தாயின் கதறல்

என் மகனுக்கு 2 வயது.அவன் 1 வருடமாக சாப்பிடும்பொது வாந்திஎடுக்கிரான்.பால் குடித்தாலும் இதே தான்.நானும் எதனயோ டாக்டர் பார்த்துவிட்டேன் ஒரு பயனும் இல்லை.நல்லா குண்டா இருந்தான் ஆனால் இப்பொழுது மிகவும் ஒல்லியாக ஆகிவிட்டான்.2 வருடம் தவம் இருந்து பெற்ற பிள்ளை இப்படி கஷ்டபடும்பொது மிகவும் வேதனையாக உள்ளது.கஷ்டபட்டு ஊட்டியதை வாந்தி எடுக்கிறானே என்று கோவத்தில் நன்றாக அடித்து விடுகிறேன்.பிறகு தான் தெரிகிறது நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று.அவன் அழுவதை பர்க மனது வலிக்கிறது. இந்த வாந்தியை நிறுத்த என்ன வழி தயவு செய்து தெரிந்தால் சொல்லுங்கள் உங்கள் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன்.என் மகனுக்காக வேண்டிகொள்ளுங்கள்.

நீங்க கவலை படாதீங்க .எங்க இருக்கீங்க.வசம்பை கையில் குழந்தைக்கு கட்டுவாங்களே ,அதை கட்டி பாருங்க

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்
அவனுக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் சாப்பிடக் கொடுங்கள். ஏனென்றால் இஷ்டப்பட்டு சாப்பிட்டால் வாந்தி வராது.
வயிறு முட்ட சாப்பிட வைக்காதீர்கள். அரை வயிறு சாப்பிட்டால் போதும். 3 வேளை உணவை 10 வேளையாக பிரித்து கொடுங்கள்
1அல்லது 2 வேளை சாப்பிடவில்லை என்றாலும் விட்டு விடுங்கள். சாப்பாட்டை திணிக்காதீர்கள். பசிக்கும் போது மட்டும் சாப்பாடு கொடுங்கள்
சாப்பிடவில்லை என்றால் திட்டாதீர்கள்
கல்லிரல் குறைபாடு இருந்தாலும் இந்த பிரச்சனை வரலாம்.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

//1 வருடமாக சாப்பிடும்பொது வாந்திஎடுக்கிரான்.// //எதனயோ டாக்டர் பார்த்துவிட்டேன் ஒரு பயனும் இல்லை.// அப்படியானால் பெரிதாக பிரச்சினை இராது என்று தோன்றுகிறது. தாமரை சொன்னது போல இருக்கலாம் என்பதுதான் என் எண்ணமும். திணிக்க வேண்டாம். குண்டு, ஒல்லி எல்லாம் பிரச்சினை இல்லை. குழந்தை ஓடியாடி விளையாடுகிறாரா?

//பிள்ளை இப்படி கஷ்டபடும்பொது // வாந்தி & மெலிந்து இருப்பதைத் தவிர வேறு என்ன விதத்தில் கஷ்டப்படுறார்? சொன்னால் ஏதாவது யோசனை சொல்லலாம்.

//கஷ்டபட்டு ஊட்டியதை வாந்தி எடுக்கிறானே// அதுதான் பிரச்சினை போல இருக்கு. திணிக்காதீங்க. உங்களுக்கு பயப்படுறாரா? இரண்டு வயசுக் குழந்தையை அடித்தால் எப்படி? உங்களுக்குப் பயத்தில் கொடுக்கிறதை பிடிக்கிறதோ இல்லையோ, பசிக்கிறதோ இல்லையோ முழுங்கி வைக்கிறார் போல இருக்கு. உணவுவகையை மாற்றிப் பாருங்க. என்ன வேணும் என்று கேளுங்க. மிரட்டாதீங்க. பாலும் பிடிக்காம போயிருக்கலாம். சுவைக்கு ஏதாவது சேர்த்துக் கொடுத்துப் பாருங்கள். குடித்து முடித்ததும் ஏதாவது ரிவார்ட் கொடுக்கலாம்.
அவருக்கும் உங்க சாப்பாடா? இல்லை தனி சமையலா? தனி சமையலானால் அதை முதல்ல நீங்க சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

இமா மேடம் சொல்ற மாதிரி சாப்பாடு ஊட்டுறதுக்கு முதல் நீங்க சாப்ட்டு பாருங்க. பாலா இருந்தாகூட கண்டிப்பா நீங்க டேஸ்ட் பண்ணிட்டு குடுங்க. ஸ்நாக்ஸ் அதிகமா குடுக்காதீங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தாமரை சொல்வது போல பிரிச்சு கொடுங்க அப்படியே ஊட்டி முடிக்கனும்னு நினைக்காதீங்க, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட கொடுங்க, சாப்பாடு மேல அவருக்கு ஈடுபாடு வரவைங்க முதலில் நீங்க அவனுக்கு முன்னாடி ருசிச்சு சாப்பிட்டு காமிங்க. விளையாடவிட்டு வேற எதிலாவது அவருக்கு இண்ட்ரஸ்ட்டிங்கா செய்துகிட்டே ஊட்டி பாருங்க.

Food Allergy Problem, Ethavadhu irrukiraratha enru check pannugana!!

என்னுடைய மகனுக்கும் இதே பிரச்னை இருக்கிறது, 2 1/2 வயது ஆகின்றது. நாங்கள் வாந்திச் கிளீன் பண்ணாத இடமே இல்லை என்று சொல்லலாம். எது சாபிட்டலும் வாந்தி எடுப்பான். நாங்கள் செய்யும் சிலதை சொல்கிறேன், முயற்சி செய்து பாருங்கள்.
1. சாப்பிட்டதும் விளையாட விடாதீர்கள். no jumping and running
2. force பண்ணி சாப்பிட ஊட்டதிர்கள்
3. பிடித்த உணவை கொடுங்கள்.
4. சாப்பிட கொடுத்தும் தூங்க வைக்கர்தீர்கள்
5. என் பையன், ரொம்ப சிரித்தாலும் சரி அழுதாலும் சரி உடனே வாந்தி தான், அதனால் அதிலும் கவனமாக இருப்போம்.

கொஞ்சம் கவனித்து எப்போதேலாம் வாந்தி எடுக்கிறான் என்று பார்த்து அது படி மாற்றி கொள்ளுங்கள்.
தயவு செய்து அடிக்காதீர்கள், குழந்தை பாவம்...தெரிந்து செய்வதில்லை..

thanks,
Suji

என் மகனுக்கும் சிறு வயதில் இந்த பிரச்சினை இருந்தது...அவனுக்கு ஏப்பம் வந்தால் வாந்தி வந்துவிடும். அதனால் கொஞ்சம் தான் சாப்பிட குடுப்பேன்/குடுக்கிறேன்.. நடுவில் பசித்தால் அவனே எடுத்து சாப்பிடும்படி சிறு கேரட், பிஸ்கட், சிறு வாழைப்பழம், நட்ஸ் வாங்கி வைத்து விடுவேன்..அவனுக்கு அதே போல் பால் அதிகம் குடுக்காமல் பால் பாதி, தண்ணிர் பாதி என காய்ச்சி ஒரு டீஸ்பூன் பீடியாசூர் போட்டு குடுப்பென்..அதுவும் சிறிய டம்ளர் அளவுதான்....அப்புறம் என் பையனுக்கு கஞ்சி மற்றும் அல்வா பதம் போல ஏதாவது குடுத்தாலும் வாந்தி எடுப்பன்..எனவே அந்த மாதிரி குடுப்பதை தவிர்ப்பேன்...பால் வாசம் கூட சில குழந்தைகளுக்கு வாந்தி வரவைத்து விடும்..அதை தவிர்த்து நிறைய தயிர் குடுங்க...எது குடுக்கும் முன் வாந்தி எடுப்பான் என நினக்காம குடுங்க....நாங்களும் அவருக்காக வேண்டிக்கிறோம்...வாழ்க வளமுடன்..

try omam water often...good for digestion...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.உங்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி.
அஸ்வதா என்னிடம் வசம்பு இல்லை பா.
தாமரை நீங்கள் சொல்வது போல் முயற்சி செய்து பார்க்கிறேன்.இந்த பிரச்சனைக்காக ஒரு முறை அவன் வயிற்றை scan செய்தேன் கல்லீரலில் பிரச்சனை இருந்தால் அதில் தெரிந்து இருக்காதா?
இமா மேடம் அவன் நன்றாக விளையாடுவான்.அவனுக்கும் எங்க சமையல் தான்.பாலில் கலந்து தான் கொடுக்கிறேன் சாப்பிடும் விஷ்யமே அவனுக்கு பிடிப்பதில்லை மற்றபடி படு சுட்டி.
உமா அவன் ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் சாப்பாடு சாப்பிடா விட்டால் கூட நான் கவலை பட மாட்டேன்.
தேவி தண்ணீரில் விளையாட விட்டால் ஓரளவு சாப்பிடுவான் ஆனால் சளி பிடித்தால் சுத்தம் வாந்தி அதிகமாகி விடும்.
maclin food allergy இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது?
Newmom நீங்கள் சொல்வது 100% உண்மை உங்களுக்கு கோவம் வராதா?
Raji நன்றி பா அவனுக்காக வேண்டிகொள்வதற்கு.

மேலும் சில பதிவுகள்