தளகுளி (Thalaguli)

தேதி: September 2, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (11 votes)

சிங்களவர் மத்தியில் மிகவும் பிரபலமான இனிப்பு இது. பெரிய மர உரலில் முழு எள்ளையும் கொட்டி நன்கு எண்ணெய் பிறக்கும் வரை குற்றி, சர்க்கரையையும் சேர்த்துக் குற்றி தளகுளி பிடிப்பதுதான் வழக்கம். வெளிநாட்டு சமையலறையில் இது சாத்தியமில்லை. சிறிய மேசை உரலில் எண்ணெய் பிறக்கக் குற்ற இயலாது. முழு எள்ளையும் ஒரே தடவையில் இடிப்பதும் இயலாது.

தளகுளி தயாரிப்பில் சர்க்கரையைக் கரைப்பது வடிப்பது எல்லாம் கிடையாது. அதனால் வாங்கும் போதே சுத்தமான சர்க்கரையாகப் பார்த்து வாங்குவது முக்கியம். (சர்க்கரையை முன்பே உடைத்து வைக்கவும்) .அதே அளவு முக்கியம் அழகாக வெள்ளை டிஷ்யூ தாளில் சுற்றி வைப்பது.

 

சுத்தமான வெள்ளை எள்ளு - 3 1/2 கோப்பை
கித்துள் சர்க்கரை - 500 கிராம்
சுற்றுவதற்கு:
பார்சல் பேப்பர் (இது Shopping Bag Paper போல இருக்கும்)
பேக்கிங் ஷீட்
வெள்ளை டிஷ்யூ


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
கடதாசிகளை முன்பே அளவிற்கு வெட்டி வைக்கவும். பேக்கிங் பேப்பர் தளகுளியின் நீளத்திற்கு முழுவதாகச் சுற்றுகிற அளவில் இருக்க வேண்டும். பார்சல் பேப்பர் அதைவிடப் பெரிதாக இருக்க வேண்டும். டிஷ்யூ தாள் இன்னும் பெரிதாக வெட்டவேண்டும். இரண்டு ஓரங்களிலும் ஒன்றரை அல்லது இரண்டு சென்டிமீட்டர் அளவுக்கு குஞ்சம் வெட்ட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட அளவில் பாதி அளவு எள்ளை ப்ராசெசரில் போட்டு நன்கு சுற்றி எடுக்கவும். மீதியை ஒன்றும் பாதியுமாக வருமாறு சுற்றி எடுத்து அனைத்தையும் வேறு பாத்திரத்தில் சேகரிக்கவும்.
உடைத்து வைத்துள்ள சர்க்கரையை அதே ப்ராசெசரில் போட்டு பெரிதும் சிறிதுமாக வருமாறு சுற்றி எடுக்கவும். (அதிலிருந்து இரண்டு தேக்கரண்டி அளவு தனியாக எடுத்து வைக்கவும்).
சர்க்கரையை அரைத்த எள்ளுடன் சேர்த்து முட்கரண்டியால் நன்கு உதிர்த்துக் கிளறவும்.
இனி மூன்று அல்லது நான்கு பென்சில்கள் பருமனில் மூன்று சென்டிமீட்டர் நீளத்திற்கு உருளை வடிவில் பிடிக்க வேண்டும். பிடிப்பது பொறுமையைச் சோதிக்கும் வேலை. பிளாஸ்டிக்கினாலான சிறிய வெற்று மாத்திரை டப்பா ஒன்றை அடிப்பக்கம் அளவுக்கு வெட்டி நீக்கிவிட்டு, கழுவித் துடைத்து வைத்தால் அச்சாகப் பயன்படுத்தலாம்.
கலந்து வைத்துள்ளதிலிருந்து ஒரு கோப்பை அளவு எடுத்து, பத்து அல்லது பதினைந்து விநாடிகள் மைக்ரோவேவில் வைத்து எடுக்கவும். பாத்திரத்தின் அடியிலுள்ள சர்க்கரை இளக ஆரம்பித்திருக்கும். சிறிய கரண்டியால் ஒரு முறை கிளறிவிட்டு, வெட்டி வைத்த டப்பாவின் உள்ளே நிரப்பி இறுக்கி இரு பக்கமும் மேசையில் அழுத்தித் தேய்க்கவும். பின்பு விரலால் தள்ளினால் தளகுளி அமைப்பாக வரும். முழுக் கலவையையும் இப்படிப் பிடித்து வைக்கவும். கடைசி இரண்டு மூன்றுக்கு எள்ளு அதிகமாக இருக்கும். பிடிக்க வராது. இந்தச் சமயம் எடுத்து வைத்திருக்கும் மீதிச் சர்க்கரையைச் சேர்த்துக் கலந்து பிடிக்கலாம்.
இனி ஒவ்வொன்றாக பார்சல் பேப்பரில் சுற்றி, அதன் மேல் பேக்கிங் பேப்பர் சுற்றவும்.
வெளியே டிஷ்யூ சுற்றி ஓரங்களை முறுக்க வேண்டும்.
தளகுளியில் எள்ளு முழுவதாகக் கடிபடும். சர்க்கரையும் கட்டியாகக் கடிபட்டால்தான் சுவை.

மேலே குறிப்பிட்ட அளவுக்கு, பிடிக்கும் அளவைப் பொறுத்து அறுபது முதல் எழுபது தளகுளி வரை கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இமாம்மா பேர் பார்த்ததும் ரொம்ப வித்யாசமான ரெசிபியோ நு நினச்சேன்... ஆனா பாட்டிம்மா இதே பொருட்க்கள் வைத்து கொஞ்சம் வித்யாசமா செய்வாங்க சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி வெல்லம் சேர்த்து கடசி ப்ளேட் அந்த பேப்பர்ஸ் ல சுத்தி இருக்குறது பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேடம் சூப்பர். எனக்கு ரொம்ப பிடிச்ச சுவீட். சீக்கிரம் ட்ரை பண்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அட..இது எங்கூர்ல எள்ளுருண்டை! :) வெல்லமும் எள்ளும் இதேமாதிரியே அரைச்சு, உருண்டையா பிடிச்சுருவோம்.

சாக்லேட் ஷேப்ல செய்து, அழகா கவர் போட்டு, குஞ்சம் கட்டி..க்யூட்டா இருக்கு இமா! :)

அன்புடன்,
மகி

//கொஞ்சம் வித்யாசமா செய்வாங்க// வறுப்பாங்களா கனி? //பேப்பர்ஸ் ல சுத்தி இருக்குறது// அப்படித்தான் இருக்கும் தளகுளி. கருத்துக்கு நன்றி.

மேடம்லாம் வேணாம். :-) ரொம்ப நன்றி உமா.

//எள்ளுருண்டை!// நீங்களும் எள்ளு வறுப்பீங்க இல்ல! அதுவும் சாப்பிட்டு இருக்கிறேன். பிடிக்கும். இது பச்சை எள்ளு. //சாக்லேட் ஷேப்ல செய்து, அழகா கவர் போட்டு, குஞ்சம் கட்டி..க்யூட்டா இருக்கு// ;) ஆமாம், தளகுளி எப்பவும் க்யூட்டாவே இருக்கும் மகி. இது... ஜீனோவுக்கும் பிடிக்கும். ;)))

‍- இமா க்றிஸ்

பேரைப் பார்த்து என்னவா இருக்கும்னு உள்ளே வந்தேன். எங்க ஊர் எள்ளுருண்டை :). கறுப்பு எள்ளை கருப்பட்டி சேர்த்து இடித்து உருண்டை பிடிப்போம். எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்போ உரலில் இடிப்பது எல்லாம் இல்லை. மிக்சியில் போட்டு ஒரு சுற்று அம்புட்டுதான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவீஸ்... ;)) தலைப்பைப் பார்த்து சிரிச்சுட்டேன். ;) தாங்ஸ். ;)

‍- இமா க்றிஸ்

சூப்பர் :) இலங்கை ட்ரிப் நினைவு வருது. கிதுல் இருக்கு... செய்துருவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//கிதுல் இருக்கு... செய்துருவோம்.// ;) என்ஜாய் வனி. :-)

எல்லோரும் கமண்ட் போட்டிருக்கிற மாதிரி.. எள்ளுருண்டை தான் இது. ;)) thala - எள்ளு, guli - (குளிகை போல இருக்குல்ல சொல்ல) உருண்டை. முதலில் குறிப்பில் தட்டி இருந்தேன். சேவ் பண்றதா நானே ட்ராஃப்ட்டை டிலீட் பண்ணிட்டேன். திரும்பத் தட்டும் போது சொல்ல மறந்து போச்சு. ;))

‍- இமா க்றிஸ்

கித்துள் சர்க்கரை என்பது பனங்கற்கண்டா அல்லது கருப்பட்டியா அல்லது வேறா.

அன்புடன்
ஜெயா

//பனங்கற்கண்டா// 'கற்கண்டு' பளிங்கு அல்லவா!! பனை!! ம்.. ஆனால் நீங்கள் நினைக்கும் பனை அல்ல இது.

//கருப்பட்டியா// ;) எதை நினைத்துக் கேட்கிறீர்கள் என்பது சந்தேகமாக இருக்கிறது ஜெயா. ;)

'கருப்பட்டி' - அடிப்படையில் கருப்பஞ்சாற்றிலிருந்து பெறப்பட்டதால் வந்த சொல்லாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். சரியாகத் தெரியவில்லை.

பனங்கருப்பட்டி - பனம்பொருள். தென்னங்கருப்பட்டி - தெங்கிலிருந்து கிடைப்பது. கித்துள் சர்க்கரை / கித்துள் கருப்பட்டி - கித்துள் பனையிலிருந்து கிடைப்பது. சில வருடங்கள் முன்பு அறுசுவையில் கித்துள் பற்றி எங்கோ பேசினோம். இலங்கையில் கித்துள் எனும் பெயரைத்தான் தமிழரும் பயன்படுத்துகிறோம்.

இந்த மரத்தின் தமிழ்ப் பெயர் உலத்தி / கூந்தற்பனை. கமுகு போலிருக்கும் இந்த மரத்தை விழாக்களின் போது அலங்காரமாகக் கட்டி வைப்பார்கள்.

‍- இமா க்றிஸ்

நான் இந்த‌ வார்த்தையை (கித்துள்) கேள்விபட்டதேயில்லை (அறுசுவை தவிர்த்து). அதனால்தான் இப்படி கேட்டுவிட்டேன். மன்னிக்கவும்.

எனக்கு 1. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சீனி, சர்க்கரை (வெல்லம்), கற்கண்டு
2. பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு
இவைதான் தெரியும்.

இப்பொழுது உங்கள் விளக்கத்திலிருந்து தெரிந்துகொண்டேன். நன்றி! நன்றி! எங்கள் ஊரில் உலத்தி பனை நிறைய‌ உண்டு. எல்லா விசேஷங்களுக்கும் வாசல்களில் உலத்தி குலையை அலங்காரத்திற்கு பயன்படுத்துவர். ஆனாலும் அதிலிருந்து சர்க்கரை (கித்துள்) எடுப்பது தெரியாது. "தென்னங்கருப்பட்டி - தெங்கிலிருந்து கிடைப்பது" இதுவும் பார்த்ததில்லை\கேள்விபடவில்லை.

அன்புடன்
ஜெயா

ப்ராசெசரில் (அப்டீன்னா என்ன ??மிக்சில செய்யலாமா )

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

:-) போடலாம். ரெண்டு பேரும் ஒரே உபகரணத்தைப் பற்றித்தான் பேசுறோம் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ஜெயா வின்சன்ட்

//உலத்தி குலையை அலங்காரத்திற்கு பயன்படுத்துவர்.// ஆமாம்.
அது விரியும் முன் பாளையாக இருக்கும் போது நுனியில் கொத்தி விட்டு பானையைக் கட்டுவார்கள். பானை உள்ளே சுண்ணாம்பு பூசி இருக்கும். பனையில் கள்ளுப்பானை கட்டுவது போலவேதான். இப்படியேதான் தெங்கிலிருந்தும் பதநீர் இறக்குவது. பிறகு பதநீரைக் காய்ச்சி மத்தால் கடைவார்கள். ஒரு காலம் இலங்கையில் சீனிக்குப் பஞ்சம் ஏற்பட்டிருந்த சமயம் எங்கள் பெரியம்மா இப்படி தென்னையிலிருந்து சர்க்கரை செய்து பார்த்திருக்கிறேன். இங்கும் உலத்தி இருக்கிறது - தாவரவியற் பூங்காவில் மட்டும். :-)

‍- இமா க்றிஸ்

என்னாது தளகுளியா? அப்பிடின்னு யோசிச்சா அட இதுவா அதுன்னு ஆயிடிச்சு. சூப்பர் போங்க .. என்ன அழகா செய்து இருக்கீங்க? இதெல்லாம் நம்மால ட்ரய் கூட பண்ண முடியாது. உங்கள மாதிரி எக்ஸ்பேர்ட் ஆக்களால மட்டும் தான் முடியும். ;)