அவசரம்.......அர்த்தம் (meaning) சொல்லுங்கள்

தயவுசெய்து கீழே இருப்பதன் விளக்கம் சொல்லுங்கள்.

The current course's(Msc in Advanced manufacturing systems -----------university) last accredited date 2012. The current intake is due for accredition. The preamble of the list gives the details on how to peruse the list. This is for your kind information.

அன்புடன்
ஜெயா

அன்பு ஜெயா,

எனக்குத் தெரிஞ்ச அளவில் அர்த்தம் சொல்லியிருக்கேன், இன்னும் தோழிகள் வந்து சொல்வாங்க.

முதல் வரி - கடைசியாக அங்கீகரிக்கப்பட்டது 2012ல்.

அடுத்து -

தற்போதைய .....அங்கீகரிக்கப்பட உள்ளது(இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை)

அடுத்து -

பட்டியலின் முன்னோட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. பட்டியலைப் படித்துப் புரிந்து கொள்ள இது உதவும்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மிக்கு உடனடி பதிலுக்கு மிக்க நன்றி....நன்றி.....நன்றி

அன்புடன்
ஜெயா

accredition பற்றி இன்னுமொரு சந்தேகம். அங்கீகரிக்கப்படவில்லையென்றால், அந்த university-ல் சேரக்கூடாதா?

அன்பு ஜெயா,

எனக்குத் தெரியலையே. அந்த யுனிவெர்சிடி ப்ரொஃபசர், பழைய ஸ்டூடண்ட்ஸ் யார்கிட்டயாவது விசாரிக்க முடியுமா, பாருங்களேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

Churner - இதன் தமிழ் உச்சரிப்பு என்ன என்று சொல்லுங்கள்.

அன்புடன்
ஜெயா

ஓரளவு சமீபமான உச்சரிப்பு - (ச்)சேன(ர்)
அடைப்புக்குறிக்குள் உள்ள எழுத்துகளை அழுத்தாமல் உச்சரிக்க வேண்டும்.

பாலிலிருந்து 'பட்டர்' கடைந்தெடுக்கப் பயன்படுத்தும் கருவி. (மத்தினையும் இதே பெயரால்தான் அழைக்க வேண்டும்.) முன்பு வைன் பாரல் அமைப்பில் பலகையிலான உருளைக்கு (இது ஒரு ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.) உள்ளே சுழற்றும் அமைப்பும் திருகுவதற்குக் கைபிடியும் வைத்து அமைத்திருக்கிறார்கள். இப்போ தொழில்நுட்பம் வேறு.

தாமதமாகப் பதில் சொல்வதையிட்டு மன்னிக்க வேண்டும் ஜெயா. தவணையின் கடைசி வாரம்; கூடவே வீட்டில்சில முக்கிய நிகழ்வுகள். பதில் சொல்ல இயலவில்லை.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா. ஒரு சிறுவன் கேட்டதற்கு மத்து என அர்த்தம் புரிந்தது. ஆனால் எப்படி Pronounce பண்ணுவதென்று தெரியவில்லை. இப்போது தெரிந்துகொண்டேன். இன்னும் விளக்கமாகவே சொல்லிவிட்டீர்கள்.

//தாமதமாகப் பதில் சொல்வதையிட்டு மன்னிக்க வேண்டும் ஜெயா.// ஐயோ! இது அவசரம் இல்லையே. முடியும்போது சொல்வதே போதும்.

மீண்டும் நன்றி, இமா.

அன்புடன்
ஜெயா

மேலும் சில பதிவுகள்