தேதி: August 22, 2013
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிறு பயறு (பாசிப்பருப்பு) - அரை கப்
வெல்லம் - 50 கிராம்
கெட்டித் தேங்காய் பால் - முக்கால் கப் + இரண்டாம் பால் ஒன்றரை கப்
தேங்காய் (சிறு பற்களாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3
முந்திரி, கிஸ்மிஸ் - தேவையான அளவு
வாணலியில் அரை தேக்கரண்டி நெய் ஊற்றி சிறு பயறை சிவக்க வறுக்கவும்.

வறுத்த பயறை தண்ணீரில் களைந்து ஒரு கப் இரண்டாம் பால் கலந்து குக்கரில் வைத்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

வடிகட்டிய வெல்லத்துடன் வேக வைத்த பயறு, ஒரு மேசைக்கரண்டி நெய், மீதமுள்ள இரண்டாம் பால் சேர்த்து கிளறவும்.

மிதமான தீயில் வைத்து ஓரளவு கெட்டியாகும் வரை இடையிடையே கிளறிக் கொண்டிருக்கவும்.

பொடித்த ஏலக்காய், கெட்டித் தேங்காய் பால் சேர்த்து கிளறி, ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

மீதமுள்ள நெய்யில் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சிவக்க வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். முந்திரி மற்றும் கிஸ்மிஸையும் அதே நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்த்து கிளறவும்.

சுவையான சிறு பயிறு பாயசம் தயார்.

இந்த பாயசத்திற்கு சுவை கூட்டுவதே நெய்யில் வறுத்த தேங்காய் பற்கள்தான். குமரி மாவட்ட திருமண விருந்துகளில் இந்த பாயசம் கண்டிப்பாக இடம்பெறும். இலையில் ஊற்றினால் தண்ணீராக ஓடவும் கூடாது. பொங்கல் போல கெட்டியாகவும் இருக்கக் கூடாது. சரியான பதத்தில் இருக்க வேண்டியது அவசியம். பாயசம் ஆறும் போது சற்று கெட்டியாகும். அதிகம் கெட்டியாகி விட்டால் காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
kavi akka
அக்கா பாயாசம் சூப்பரா இருக்கு பார்க்கவே அக்கா .. கடசி படம் அழகோ அழகு....
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
கவி அக்கா
பாயாசம் சூப்பர் நிச்சயம் செய்து பார்கிறேன்..
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
கவி,
கவி,பாயாசம் எங்க ஊரை ஞாபகபடுத்திட்டீங்க,கூடிய விரைவில் செய்கிறேன்
அன்புடன்,
சுபா
வாழ்க வளமுடன்.
நன்றி டீம்
எங்க ஊர் பாயசம் வெளிவந்திடுச்சா.... :). நன்றி டீம்!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கனி
நன்றி கனி! பார்த்துட்டே இருக்காம சீக்கிரம் செய்துடுங்க :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஃபரீதா
நன்றி ஃபரீதா!
ரொம்ப நாள் கழித்து அறுசுவைக்கு வந்திருக்கீங்க. நலம்தானே!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
மேரிசுபா
நன்றி மேரி சுபா! நீங்களும் குமரி மாவட்டம்தானா. சந்தோஷம் பா :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
kavi akka
பாயாசம் சூப்பரா இருக்கு அக்கா.... சீக்கிரம் செய்துடுறேன்.
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.
அன்புடன்
உமா
Hi
Thank u.Ssupera iruku.saptanum pola iruku.
சிறு பயறு பாயாசம்
சூப்பர்... நானும் இதே போல தான் செய்வேன் கவி...
வாழ்த்துக்கள்.
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
கவிசிவா
இன்று உங்களுடைய இந்த சிறுபயறு பாயாசம் செய்தேன். மிகவும் அருமை. ''இந்த பாயசத்திற்கு சுவை கூட்டுவதே நெய்யில் வறுத்த தேங்காய் பற்கள்தான்" உண்மையே இதன் சுவைக்காகவே மீண்டும் ஒருமுறை செய்ய வேண்டும். நன்றி