இது கர்ப்பத்துக்கான அறிகுறியா?? சொல்லுங்க நண்பிகளே!

வணக்கம்! இது எனது முதல் பதிவு இங்கே!

நான் குழந்தைப் பாக்கியத்துக்காக காத்திருக்கின்றேன் நண்பிகளே! இன்று காலையில் இருந்து இதய துடிப்பு மிக வேகமாக இருக்கின்றது. ஏன் என்று தெரியவில்லை. இது கர்ப்பத்துக்கான அறிகுறிகளில் ஒன்றா ? தெரிந்தவர்கள் கூறுங்களேன் தோழிகளே!

doctor kitta check pannunga,enakkum apdi irunthathu doctors enakku harmons problem nu solranga

Yes.Doctor kitta check panradudan better.Sometimes,anaemic-a irundalum heart beat adigama irukum.

தேங்க்ஸ்பா,
டாக்டர்கிட்ட செக் பண்ணி பார்த்திட்டேன். ரத்த பரிசோதனையும் செஞ்சு பார்த்தாச்சு, ஏதும் பிரச்சினை இல்லேன்னு சொல்லிட்டாங்க. குழந்தைக்கு எதிர்பார்க்கிறதால எல்லாம் கர்ப்பத்துக்கான அறிகுறிகள் போலவே தோணுது. 
போன 30 இல இருந்து இன்னைக்கு வரைக்கும் என் Firtility Day ( Last Period Starting 19th August சிதுல நாங்க பல முறை Contact பண்ணிக்கிட்டோம். இப்ப ரொம்ப Nervous ஆ இருக்கு. இந்த முறை வெற்றி கிடைக்கணும்னு. போன முறையும் தவறிப்போச்சு. அதான், இப்ப எல்லாம் எந்த ஒரு மாற்றமும் கர்ப்பமோ என எண்ண வைக்குதுப்பா!
இப்ப கடைசி 2 நாளா மார்பு காம்புகள் ரொம்ப வலியா இருந்துச்சு ( இன்னைக்கு கொஞ்சம் பரவா இல்லை. ) இதுவும் கர்ப்பத்துக்கான அறிகுறியோ என ஒரே அங்கலாய்ப்பா இருக்கு.
நான் எப்ப டெஸ்ட் பண்ணலாம்னு சொல்லுங்களேன்?

நம்பிக்கையோடு இருங்கள். சிறிதளவும் கிடைக்குமா என்ற சந்தேகம் வேண்டாம். நம்பி இறைவனிடம் வேண்டுங்கள். மார்பக வலியும் கர்ப்ப அறிகுறிகளில் ஒன்று தான் பா. கவலைப்படாதீர்கள் தினமும் இதையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.மகிழ்ச்சியாக இருங்கள். உங்களுக்கு ரெகுலர் பீரியட் என்றால் செப்டம்பர் 22 க்கு பிறகு டெஸ்டு பண்ணிப்பாருங்கள்.....

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

ரொம்ப நன்றிப்பா!
இன்னும் மார்பு வலி போகல்ல, ஆனா கொஞ்சம் குறைந்த மாதிரி தோணுது. நேற்றில இருந்து பீரியட் டைம்ல வலிக்கிற மாதிரி அடி வயிறு விட்டு விட்டு வலிக்க ஆரம்பிச்சிருக்கு. ஆச்சுவலா என் பீரியட் டேட் 19 செப்டம்பர். இம்முறை முன்ன வரப்போகுதோ ன்னு பயமாவும் இருக்கு, மத்த பக்கம் இது கர்ப்பத்துக்கான அறிகுறியோ ன்னு சந்தேகமாவும் இருக்கு.
கர்ப்பமாக இருக்கணும்னு பிரார்த்திக்கிறேன்! எனக்காக பிரார்த்திங்க தோழிகளே! பிளீஸ்

தோழிகளே! நான் அமீரகத்தில் இருக்கேன். இங்கு எனது பிரச்சினைகளை சொல்ல யாரும் இல்லை. உங்களைத்தான் நம்பி இருக்கேன். பிளீஸ் சொல்லுங்கப்பா!

இன்னும் எனக்கு மார்பு வலி போகல்ல! முன்ன சொன்ன மாதிரி அடிவயிறு விட்டு விட்டு வலிக்கிற மாதிரியே ஒருக்கு. அதோட இப்ப ரெண்டு நாளா வெள்ளையா ஒரு திரவம் படிஞிச்க்கிட்டே இருக்கு. தாங்க முடியாத அரிப்பும்பா! இதெல்லாம் கர்ப்பத்துக்கான அறிகுறியா? இல்ல என் பீரியட் வரப்போகுதா? ரொம்ப நெர்வசா இருக்கு!

யாராவது ஆறுதல் சொல்லுங்க பிளீஸ்!

payapadathinga nallathe nadakkum....

Enaku period vanthu inayoda 19 days aguthu.neathu mg oru 5.maniku vairu idupodu valithathu.valithanga mudila..aparam k0nja nerathla saryapochu.inaiku ore thalavali.and odampu pain jastiya rku.thalavali inum vidala.ithu karpathin arikuriya ..enaku mandaikul kulapamapa irukirathu .pz help me.

Kalam pon ponrathu

hi frnds na arusuvai.com ku pudusu. enaku periods 5 nal thalli poiruku . breast romba valikudu . thala vali koda iruku .periods vara mari irukku. idu pregnancy symtoms a. plz yaravadu sollunga.

ஹாய் தோழீஸ்,
எனக்கு நவம்பர் 25 பீரியட் ஆனது, இன்று 24 நாள் ஆகுது,2,3 நாட்களாக‌ எனக்கு மார்பகம் தொட்டாலே வலிக்குது,வழக்கத்தைவிட‌ பெரியதாக‌ இருப்பது போல் உள்ளது,திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது ,இன்னும் குழந்தை இல்லை,இது மாதிரி வலி எனக்கு இருந்தது இல்லை.
இது மாதிரி வலி இருந்தால் கர்பம் ஆக‌ இருப்பாங்க‌ என்று சொல்லுவாங்க‌ ,
யாருக்காவது இது மாதிரி இருந்து கர்பம் ஆகி இருக்கீங்களா தோழீஸ்
எனக்கு 28 நாள் சுழற்ச்சி.

மேலும் சில பதிவுகள்