கடி ஜோக்ஸ்

ஹாய் அறுசுவை தோழிஸ் கடி ஜோக்ஸ் மற்றும் விடுகதை இந்த த்ரெடில் பதிவு செய்யவும்.

டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.. இதுதான் உலகம்.
எப்புடி.......

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...

கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

யோசிக்கனும்............ ...!!

சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!

ஏன் என்ன சலிப்பு உனக்கு?

கல்யாண பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு.

இது எப்படி இருக்கு?

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

ரயில் வரும் போது ஏன் கேட்டை மூடிராங்க தெரியுமா?

தெரியலயே...

இது கூட தெரியலயா, கேட்டை மூடலேனா ரயில் ஊருக்குள்ள வந்துடும்.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

1.நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...

2.ஒரு சிறுவன் தனது செல்லில் சார்ஜ் செய்ய ஒரு கடைக்கு சென்றான். கடைக்காரரிடம் கேட்டான் "அண்ணா, 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எவ்ளோ ரூபாய்க்கு பேசலாம்?". அவர் சொன்னார் "6 ரூபாய்க்கு பேசலாம் தம்பி". அந்த சிறுவன் கேட்டான் "அப்ப மீதி 4 ரூபாய்க்கு முறுக்கு தாங்க".

3.மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது
குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...
புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு.

4.வருடம் : 1011

அண்ணளும் நோக்கினார் அவளும் நோக்கினாள்

வருடம் : 2011

அண்ணளும் ணொகிஅனார் அவளும் ணொகிஅனாள்

5.வாயில்லை, பல் இல்லை, ஆனால் கடிக்கும்! அது என்ன?

கை இல்லை, விரல் இல்லை, ஆனால் அடிக்கும்! அது என்ன?

கால் இல்லை, தரை இல்லை, ஆனால் ஓடும்! அது என்ன?

விடை தெரிந்தால் சொல்லுங்கள்.............

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

ஹாய் சத்யா... நல்ல இழை ஆரம்பிச்சிருக்கீங்க.. உங்க ஜோக்ஸும் நல்லா இருக்கு.. இனி நல்லா படிச்சி சிரிச்சிகிட்டே இருக்கலாம்.. நீங்கள் கேட்ட புதிருக்கு ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..
// வாயில்லை, பல் இல்லை, ஆனால் கடிக்கும்! // செருப்பு.. .
// கை இல்லை, விரல் இல்லை, ஆனால் அடிக்கும்! // பிரம்பு..
// கால் இல்லை, தரை இல்லை, ஆனால் ஓடும்! // கடிகாரம்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நாம் எலுத உபயோகிக்க முடியாத மய்?
நாம் கடித்து சாப்பிடவேன்டிய ரசம் என்ன?
நாம் படுத்து கொள்ள முடியாத பாய் எது?

ஹாய் மீகா, பதில் சொல்ல வந்துட்டேன்..
//நாம் எலுத(எழுத) உபயோகிக்க முடியாத மய்(மை)?//ஆமை
//நாம் கடித்து சாப்பிடவேன்டிய ரசம் என்ன?//அதிரசம்
மூணாவது கேள்விக்கு பதில் தெரியலப்பா... :(

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

நீங்க சொல்ரதும் சரிதான் பா.
வாயில்லை, பல் இல்லை, ஆனால் கடிக்கும்! // செருப்பு.. .
// கை இல்லை, விரல் இல்லை, ஆனால் அடிக்கும்! // புயல்.
// கால் இல்லை, தரை இல்லை, ஆனால் ஓடும்! // fan.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

1 ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

2 போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

3 மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா
4 மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tஎன்செ)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

5. நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

6 சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

7 .நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

8 நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* J to the A to the V to the A --JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

எதுக்கு எடுத்தாழும் gokula போய் பாரு gokula போய் பாருனு சொல்ரங்கபா. யாருடா அந்த GOKUL?.

FRIEND:டேய் டப்பா தலையா gokul அது இல்ல. google......

எப்புடி நாங்கலும் கலக்குவோம்ல........

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா, அதுல லோக்கல் கால், எஸ்.டி.டி கால், ஐ.எஸ்.டி கால், சொல்லப்போனா மிஸ்டு கால் கூட பண்ண முடியாது!

2. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.... காவேரி ஆத்துல மீன்
பிடிக்கலாம் .. ஆனா ஐயர் அத்துல மீன் பிடிக்க முடியுமா?

3. திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும் , அவரால ஒரு குரலில்
தான் பேச முடியும்....

எப்புடி.. :-)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்