியல. ;) தூங்கித் தூங்கித் தட்டி இருப்பேன் போல. இப்போ மாற்ற முடியல. ப்ளீஸ்... 'வருது' என்று மாற்றிப் படிங்க மக்கள்ஸ். :-)

‍- இமா க்றிஸ்