வடை கறி

தேதி: August 16, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (7 votes)

 

கடலைப்பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
தாளிக்க:
பட்டை - 2
லவங்கம் - 4
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி


 

கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கடலைப்பருப்பை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும்.
நன்கு கிளறிவிட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதித்து கெட்டியாக ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
கார சாரமான சென்னை ஸ்பெஷல் வடை கறி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்த்ததுமே நீங்க தான் உங்க குறிப்பு தான்னு கண்டு பிடிச்சுட்டோம்ல ;) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் வனி அக்கா மாதிரிதான் பாத்ததும் நீங்கதான்னு கண்டுபிடிச்சிட்டேன்.... கறி சூப்பர் ரேவ்ஸ்.....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரெசிபி ரொம்ப நல்லா இருக்கு அக்கா

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா &குழுவினர்க்கு நன்றி..

Be simple be sample

வனி எப்புடீ இப்படில்லாம் .. கண்டுப்பிடிச்சுட்டீங்களா... ஹி ஹி ஹி ..ரொம்ப தான்க்ஸ்..;)

Be simple be sample

உமா நீங்களுமா...உங்களுக்கும் ரொம்ப தான்க்ஸ்ப்பா..

Be simple be sample

கனி மிக்க நன்றிபா..

Be simple be sample

ரொம்ப ரொம்ப அருமைங் :-P

நட்புடன்
குணா

அருமையா இருக்கு ரேவ்ஸ்.. நானும் சீக்கிரமாவே ட்ரை பண்ணுறேன்..

"எல்லாம் நன்மைக்கே"

நன்றி தம்பிங்..ஆனா காலைல 4.44மணிக்கு பதிவு அவ்வ்ளோ சீக்கிரம் எழுந்துக்குறிங்களா...

Be simple be sample

ஹாய் பாக்யா செல்லம்..சீக்கிரம் செய்துட்டு சொல்லுமா.. தான்க்ஸ் packia

Be simple be sample

Hi Nan Oru Paiyan Inga Na Varalama Varakudatha nu Theriyala Inga Aangal Irukalama ?

Namma Ellorum Saagurathukaga Tha Poranthirukom So Enjoy Every Sec

Inga Aangal Varalama ? Varakudatha Solluga Pls . Varakudathuna Na Account Deactive Panren

Namma Ellorum Saagurathukaga Tha Poranthirukom So Enjoy Every Sec

Inga Yarum Enkuda Pesamatagala ? Pls Solluga

Namma Ellorum Saagurathukaga Tha Poranthirukom So Enjoy Every Sec

parkave nalla irukku,but adu varuthakadala paruppa alladu,pachakadala paruppanu doubt ennaku

தான்க்ஸ் இந்திரா..சாதரண கடலைபருப்பு தான்..ஊற வைத்து அரைக்கனும்

Be simple be sample

வடை கறி பார்க்க ரொம்ப நல்லா இருக்கு இதை எதனோடு சாப்பிடலாம் சாதத்தோடு சாபிடலமா?

ஹாய் ரேவதி,

இட்லி, தோசைக்கு வடை கறி ஒரு சூப்பர் காம்பினேஷன்... எனக்கும் வடை கறி செய்து பார்க்கனும்னு ரொம்ப நாலா நினைச்சிட்டு இருக்கேன்... ப்ராப்பரா செட்டில் ஆன பிறகு உங்கள் குறிப்பை செய்து பார்க்கிரேன்...

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நஸ்ரீன் இது இட்லி ,தோசைக்கு நல்லா இருக்கும்.. தான்க்ஸ் நஸ்ரீன்..

பிரேமா சீக்கிரம் செய்து சொல்லுங்க.தான்க்ஸ் பிரேம்..

Be simple be sample

வடை கறி செய்தாச்சு இப்பபோதான் தோசையுடன் சாப்பிட்டு வரேன் ரொம்ப அருமையா இருந்தது என் கணவருக்கு ரொம்ப பிடித்து இருக்கு மிக்க நன்றி

Thanku pa saithu parthutu sonnathuku

Be simple be sample