காட்டன் சேலை பராமரிப்பு பற்றி சொல்லுங்கள்

காட்டன் சேலைகளை எப்படி பராமரிப்பது. என்னிடம் நிறைய காட்டன் சேலைகள் இருக்கு ஆனால் அதை யூஸ் பண்றதுக்கு பயமா இருக்கு அதோட stiffness குறையாம இருக்க எதாவது டிப்ஸ் சொல்லுங்கள். சில்க் காட்டன் சேலை தான் அதிகம் வச்சிருக்கேன். காட்டனில் நிறைய ரகம் இருக்கு அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் எனக்கு காட்டன் தான் அதிக விருப்பம் ப்ளீஸ் சொல்லுங்கள் தோழிகளே.

உங்களுக்கு தெரிந்ததை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

ஹாய் சத்யா
எனக்கும் காட்டன் புடவைகள் ரொம்பவும் பிடிக்கும்.
ரிச் லுக் கிடைப்பது காட்டன் புடவைகளில் தான்.
பராமரிப்பு கொஞ்சம் மெனக்கெட வேணும்.
அடிக்கடி துவைக்க கூடாது.
பிரஷ் பண்ணக்கூடாது.
வாஷிங்க் மிஷினில் போட வேண்டாம்.
ரிவைவ் யூஸ் பண்ணலாம்.
நிழலில் உலர்த்தி அல்லது வீட்டினுள் ஃபேனுக்கடியில் போட்டு மீண்டும் அயர்ன் செய்து முடிந்தவரை நனைப்பதை தள்ளிப் போடப்பாருங்கள்.
நனைத்த பின் லுக் குறைந்து விடும்.
சில்க் காட்டன் புடவைகளை டிரைவாஷ் கொடுங்கள்.

ரொம்ப நன்றி நிகிலா அக்கா. காட்டன்ல வேற என்ன ரகம் இருக்குனு உங்களுக்கு தெரியுமா.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

மேலும் சில பதிவுகள்