கொத்து பரோட்டா

தேதி: July 27, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (9 votes)

பரோட்டா - 4
கீமா - 50 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முட்டை - 2
கொத்தமல்லித் தழை - சிறிது
எலுமிச்சை சாறு - சிறிது
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

பரோட்டாக்களை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். கீமாவுடன் சிறிது இஞ்சி, பூண்டு விழுது, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலா தூள், கொத்தமல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, வேக வைத்த கீமாவைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பின்பு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
கடைசியாக பரோட்டாவை சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான கொத்து பரோட்டா ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

அக்கா சூப்பர்..... அந்த கடைசி ப்ளேட் பார்சல் ப்ளீஸ்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அஸ்ஸலாமுஅலைக்கும் ம்ம்ம் நல்லா இருக்கும்ன்னு தான் நினைக்கிறேன் எனக்கும் நல்லா வறனும் இன்ஷா அல்லாh பாப்போம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

பேரை பாத்ததும் முசியாதான் இருகும்னு நெனச்சேன்,அதேதான்,நானும் இப்படிதான் செய்வேன்,நோன்புல விதவிதமா செஞ்சி அசத்துரீங்க போங்க.

Eat healthy

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிடும் உங்கள் அன்பிர்க்கும் நன்றி,உமா.அப்படியே எடுதுக்குங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாஅலைக்கும் சலாம்,செய்து பாருங்க பல்கிஸ் நல்லா வரும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி ரஸியா,நோன்புக்கு விதவிதமாக தான் செய்கிறோம்,எல்லாத்தையும் போட்டோ எடுத்து அனுப்ப முடியவில்லை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முசி கொத்துபரோட்டா செமயா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முசி அக்கா கொத்து பரோட்டா கலக்கலா இருக்கே யம்மி சூப்பர் ரெசிபி ...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Mmm yammy yammy ..enakku pidicha dish..sikkiram tri panaraenpa.kaima kandippa pottey aaganuma..ilanalum paravaillaya

Be simple be sample

ஹாய் முசி அஸ்ஸலாமு அலைக்கும் கொத்து பரோட்டா பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு கீமாலாம் போட்டு அசத்தி இருக்கீங்க நோன்பு நாள நேரமே கிடைகள உங்களுக்கு போட்டோ எடுத்து போடறதுக்கு நேரம் இருக்கே சூப்பர்பா வாழ்த்துக்கள்

மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க நன்றி,செய்து பாருங்க.கீமா சேர்க்காமலும் செய்யலாம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ அலைக்கும் சலாம்,இங்க தான் பொழுது ரொம்ப பெருசா இருக்கே!!!!வாழ்த்திர்க்கு மிக்க நன்றி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இது போன்று சப்பாத்தியிலும் செய்யலாமா?

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!