விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய் என்றால் என்ன எண்ணெய் ??? அதாவது எதிலிருந்து எடுக்க படுகிறது? Plz விளக்கெண்ணெய் இது கூட தெரியாதா ?? என்று என்னை திட்ட வேண்டாம்.நிஜமாவே எனக்கு தெரியாதுப்பா .

விளக்கெண்ணெய் என்பது ஆமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகையான எண்ணெய். இதை ஆங்கிலத்தில் Castor oil என்று பெயர். பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. உடலுக்கு குளிர்ச்சி.

Oh,ok.neendanaal doubt clear Thank u selva .

விளக்கெண்ணெயை எதற்கெல்லாம் பயன் படுத்தலாம்? தோழிகள் கூறவும்.

அன்புடன்
ரீஹா :-)

மாடுகளுக்கு பால் கறப்பதற்கு கையில் விளக்கெண்ணெய் போட்டு கொள்வார்கள்..

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் தொப்புளில் விளக்கெண்ணெய் போட்டு விடுவார்கள்..

திருநெல்வேலியில் சிலர் 1லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 100மி.லி விளக்கெண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தேய்த்து வருவார்கள்.. முடி கருமையாகவே இருக்கும்.. சிலர் வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய் தேய்த்து குளிப்பார்கள். சூடு தணியும்..

கர்ப்பிணி பெண்கள் 8மாதத்திற்கு மேல் வயிற்றில் விளக்கெண்ணெய் குளிர தேய்த்து வெந்நீரில் குளிப்பார்கள்..

கண் இமை முடி வளர விளக்கெண்ணெய் தேய்க்கலாம்.நான் சிறு வயதில் கண் மேல் இமையில் விளக்கெண்ணெய் வைத்து வளைத்து விடுவேன்.. இரவில் செய்வேன்..கண் இமைக்கும் சமயம் முடி அழகாக இருக்கும் தொடர்ந்து செய்து வந்தால்..

நன்றி இந்துஷா.
புருவத்தில் முடி அடர்த்தியாக வளர இதை தடவலாமா. குழந்தைகளுக்கு தலையில் தேய்க்கலாமா.

அன்புடன்
ரீஹா :-)

பெயரின் படி பார்த்தால் - விளக்கெண்ணெய் - விளக்கு நெய்! முன்பு இதைத்தான் வீடுகளில் விளக்கு எரிக்கப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இலங்கையில் பெயர் - ஆமணக்கெண்ணெய்

கண்மை செய்யப் பயன்படுத்துவார்கள். விளக்கெண்ணெய் விட்டு எரிய வைத்த விளக்குத் திரியில் உருவாகும் கரிமுட்டைகளைச் சேர்த்து விளக்கெண்ணெய் விட்டுக் குழைப்பார்கள். (திருத்தம் இருந்தால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.)

குழந்தைகளுக்கு வைக்கும் கறுப்புப் பொட்டு _ காய்ச்சி முடியும் தறுவாயில் அளவைப் பொறுத்து விளக்கெண்ணெயில் சில துளிகள் சேர்த்தால் பொட்டு பளபளப்பாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்