சக்கரத் தையல்

தேதி: August 5, 2013

5
Average: 4.6 (8 votes)

 

எம்ப்ராய்டரி ஃப்ரேம்
துணி
எம்ப்ராய்டரி நூல்
ஊசி

 

துணியில் ஒரு ரூபாய் நாணயம் அளவு ஒரு வட்டம் வரைந்து கொள்ளவும். வட்டத்தின் ஓரத்தில் அடிவழியாக ஊசியை விட்டு மேலே இழுத்து நூலை படத்தில் உள்ளது போல் பிடித்துக் கொள்ளவும். பிறகு ஊசியை வட்டத்தின் மையத்தில் விட்டு, அடிவழியாக கொண்டு வந்து முதலில் ஊசியை விட்டு இழுத்த இடத்திலிருந்து சற்று தள்ளி வட்டத்தின் ஓரத்தில் நுழைக்கவும்.
நுழைத்த ஊசியை அப்படியே மேல்நோக்கி இழுக்கவும். (நூல் அடியிலும் ஊசி மேலேயும் இருக்கும்).
மீண்டும் நூலை பிடித்துக் கொண்டு முதலில் தைத்தது போல வட்டத்தின் மையத்தில் ஊசியை விட்டு அடிவழியாக வட்டத்தின் ஓரத்தில் சிறிது இடைவெளி விட்டு இதேபோல் நுழைத்து மேலே இழுக்கவும்.
இப்போது பார்ப்பதற்கு சக்கரத்திலிருக்கும் சட்டங்கள் போல் கோடுகள் இருக்கும்.
இவ்வாறு வட்டம் முழுவதும் தைத்துக் கொள்ளவும். பிறகு துணியின் அடிப்பக்கத்தில் நூலை முடிச்சுப் போட்டு வெட்டிவிடவும்.
எளிமையான சக்கரத் தையல் ரெடி. வட்டம் வரைந்தபின் அதனுள் கோடுகள் (சக்கரம் போல) வரைந்து கொண்டால் தையல் போடுவதற்கு இன்னும் எளிதாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகா இருக்கு டீம். ஸ்கூல்ல சொல்லிக் கொடுக்கலாம். குறித்து வைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்