ஈஸி மஷ்ரூம் சூப்

தேதி: August 15, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

1. மஷ்ரூம் - 10 [மீடியம் சைஸ்]
2. பூண்டு - 10 பல்
3. நெய் - 2 தேக்கரண்டி
4. பட்டை - ஒரு துண்டு
5. கொத்தமல்லி - சிறிது
6. மிளகு - தேவைக்கு
7. உப்பு


 

மஷ்ரூம் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பூண்டு தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மிளகை பொடி செய்து கொள்ளவும்.
பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை தாளிக்கவும்.
இது நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து பிரட்டி 2 - 3 கப் நீர் விட்டு தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்.
மஷ்ரூம் வெந்ததும் மிளகை தூவி ஒரு கொதி விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்.
சுவையான மஷ்ரூம் சூப் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Mam iam New to arusuvai unga receipts parkum pothey cook panni pakka aasaiya irukku samayal theriyatha vangakuda senja ennanu thonnum really it's super and yummy.mam unga receipes 3 items try pannen nalla vandhadhu sills doubts iruku kekkalama.ungala mam nu kupitalama

மிக்க நன்றி. :) அறுசுவை சார்பாக வரவேற்கிறேன். மேடம் எல்லாம் வேண்டாம்... வனிதான்னே கூப்பிடுங்க :) என்ன சந்தேகம்? சொல்லுங்க... எனக்கு தெரிஞ்சவரை கண்டிப்பா சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

parkave supera iruku nangalum try panurom mam.

sundaramurthy

அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது முதல் நன்றி,,,

பாபா நடமாடும் உணவகம் ( ரெய்கி குணா )
பேஸ்புக் :பாபா உணவகம் Facebook :babaunavagam / reikiguna