கேசரி புலாவ்

தேதி: October 30, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசுமதி அரிசி - இரண்டு கோப்பை
சர்க்கரை - ஒன்றரை கோப்பை
நெய் - அரைக்கோப்பை
முந்திரி - பத்து
திராட்சை - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - நான்கு
பட்டை - ஒரு துண்டு
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி
குங்குமப்பூ - அரை தேக்கரண்டி


 

அரிசியை களைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு கொதிக்கும் நீரில் அரிசியைப் போட்டு உப்பைச் சேர்த்து பொல பொல வென்று வடித்துக்கொள்ளவும்.
பிறகு வெந்த சோற்றுடன் சர்க்கரையைகொட்டி, குங்குமப்பூ கரைந்த ஒரு மேசைக்கரண்டி நீரை தெளித்து அல்லது மஞ்சள் நிற நீரை ஊற்றி நன்கு கலக்கி விடவும்.
பிறகு ஒரு வாயகன்ற சட்டியில் நெய்யை ஊற்றி முந்திரி திராட்சையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு பட்டை கிராம்பை போட்டு சர்க்கரை கலந்த சோற்றை கொட்டி, ஏலப்பொடியைத் தூவி நன்கு கிளறி விடவும்.
அடுப்பின் அனலைக் குறைத்து, மூடி போட்டு பத்து நிமிடம் வைத்திருந்து முந்திரி திராட்சையைத் மேலாகப் போட்டு அலங்கரிக்கவும்.
இந்த கேசரி புலாவை விருந்துக்களில் பக்க உணவாக செய்து சூடாக பரிமாறி பாராட்டை பெறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி அக்கா இப்போதான் சாப்பிட்டு வர்றேன்,சூப்பரா இருந்தது,நிச்சயம் விருந்துகளுக்கு ஏற்றது,திராட்சை இல்லை,அது மட்டும் போடவில்லை.

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றி ரேணுகா இந்த குறிப்பை செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி. நான் வருடா வருடம் கிருஸ்துமஸ் விருந்தில் இந்த இனிப்பை செய்வதுண்டு. இன்னும் பலவித பருப்பு வகைகளையும் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.