ஓர் அருமையான மசாலா குருமா

உருளைகிழங்கு - 2 பச்சைபட்டாணி -கைபிடிஅளவு தக்காளி - 2 பல்லாரி - 3 குடமிளகாய் -10 அண்டிபருப்பு - 10 ஊறவைத்தது பீன்ஸ் - 5
தேங்காய் எண்ணை-1 டம்ளர்(100ml) நெய் 1/4 கப்
அரைக்க - தேங்காய் - 1மூடி - இஞ்சி புண்டு விழுது 2 டீஸ்புன்
தாளிக்க - பெருஞ்சீரகம்-1 டீஸ்புன் கிராம்பு - 5 ஏலம் -10 பட்டை - சிறிதளவு

முதலில் பட்டாணியை ஊறவைத்த வேகவைத்து கொள்ளவும் உருளை கிழங்கையும் வேகவைத்து மசித்து கொள்ளவும் வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும் தேங்காய் துருவி ஊறவைத்த அண்டிபருப்பையும் சேர்த்து நைசாக அரைக்கவும் - குடமிளகாய் தக்காளி பீன்ஸ் நறுக்கி வைத்து கொள்ளவும்

செய்முறை - அடிகட்டியான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி அதில் குடமிளகாயை சிவக்க பொரித்து மாற்றவும் பின்பு அந்த எண்ணையில் தாளிக்க கொடுக்க பட்ட வற்றை இட்டு சிறிது நேரம் வதக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து (சீக்கிரம் வசங்க நெய் விடவும்) சிவக்க வசக்கவும் வதங்கும் பருவத்தில் நறுக்கிய தக்காளியை இடவும் தக்காளி வதங்க சிறதளவு உப்பு சேர்க்கவும் நன்றாக வதங்கி வரும்போது இஞ்சி புண்டு பேஸ்ட் போடவும் சிறிது நேரம் அடிபிடிக்காமல் கிளறி விட்டபின் 2 ஸ்புன் வற்றல் மிளகாய் பொடி போடவும் அதன் பின் அரைத்து வைத்த தேங்காய் மற்றும் ஊருளைகிழங்கு பட்டாணி பீன்ஸ் வதக்கியமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தேவைக்கேற்ப நீர் விட்டு கொதிக்க விடவும் கொதி வந்ததும் சிறிது மஞ்சள் பொடி மற்றும் 4 ஸ்புன் மட்டன் மசாலா பொடி(சக்திமசாலா) சிறிது காயபொடி போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கட்டியான பருவத்தில் இறக்கவும்

இந்த குருமா சாதம் தவிர சப்பாத்தி - முறுவல்தோசை - பரோட்டா - புட்டு - ஆப்பம் -இடியாப்பம் போன்றவைகளுக்கு அருமையான சுவையானதாக இருக்கும்

மேலும் சில பதிவுகள்