கம்பு தோசை

தேதி: August 24, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (7 votes)

 

கம்பு - 2 கப்
இட்லி அரிசி - ஒரு கப்
உளுந்து - கால் கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2 (அ) 4
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு


 

கம்புடன் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து களைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறியதும் அரைக்கவும். பாதி மசிந்ததும் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து எடுத்து, மாவை 5 மணி நேரம் புளிக்கவிடவும்.
பிறகு தோசைக் கல்லை சூடாக்கி மாவை தோசையாக வார்த்தெடுக்கவும்.
சுவையான, சத்தான கம்பு தோசை தயார். அனைத்து வகையான சட்னியும் இதற்கு ஏற்றதாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா,பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு,இது அப்படியே எனக்கு தான்,
இந்த மாவுல இட்லி சாப்டா வருமா அக்கா,நான் கண்டிப்பா,நாளைக்கு டிரய் பன்னிட்டு சொல்றேன்,அக்கா

Thanks. Kalai tiffenku satthana food.

தோசை அருமை ரேவ்ஸ்.... ஹெல்தியான ரெசிபி கொடுத்துருகீங்க. நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பை உடனுக்குடன் வெளியிட்ட அட்மின்.அண்ணா &குழுவினர்க்கு நன்றி.

Be simple be sample

இந்த கம்பு தோசை குறிப்பை குடுத்த தனாகுமார்க்கு நன்றி..

.

Be simple be sample

ஈஸ்வரி நான் இட்லி சuட்டேன் .சாஃப்ட்டாகதான் வந்தது..நீங்க தோசையே சுடுங்கபா.. ந்ல்லா அரைக்கும் போதே மணமா இருக்கும்.. சீக்கிரம் டிரை பண்ணுங்க.thankspa

Be simple be sample

ஆமாபா .நன்றி jannathj

Be simple be sample

ஆமா உமா ..ந்ல்லா வாசனையாவும் இருக்கு..தான்க்ஸ்பா..

Be simple be sample

Hi revs good recipe.. Apk ponathum kandippa seiven.. Give more healthy recipes.. Keep it :)

"எல்லாம் நன்மைக்கே"

கம்பு தோசை ரொம்ப நல்லா இருக்கு அக்கா சூப்பர்.....

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ம்ம்ம்ம் பாக்யா செய்து பார்க்க லிஸ்ட்டு ஏறினு போகுது... ம்ம் சீக்கிரம் ..தான்க்ஸ் செல்லம்..

தான்க்ஸ் கனி.. :)

Be simple be sample

nan eppavum pola dosa maavu araithen.aanal intha murai en kanavar than idli rice vangivanthar.rice sari illai endru ninaikiren.dosai oothinen aanal athu nanraga illai.dosayin ulla etho gum pola ullathu.paniyaramagavum seithu paarthen athe mathri than iruku.innum niraya maavu ullathu enna panrathunu onnum puriyala pls idea kodunglen tholigale

ரேவதி கம்பு நல்லா இருந்துச்சு காலையில சாப்பிட்டோம் புதினா சட்னியோட ரொம்ப பிடிச்சுது எங்களுக்கு

தேவி. ரொம்ப சந்தோஷமா இருக்குபா
செய்து பார்த்துட்டு சொன்னதுக்கு.. தான்க்ஸ் தேவி

Be simple be sample

Thks mam.. Senju pathudo sollaran...

மிகவும் அருமையாக உள்ளது